Wednesday, August 11, 2010

குரு சொன்னது என்ன?

ஒரு குரு தம் சீடர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்

‘கனமழை பெய்யும் சமயம் இருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்’
‘அதில் ஒருவர் மட்டும் மழையில் நனையவில்லை
‘இது ஏன் என்று குரு வினவினார்

சீடர்கள் பலவாறு தம் கற்பனைகளை விடையாக கூறினர்

ஒரு வேளை ஒருவன் குடை கொண்டு சென்றிருக்கலாம்

ஒரு வேளை ஒருவன் சாலையோரமாக் உள்ள நிழற்குடையில் நடந்து சென்றிருக்கலாம்
பலவாறு விடைகள் வந்தன
எதுவும் குருவை திருப்திப்படுத்தவில்லை

நீங்கள் அனைவரும் வெறும் வார்த்தைகளைக் கேட்டு விடை மொழிகிறீர்கள்

ஒருவரும் சரியான விடை கூறபோவதில்லை என்றார்.
சீடர்கள் யாரும் சரியான பதில் கூறவில்லை.

சரி
சரியான விடை என்னவாக இருக்கும்????

அதன் மூலம் குரு என்ன உணர்த்த விரும்பினார்?

குரு சொன்னது என்ன?
‘கனமழை பெய்யும் சமயம் இருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்‘ அதில் ஒருவர் மட்டும் மழையில் நனையவில்லை

விடை: ஒருவர் மட்டும் நனையவில்லை, இருவருமே நனைந்தனர் என்பது தான் விடை.
வெறும் வார்த்தையை மட்டும் வைத்துப் பார்த்தால் ஒருவர் நனையவில்லை மற்றவர் நனைந்தார் என்று பொருள் கொள்வோம். அதன் உட்பொருள் அறிந்தால் விடை விளங்கும்.

No comments: