Wednesday, August 25, 2010

வங்கி (bank chennai)



வங்கி (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.

Ambulance- old


Ambulance- old

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்


சென்னை எழும்பூர் ரயில் நிலையம்
இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாக திகழ்கின்றது.
வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களும், சென்னையின் தெற்குப்புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை எழும்பூரிலிருந்து செயல்படுகின்றன. தமிழ்நாட்டின் தெற்கு பகுதிகளுக்கு ரயில்கள் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்- 1925


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்-1925
இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாக திகழ்கின்றது. இந்த ரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. சென்னை மாநகரில் ஓடும் பக்கிங்கம் கால்வாய் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாகச் செல்கின்றது.

Esplanade, George Town, Chennai- 1910


Esplanade, George Town, Chennai- 1910

Pycrofts Road- 1890


Pycrofts Road- 1890
'Bharathi Salai' would make most people blink. They do not know where it is. But its old name Pycrofts Road is easily recognised. This road is said to be the abode of Saraswati, the Goddess of Learning. Name any book and you can get it here. School or college books unavailable anywhere in India can be bought at the bookshops on Bharathi Salai. If by chance a book is not available, they can immediately offer an alternative book in its place.

4. பாரிமுனை


5. பாரிமுனை- 1890

பாரிமுனை சென்னை மாந‌க‌ரின் முக்கியமான‌ வ‌ர்த்தக‌/வ‌ணிக‌ மைய‌மாகும். பாரிமுனை வடச் சென்னையில் உள்ளது. சென்னையின் வ‌ட‌க்கு க‌டற்க‌ரை சாலையும் எந்.எஸ்.ஸி.போஸ் சாலையும் ச‌ந்திக்குமிட‌த்தில் அமைந்துள்ள‌து பாரிமுனை. சென்னைத் துறைமுக‌த்தின் அருகில் அமைந்துள்ள‌ இப்ப‌குதி, ஆங்கிலேய‌ வர்த்த‌க‌ரான‌ திரு. தாம‌ஸ் பாரி என்ப‌வ‌ருக்குப்பின் இப்பெய‌ர் பெற்ற‌து. இவர், 1787ல் இ.இ.டி.பாரி என்கின்ற‌ நிறுவ‌ன‌த்தை இவ்விட‌த்தில் துவ‌க்கினார். இன்றுமுள்ள‌ இந்நிறுவ‌ன‌த்தின் த‌லைமை அலுவலகம் பாரிமுனையில் இருக்கின்ற‌து. மேலும், பாரிமுனையில் ஏராள‌மான‌ ம‌ற்ற‌ நிறுவ‌ன‌த்தின் அலுவ‌லக‌ங்க‌ளும், க‌டைக‌ளும் உள்ள‌ன. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இப்பகுதியில் பழமை வாய்ந்த கட்டிடங்கள் நிறைய உள்ளன. சென்னை உய‌ர் நீதிம‌ன்ற‌ம் பாரிமுனையில் அமைந்துள்ள‌து. பாரிமுனையின் த‌பால் குறியீட்டு எண் 600001.

3. மயிலாப்பூர்- 1906


3. மயிலாப்பூர்- 1906

சென்னை மாநகரம் தோன்றுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மயிலாப்பூர் ஒரு கடலோர நகரமாகப் பெயர் பெற்றிருந்தது. தொலமியின் நூலில் இது மைலார்பொன் (Mylarphon) எனக் குறிப்பிடப்பட்டு, இது வளம் மிக்கதும் முக்கியத்துவம் கொண்டதுமானதுமான ஒரு இடம் எனக் கூறப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் இது ஒரு சிறப்புப் பெற்ற துறைமுகமாகவும் விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் போத்துக்கீசர் ஆதிக்கம் ஏற்பட்டபோது, இவ்விடத்தில் அவர்களுக்கான குடியேற்றம் ஒன்றை நிறுவ விரும்பினார்கள். இதனால், மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உள் நோக்கி இன்றைய இடத்துக்கு நகர்த்தினார்கள்.

சமணம்
தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் சமணம் எழுச்சியுற்று இருந்தபோது, மைலாப்பூரிலும் இச்சமயம் செழிப்புற்றிருந்தது. இப்போது சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறப்படுகின்றது. இங்கே நேமிநாத தீர்த்தங்கரரின் உருவம் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. மயிலையிலிருந்த இந்த நேமிநாதர் மீது திருநூற்றந்தாதி என்னும் நூலை அவிரோதியாழ்வார் என்பவர் இயற்றியுள்ளார். இது தவிர திருக்கலம்பகம், மயிலாப்பூர் பத்துப்பதிகம், மயிலாப்பூர் நேமிநாதசுவாமி பதிகம் என்பனவும் இப் பள்ளி தொடர்பில் எழுந்தவை ஆகும். இச் சமணக் கோயில் தொடர்பான தொல் பொருட்கள் பலவும் சாந்தோம் தேவாலயத்தை அண்டிய பகுதிகளில் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்து சமயம்
இப்பகுதியில் நீண்டகாலமாகவே இந்து சமயத்தின் சைவம் மற்றும் வைணவப் பிரிவுகள் சிறப்புற்று விளங்கின. பண்டைக்காலக் கரையோர மைலாப்பூரில் சிவனுக்குப் பெரிய கோயில் ஒன்று இருந்ததற்கான சான்றாக 1250 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று, இன்றைய கபாலீஸ்வரர் கோயிலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. போத்துக்கீசர் இக்கோயிலை அழித்துவிட்டனர். இன்றைய கபாலீஸ்வரர் கோயில் 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளை அண்டிக் கட்டப்பட்டதாகும்.

கிறிஸ்தவம்
இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான சென், தோமஸ் கி.பி 52 இல் கேரளாவுக்கு வந்து அங்கே சமயப் பணி செய்தபின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார் என்றும், கி.பி 72 ஆம் ஆண்டில் சென்னை அருகில் உள்ள சின்ன மலை (Little Mount) அருகே கொல்லப்பட்டார் எனவும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இவரது உடல் மயிலாப்பூருக்கு எடுத்துவரப்பட்டு, அங்கே அடக்கம் செய்யப்பட்டதாகவும் கருதப்படுகின்றது. இவ்விடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

அண்ணா சாலை- 1905


2. அண்ணா சாலை- 1905

மெரினா கடற்கரை


1. மெரினா கடற்கரை

Monday, August 23, 2010

குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டுமே!

தக்க வயதுக்கு முன்பே பள்ளியில் சேர்ப்பதால், நம் சின்னஞ்சிறு குழந்தைகளின் குழந்தைப் பருவம் எங்கோ காணாமல் போகிறது. இன்று அவர்கள் பந்து விளையாடுவது மண்ணில் வீடு கட்டுவது போன்றவற்றை விட்டு விட்டு கிளிகள் போல் பெரிய பெரிய நர்சரி ரைம்ஸ், பாடங்கள், கதைகள் போன்றவற்றை (அவற்றின் அர்த்தம் புரிந்தாலும் புரியாவிட்டாலும்) மனப்பாடம் செய்ய வேண்டியுள்ளது!

தங்கள் குழந்தைகள் ஆங்கில ரைம்ஸ் சொன்னால் பெற்றோருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்று அந்த பிள்ளைகளின் குழந்தைத்தனம் முடிந்து வருகிறது. அவர்கள் வயதுக்கு மிஞ்சிய புத்திசாலியாகிறார்கள்.

இதற்குக் காரணம் தக்க வயதுக்கு முன்பே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதுதான். தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தாய்மார்கள் 2-3 மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். எல்லாக் குழந்தைகளும் ஓடும்போது, ஏன் நம் குழந்தை மட்டும் பின்தங்க வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள்.

சில பள்ளிகளைத்தவிர பெரும்பாலான பள்ளிகள் பணம் சம்பாதிக்கும் வியாபார கூடங்களாக உள்ளன. அந்த பள்ளிகளில் உட்காருவதற்கு கூட சரியாக இடம் இல்லமல், அளவுக்கு அதிகமாக குழந்தைகளை சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த வயதில் குழந்தைகளுக்கு தேவையான படிப்பை நீங்களே விளையாட்டாக வீட்டிலேயே சொல்லித்தரலாம். நிச்சயமாக குழந்தைகள் அதை நன்றாகப் புரிந்து கொள்வார்கள்.

குழந்தைகளின் மனம் அழகானது. அவர்களை சரியான வயதுக்கு முன்பே கட்டுப்பாடுகளில் கட்டிப் போடாதீர்கள். அவர்கள் படிக்கும் பள்ளி 5-ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதி கொண்டதாக இருப்பினும், வீட்டின் சுதந்திரத்துக்கு ஈடு இணையில்லை. அவசரமாகக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து நாம் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடை போடுகிறோம். இதனால் குழந்தைகளுக்கு படிப்பின் மீது வெறுப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.

படிப்பதற்கு பல ஆண்டுகள் உள்ளன. ஆனால் குழந்தைப் பருவம் விரைவில் முடிந்துவிடும். குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டுமே!

உணர்ச்சி நீ கொள்வாய் தோழா!

வயலும் வயல் சார்ந்த இடமும்
பாவலர் வையவன்
தண்டலை மயில்கள் சாக
தாமரைக் குளங்கள் காய
கொண்டலும் பயிர்கள் வாழக்
கொடுத்தநீர் குறைந்து போக
வண்டிகள் சுமக்க வாரி
வழங்கிய வயல்கள் இன்று
அண்டிய உழவன் வீட்டு
அடுப்புபோல் காய்ந்த தம்மா!

கயலினம் சுமந்த ஓடை
கழிவுநீர் சுமக்க லாச்சு
வயல்களில் மேய்ந்த மாடு
வண்டியில் ஏற லாச்சு
கரைமரம் நிறைந்த ஏரி
கட்டிட மனைகள் ஆச்சு
உரைதிணை மருதம் இங்கு
உருத்தெரி யாமல் போச்சு!

நெற்களம் மட்டைப் பந்தின்
நேர்திடல் ஆன திங்கே
புற்களைச் சுமந்த பூமி
புதுப்புது நோய்க்குள் ளானாள்
சொற்களால் பெருமை யன்றி
சோகமே உழவன் சொத்து
தற்கொலை மூன்று போகம்
தவறாமல் விளையு தம்மா!

விலங்குகள் பறவை மற்றும்
விரிபுவி உயிர்கள் எல்லாம்
தொலைந்துதான் போன தன்றி
தோற்றது உழவர் வாழ்வும்
மலர்ந்திடும் அணு ஒப் பந்தம்
மாறிடும் நூறு ஆட்சி
உலர்ந்திடும் மருதம் கண்டு
உணர்ச்சி நீ கொள்வாய் தோழா!

தலைவனின் நடவடிக்கைகள் கிளீன் ஸ்லேட்டாக இருக்க வேண்டும்.

ஒரு நல்ல தலைவனுக்கு ஒரு நல்ல தீர்மானத்தை எடுத்து அதைச் செயல்படுத்த வேண்டிய மனோதைரியமும் துணிச்சலும் இருக்க வேண்டும் என்பது. இதற்கு நான் உதாரணம் காட்ட வேண்டும் என்றால் உடனடியாக என் நினைவுக்கு வருவது இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்தான்.

அவர் மட்டும் அன்று ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்தியிராவிட்டால் இன்று இந்தியா எத்தனையோ குட்டி குட்டி நாடுகளாக, சமஸ்தானங்களாகச் சிதறுண்டு போயிருக்கும். அவரை விமர்சித்தவர்களும் வாயடைத்துப் போனார்கள். இந்த டிஸிஷன் மேக்கிங் பண்பு ஒரு தலைவனுக்கு மிகவும் தேவையானது.

“தலைமைப் பண்பில் நேர்மையும் அறமும் தேவை.. ஒரு அமைப்புக்கு லாபம் என்பது குறிக்கோளாக இருக்கலாம், ஆனால் அது நேர்மையையும் அறத்தையும் விலை கொடுத்து வாங்குவதாக இருக்கக் கூடாது. அதே போல் ஒரு தலைவன் தன் பணிகளில் அறத்தைப் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டும்.

“ஒரு தலைவனின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.. இது இன்றைய காலகட்டத்துக்கு மிக முக்கியமான ஒன்று. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதை நாம் காண்கிறோம். பொது வாழ்க்கைக்கு மட்டுமின்றி ஒரு அமைப்புக்கு தலைவனாக இருப்பவனும் தன்னைப் பற்றிய நடவடிக்கைகளை வெளிப் படையாக வைத்திருக்க வேண்டும். அந்தத் தலைவனை உதாரணமாகக் கொண்டு தான் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வழிகாட்டுவது போல் அந்தத் தலைவனின் நடவடிக்கைகள் கிளீன் ஸ்லேட்டாக இருக்க வேண்டும்.

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்த வெளிப்படையான தன்மைக்கு ஒரு உதாரண புருஷர். அவர் மக்களுக்கு எதையுமே மறைத்ததில்லை. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விஷயங்களைக் கூட அவர் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக அறிவித்தார். அவருடைய ஆசிரமத்தில் எப்போதும் பஜன் நடக்கும். அதில் கலந்து கொள்பவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் காணிக்கை அளித்து விட்டுக் கலந்து கொள்ளலாம். அதில் வசூலாகும் தொகை நல்ல விஷயங்களுக்குச் செலவிடப்படும்.

தினமும் அந்த வசூலில் சேரும் ஒரு ரூபாய்கள் மொத்தமாக கணக்கிடப்படும். ஒருநாள் அந்தக் கணக்கில் சிறு தவறு நேர்ந்து விட்டது. சிறு தவறு தான். அதாவது ஒரே ஒரு ரூபாய் கணக்கு இடித்தது. மகாத்மா காந்தி கடுங்கோபம் கொண்டு விட்டார். அந்த ஒரு ரூபாய்க்கு சரியான கணக்கு வரும்வரை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லி உண்ணாவிரததத்தில் இறங்கி விட்டார்.

மூன்று நாட்கள் அந்த உண்ணாவிரதம் நீடித்தது. பிறகு அந்த ஒரு ரூபாய்க்கான கணக்கு சரியாகக் காட்டப்பட... உண்ணா விரதம் ஒரு முடிவுக்கு வந்தது. ஒரு ரூபாயாக இருந்தாலும் பொது மக்களுக்கு அந்தக் கணக்கு சரியாகத் தெரியவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அந்த தேசப்பிதா.

வேலை செய்வதிலும் செய்து முடிப்பதில் ஒரு தலைவனுக்கு நம்பகத்தன்மையும் ஒற்றுமையுணர்வும் வேண்டும். நான் இந்தக் கருத்தைப் பல மீட்டிங்குகளில் சொல்வதுண்டு. இதை ஒப்புக் கொள்பவர்கள் கை தூக்குங்கள் என்று சொல்வேன். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் போன்றவர்கள் கை உயர்த்துவார்கள். ஆனால் பெரியவர்கள் கை உயர்த்த மாட்டார்கள். சமீபத்தில் நான் பள்ளி சென்றிருந்த போது இதே கேள்வியைக் கேட்டு கையை உயர்த்தச் சொன்னேன். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒருவர் கூட கை தூக்கவில்லை. ஆனால் இந்தத் தகுதியை ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதியாக நான் கருதுகிறேன்.

இந்த எட்டு அடிப்படை தகுதிகளுடன் ஒரு தலைவன் உருவாகும் போது, அது எந்தக் கட்சியில் அல்லது அமைப்பில் இருந்தாலும் சரி, அந்த தலைவனால் பெரிய மாற்றங்கள் உருவாகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த எல்லா அடிப்படைத் தகுதி களையும் ஒரே வார்த்தையில் அடக்குவதைத்தான் நான் “கிரியேட்டிவ் லீடர்ஷிப் என்று குறிப்பிட்டேன்.

இளைஞர்களிடம்தான் இந்த படைப்பாற்றல் மிக்க தலைமை இருக்கப் போகிறது. இது இளைஞர்கள் காலம். முழுமூச்சுடன் அவர்கள் பணியாற்றப் போகும் காலம். இந்த நாட்டில் உள்ள 540 மில்லியன் இளைஞர்களின் பொறுப்பில்தான் தேசத்தின் எதிர்காலமே இருக்கிறது. அவர்கள் சரியான நேரத்தில் சரியான வேலையைச் செய்ய வேண்டுமே தவிர, தேவையற்ற வேலைகளில் கவனத்தைச் சிதற விடக்கூடாது.

Saturday, August 14, 2010

Be proud to be............ I...N...D...A....N........

Happy Independence Day

bhagat-singh1.gif

NEVER FORGET THE HEROS
WHO SACRIFIED THEIR LIFES
TO BRING UP THIS GLORIOUS DAY TO india..

http://media1.santabanta.com/full1/Miscellaneous/Independence%20Day/ind27v.jpg

http://www.deviantart.com/download/133324276/India_Independence_Day_by_radibioinfo.jpg

http://www.sumitgoyal.com/wp-content/uploads/2008/08/independence-day-greetings.jpg

http://fullfx.antzfx.com/wp-content/uploads/2009/08/11antzFx_Jai_Ho2009.jpg

31 states,
7 union territories,
1618 languages,
6400 castes,
6 religion,
6 ethnic groups,
29 major festivals,
1 country!

Be proud to be an Indian!

HAPPY INDEPENDENCE DAY

HAPPY INDEPENDENCE DAY

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action
Into that heaven of freedom, my father, let my country awake.



Freedom Struggle

Friday, August 13, 2010

நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்

ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும்.
அதனால் தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது.
பிறமொழியாளர்களுடைய பெயர்களை குழந்தைக்கு வைப்பதால் தேசிய இனப் பண்பை அக்குழந்தை, பிறமொழியாளர்களிடம் இழந்துவிடும். பிற மொழியாளர்கள் தமிழகத்தை ஆண்ட காலங்களில் தமிழ்மொழியின்ஊடே பல பிறமொழிச் சொற்களும் பெயர்களும் புகுந்து கொண்டது.
சோழர் காலத்திற்குப் பின்பு திட்டமிட்டு தமிழ்நாட்டு ஊர், பெயர்கள் வடமொழியாக்கம் செய்யப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் மூலம் தமிழர் தம் வரலாற்றையும், பண்டைய இலக்கியங்களையும் உணர்ந்ததால் தூய தமிழில் பெயரிடும் வழக்கம் தோன்றியது.
தமிழ் சமூகத்தில் உயர் சாதியினர் மத்தியில் மட்டுமே வேற்று மொழியினர் பெயரை வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்த நேரங்களில்கூட, தாழ்த்தப்பட்டோர் என்றுமே தூய தமிழ் பெயர்களையே இன்றுவரை தமக்கு வைத்துக் கொள்வதைக் காணலாம்.

தமிழ் பேராசிரியரான சூரிய நாராயண சாஸ்திரியார், தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும்; சுவாமி வேதாசலனார் - மறைமலையடிகள் என்றும்;சந்தோஷம்-மகிழ்நன் ஆனதும் பெரும் மாற்றத்தை படித்தோரிடம் கொண்டுவந்தது.


தனித்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், தமிழ் சங்கங்கள், புலவர் கல்லூரிகள், திராவிடக் கழகங்கள் மூலம் எண்ணற்றோர் தம்பெயரில் இருந்த வடமொழிப் பெயர்களைத் துறந்தனர். புதிய தமிழ் பெயரைப் பூண்டனர்.
தமிழர்கள் தன்னுணர்வு பெறுவதற்கு கட்டாயம் தமிழ்ப் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதன் மூலமே அதை அடைய இயலும்.

அருவியே உனக்கும் காதல் தோல்வியா மேல் இருந்து குதிக்கிறாய்...

1. நம் நாடு ஏழைகளின் நாடு அல்ல. ஏழைகள் வாழும் நாடு. மாற்றி அமைப்போம்.

2. அருவியே உனக்கும் காதல் தோல்வியா மேல் இருந்து குதிக்கிறாய்.

3. கவிதைகள் படைப்பாளிகள் இந்த பூமி உள்ளவரை உருவாகிக்கொண்டே இருப்பார்கள். உங்களை போலோ.

4. காதலே நீ ஏன் இன்னும் வெளியே உள்ளாய், உன்னை சிறை பிடிக்க காவலன் இன்னும் வரவில்லையோ? எத்தனை கொலைகளை செய்தாய் பாவி, சிரிக்காதே சிதறிப்போக இனிமேலும் என்னிடம் இடம் இதயம் இல்லை.

5. நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழுவதை விட, உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார், ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயரையே சொல்லும்.

திருந்த நினைக்கிறான் மனிதன்...

திருந்த நினைக்கிறான் மனிதன்.
அனால் சாகும் வரை திருந்தமலே இறந்து விடுகிறான்.

பூமி தோன்றிய காலம் முதல் இதுதான் உண்மை.

எவ்வளவு வேகமாக அலை வந்து அடித்தாலும்
அதன் மேல் கோபபடுவதில்லை மணல்.
அதன் சுபாவம் தெரிந்து புரிந்து கொண்டதோ என்னவோ!
பூமி தோன்றிய காலம் முதல் இதுதான் உண்மை.
ஆனால் உணர்வும், அறிவும் உள்ள மனிதன் ஏன் புரிய மறுத்து மற்றவர்களை வெறுக்கிறான்.?
இந்த கேள்வி குறிதான் அதற்கு பதில்!

Our President's Speech

My Fellow Citizens,

Tomorrow, we celebrate our 63rd Independence Day. On its eve, I extend my warmest greetings to all of you in India and the world over. I would like to convey a special word of gratitude to the brave personnel of the Armed Forces and the Para-military forces who guard our frontiers. I also extend my greetings to the Central and State level police as well as our internal security forces.

Our independence was won after a long and arduous struggle. Countless men and women, yearning for liberation from the colonial yoke, joined the ranks of freedom fighters. Energized by the inspiring leadership of Mahatma Gandhi and his call for an agitation based on the principles of Ahimsa and Satyagraha, they displayed undaunted courage. They willingly went through great hardships guided solely by the desire that the country be independent and its people free to determine their own destiny. This selfless spirit and sacrifices won us our freedom. I call on fellow citizens to join me in paying homage and our deepest respect to our great national leaders, martyrs, freedom fighters and all those who took part in the freedom movement and gave us a sovereign nation.

Freedom was won and the task of nation building brooked no delay. The vision, the principles and responsibilities would now onwards be for the leaders and the people of India to determine. On 15th August, 1947 itself, Bapuji was quick to remind us of this. He said, "From today you have to wear the crown of thorns. Strive ceaselessly to cultivate truth and non-violence. Be humble. Be forbearing ... Now you will be tested through and through." The same day at the stroke of midnight the vision of a free India was enunciated by the first Prime Minister of Independent India, Pandit Jawaharlal Nehru, in his stirring "Tryst with Destiny" speech. He said we would have to, "build the noble mansion of free India where all her children dwell."

Thus, we embarked on our journey. The four essential pillars necessary to support the edifice of India have been and remain - democracy, inclusive economic development, social empowerment and a value system based on our civilizational heritage. Each one of them is individually important and must be equally strong for a stable and progressive nation.

The 15th General Elections were held this year. Spread over five phases, the effort was to reach out to every voter, even in the remotest parts of the country. That is why even where there was only one voter, arrangements were made for the casting of that one vote. The voice of every citizen is important and the principle of inclusiveness integral to democracy. In accordance with the mandate, the new Government assumed office. The electoral exercise re-affirmed the strong faith of the people, across the country, in democracy. It once again proved that the world's largest democracy is, indeed, a mature democracy. We can be proud that we have carried forward the torch of democracy in a manner that today the concept of democracy and India are inseparable.

If we can work to ensure that each citizen gets an opportunity to be heard while choosing representatives to Parliament and the Assemblies, it also becomes our bounden duty to ensure that they are heard even in the period between elections. Each elected Member of Parliament represents on an average the voice of over a 1.3 million electorate - larger than the population of some nations, and this imposes a huge responsibility to represent the aspirations of those who have elected them. They have a clear obligation to work for the welfare of the people and the progress of the nation.

At the same time, the expectations of the people are rising as they are becoming more aware of their rights and seek better opportunities. Facilities, amenities and services meant for them whether they are living in rural or urban areas can be delivered smoothly only is there is an effective governance system that is less cumbersome but more transparent and accountable. There is outrage when money meant for welfare schemes is pilfered out by corrupt practices. The flagship programmes of the Government are comprehensive ranging from health to education, employment to expanding social and economic infrastructure. Their implementation will have to be at optimal levels for an impact to be made on the lives of the people. Hence, the emphasis on reform of governance for effective delivery of public services is critical to change the lives of the people. The administrators must be responsive to the needs of the people. Their work is a public service - commitment, dedication and honesty should be the hallmarks of their work.

This year the monsoon has been less than normal impacting agriculture and availability of water. We have to be prepared to face the situation. The Government is taking all possible steps to deal with it. It is also taking necessary measures to handle the H1N1 influenza. Citizens have to come forward to contribute to Government's efforts in these areas and in other development initiatives through public-private partnerships, NGOs, community groups or Self Help Groups. An enlightened citizenry conscious of its civic duties and social responsibilities, maintaining discipline, following good habits particularly about hygiene and cleanliness, respectful towards nature's bounty and sensitive to environmental concerns is the greatest asset of a nation.

Fellow Citizens,

Our uninterrupted democratic credentials and our steady economic progress achieved due to our hard work have fortified India's stature. Even in the face of a global slowdown, which demands that we manage the economy to counter its effects, we must work to continue our upward trajectory. We have a large domestic market and inherent strengths to drive the economy forward. As we focus on areas of proven strength, on building of infrastructure throughout the country and rural development, it should be our incessant endeavor to expand into new areas of growth.

We must prepare for the future world whose contours will be shaped by innovation, technology and a spirit of enterprise. India has been playing a leading role in the knowledge economy and in the IT and IT enabled sectors. We are well placed to face the future with confidence, but we must not be complacent. Transformational changes have taken place in India when technology has been used for development. The building of modern India requires a focus on strengthening our academic institutions and research facilities. Our efforts in this direction should be motivated by the desire to achieve excellence. India can set high standards of Research and Development so that these can become the international benchmarks in a knowledge society. The world expects India to be one of the largest economies of the world. We know we can achieve this position. After all, history tells us that since ancient times India was a wealthy nation well known for its riches and its global importance. However, India which is a civilization in continuum seeks in addition to material progress, enrichment of human life through cultural advancement, a constant search for knowledge and understanding, and above all, social justice.

Our narrative of growth should be a story of opportunity and a life of dignity for all. Social empowerment requires considerable amount of work and, hence, must occupy centre stage in our national consciousness. There are the weaker and the vulnerable sections of society who are not full partners in the growth and development process and remain on the sidelines. These sections of society need to be drawn into the national mainstream. They need to be given access to education, health and skill-building - the tools of empowerment. This will equip them with abilities and capabilities and generate confidence about their future prospects. This will give them a sense of control over their destinies. It is within the realm of possibility to achieve this. Signs of change are becoming visible. Today, there are girls joining colleges, whose parents had never ever been to school. This is a development that has happened within a generation. People are today realizing the advantages of being educated and are ready to seize opportunities. The passage of the Right of Children to Free and Compulsory Education Bill is a landmark legislation for achieving our goal of universal education. The National Mission on Empowerment of Women will socially and economically empower women - 50 percent of our population to play an active role in nation building. Giving an equal chance to everybody to get ahead in life is an article of faith for the Republic of India, and building an inclusive society our objective.

I am confident that our nation will move forward to become an exemplary democracy, an economic power and a progressive society. However, what will be the value system upon which we will judge our performance? There will be sweeping changes in the world. What will be our anchor to cope with these changes? In such situations, if we are not rooted in values we become rudderless. Hence, the importance of values in the nation building endeavour. We, as a nation, are fortunate that we are the inheritors of values which have stood the test of time. Harmony and peaceful co-existence have been at the core of our civilization. They are messages relevant for all times and ages. They can, perhaps, never be outdated. Therefore, even as we progress it will be these values which would help to provide us strength as they have done throughout our history. India should build its destiny on a culture of peace and harmony. There should be harmony between good traditions and progress.

India has shown a remarkable capacity to assimilate change as well as the influences that have been brought to its land over centuries by the many groups who came here. This has made us a composite society consisting of many different strands but yet united. This unity has been brought about by the philosophy of harmony which demands a sense of responsibility towards fellow human beings. It seeks to resolve differences rather than widen them. It seeks to bring people together rather than divide them. It looks at change not as a threat but as a reality of the march of time. Peaceful co-existence is inherent in our culture. Terrorism, which targets innocent people, is the very anti-thesis of peaceful co-existence. It is condemnable because it is against the tenets of every religion and faith. It must be defeated in the interest of the collective goal of humankind to build peaceful societies and a peaceful world. We need to work together towards this end as humankind shares a common destiny.

Fellow citizens,

We have struggled since the first war of independence in 1857. We have fought against the sentiments largely created by a divide and rule policy, which aimed at defeating our unity. We won because our freedom struggle was based on noble principles. We have adhered to secularism, equality and respect for all religions. I call upon my brothers and sisters of every religion - whether they be Hindus, Muslims, Sikhs, Christians, Buddhists, Jains, Parsees and all others, to live together in harmony. Here, I am reminded of the famous lines:-

Speech

If we have to progress, communal harmony is important. It is like the thread which holds together a garland of beautiful flowers made of different colours and fragrance. Let us prove that we can be united as human beings and not divided. Let us fight against violence and extremism and be an important part of promoting peace and harmony. If we choose to be bound by the feelings of hatred, mistrust and apathy we will never move forward. Therefore, let us build a strong, united and progressive India for us and our future generations as also a peaceful world. I end with the message contained in these lines:-

Common be our resolve,

Our hearts be united,

Our thoughts be in unison,

So that all may live harmoniously.

Once again, my greetings to all Fellow Citizens on the occasion of Independence Day.

Jai Hind.


My India, My pride


My India, My pride

Thursday, August 12, 2010

அனைவருக்கும் கல்வி

ஒவ்வொரு மனிதனுக்கு தனது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக, இன்றைய உலகில் மிகப்பல குழந்தைகள் இந்த வாய்ப்பு ஏதும் இன்றி வளருகின்றன. ஏனெனில் அவர்களது அடிப்படை உரிமையான ஆரம்பக் கல்வி கூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. கல்வித் திட்டங்கள் பலவற்றின் காரணமாக, 2000ம் ஆண்டின் முடிவிற்குள் இந்திய கிராம ஜனத்தொகையின் 94% பேர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாக ஆரம்பக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டு விட்டன. 84% மக்களுக்கு நடுநிலைப் பள்ளிகள் 3 கி.மீ. தூரத்திற்குள் உருவாக்கப்பட்டு விட்டன. எஸ்.சி/எஸ்.டி பிரிவினரையும், பெண் குழந்தைகளையும் பள்ளிகளிள் சேர்க்க சிறப்பு மிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் ஐந்தாண்டு திட்ட காலகட்டத்திலிருந்தே ஆரம்பக் கல்வி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கல்வி நிலையங்களில் குழந்தைகள் சேர்ப்பு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளது.

அதேபோல ஆரம்பக் கல்வி நிலையங்களுக்கும், அதற்கு அடுத்த கட்ட கல்விச் சாலைகளும் எண்ணிக்கையில் பெருகிவிட்டன. 1950-51 ஆண்டில் ஆரம்பக் கல்விக்கான பள்ளிகளில் 3.1 மில்லியன் மாணவர்கள் மட்டும் சேர்ந்தனர். 1997-98 ஆண்டைய கணக்கின்படி இந்த எண்ணிக்கை 39.5 மில்லியனாக உயர்ந்தது. ஆரம்பப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் ஆகியன 1950-51ம் காலகட்டத்தில் 0.223 மில்லியன்கள். இந்த எண்ணிக்கை 1996-97-ல் 0.775 மில்லியன்களாக உயர்ந்தது. 2002-2003 ஆண்டில் 6-14 வயதுள்ள குழந்தைகளில் 82% பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள், இதை 100% ஆக ஆக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

உலக மக்களின் வறுமையை முடிவுக்குக் கொண்டுவரவும், அமைதியும் பாதுகாப்பும் உள்ள வாழ்க்கையை மக்கள் வாழ்வதற்கும், ஒவ்வொரு நாட்டிலுள்ள குடிமக்கள், நலம் பயக்கும் முடிவுகளை தங்களுக்கும் தங்களது குடும்பங்களுக்கும் தேர்ந்தெடுக்க அவர்கள் திறனை மேம்படுத்துதல் அவசியம். இந்த நிலையை அடையவேண்டும் என்றால், உலகத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தங்களின் ஆரம்பக் கல்வியையாவது, உயர் தரமுள்ள கல்வி கற்கும் சூழ்நிலை உள்ள பள்ளிகளில் பயில வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும

அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.)

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 86ஆவது பிரிவில் "6-14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அவர்களுடைய அடிப்படை உரிமை" என்று கூறப்பட்டிருக்கிறது. இதை நிறைவேற்றும் வகையில் குறிப்பிட்ட கால வரையரைக்குள் இந்திய அரசு தனது முதன்மையான திட்டமாகிய "சர்வ சிக்ஷா அபியான் - எஸ்.எஸ்.ஏ.' என்கிற (எல்லோருக்கும் கல்வி') திட்டத்தின் மூலம் ஆரம்பக்கல்வியை அனைவருக்கும் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் 11 லட்சம் கிராமங்களைச் சார்ந்த 192 மில்லியன் குழந்தைகளின் கல்வித்தேவைகள் பூர்த்தியாகும்.

இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள்:

1. பள்ளிக்கூட வசதியற்ற இடங்களில் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்துதல்;

2. பள்ளிக்கூடம் இருக்கும் இடங்களில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர், பராமரிப்பு நிதி உதவி ஆகியவற்றை அளித்து பள்ளி மேம்பாட்டிற்கும் நிதி வழங்குதல்;

3. ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள ஆசிரியர்களின் திறனை அதிகரிக்கும் விதமாக அவர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் பயிற்சி அளித்தல்;

4. ஆசிரியர்-பயிற்சி உபகரணங்களை மேம்படுத்த மானியம் அளித்தல் மற்றும் கிராம, மண்டல மற்றும் மாவட்ட அளவில் கல்வி உதவிக் கட்டமைப்பைப் பலப்படுத்துதல்;

5. வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களுடன் கூடிய தரமான ஆரம்பக்கல்வி அளித்தல்;

6. பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் தேவைப்படும் குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை அளித்தல்;

7. நகர மற்றும் கிராமப்புறக் கல்வித்திட்ட இடைவெளியைக் குறைக்கும் வண்ணம் கம்ப்யூட்டர் கல்வியைப் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுதல்

சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் நிதி நெறிமுறைகள்

1. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உதவி ஒன்பதாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் 85:15 என்ற விகிதத்திலும், பத்தாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் 75:25 என்ற விகிதத்திலும், அதன்பின் வரும் காலங்களில் 50:50 என்ற விகிதத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்.

2. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான சம்பளத் தொகையும் ஒன்பதாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் 85:15 என்ற விகிதத்திலும், பத்தாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் 75:25 என்ற விகிதத்திலும், அதன்பின் வரும் காலங்களில் 50:50 என்ற விகிதத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்.

3. 'மஹிலா சமக்யா', தேசிய பால பவன் மற்றும் என்.ஸி.டி.ஈ. எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை தவிர மத்திய கல்வித்துறையின் அனைத்துத் திட்டங்களும் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்திற்குப் பின் ஒன்றிணைக்கப்படும். ஆரம்பக் கல்விக்கென சத்துணவு வழங்கும் தேசியத் திட்டம் (மதிய உணவுத் திட்டம்) மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும்; இத்திட்டத்திற்கான உணவு தானியம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை மத்திய அரசும், சமைக்கப்படும் உணவிற்கான செலவை மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ளும்.

நடைமுறைக் கோட்பாடுகள்: ஆசிரியர்

1. ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்

ஒவ்வொரு ஆரம்பப்பள்ளியிலும் குறைந்தபட்சம் 2 ஆசிரியர்கள்
நடுநிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியர்

2. பள்ளிகள் / மாற்றுப் பள்ளிக்கூட ஏற்பாடுகள்

வசிக்கும் இடங்களிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்க வேண்டும்;
சேவை சென்றடையாத இடங்களில் மாநில அரசின் கோட்படுகளுக்குட்பட்டு ஈ.ஜி.எஸ். எனப்படும் பள்ளிகளையோ அல்லது புதிய பள்ளிகளையோ அமைப்பதற்கான வாய்ப்பு இருத்தல்;

3. நடுநிலைப்பள்ளிகள்

ஆரம்பப்பள்ளிவரை பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் தேவைக்கேற்பவும் இரண்டு ஆரம்பப் பள்ளிகளுக்கு ஒரு நடுநிலைப் பள்ளியோ/வகுப்போ அமைத்தல்

4. வகுப்பறைகள்

ஆரம்பப் பள்ளியிலேயோ/நடுநிலைப் பள்ளியிலேயோ, எது குறைவாக இருக்கிறதோ, அவற்றில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் அல்லது வகுப்பு/பிரிவுக்கும் ஒரு அறை இருக்கவேண்டும்; குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்களைக் கொண்ட அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் இரண்டு வகுப்பறைகள் மற்றும் வராந்தா ஆகியன அமையுமாறு பார்த்துக்கொள்ளுதல்
நடுநிலைப் பள்ளி/வகுப்புகளில் தலைமை ஆசிரியருக்கு ஒரு அறை அளித்தல்

5. இலவசப் பாடப் புத்தகங்கள்

ஆரம்ப / நடுநிலைப் பள்ளிகளில் அனைத்துப் பெண்கள்/ஆதிதிராவிட/பழங்குடி இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு தலா அதிகபட்சம் ரூ.150 வரை பணவுதவி அளித்தல்
தற்பொழுது வழங்கிவரும் இலவசப் பாடப்புத்தகங்களுக்கான செலவை மாநில அரசின் வரவு/செலவுத் திட்டத்திலிருந்தே சமாளித்துக் கொள்ளுதல்
ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பாடப்புத்தகங்களுக்கு மாநில அரசு சிறிது மானியம் அளிக்குமேயானால், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திநபன் கீழ் வழங்கப்படும் உதவியானது, குழந்தைகளால் வாங்கப்படும் பாடப்புத்தகங்களின் விலையோடு நிறுத்தப்படும்.

6. கட்டுமானப்பணிகள்

இத்திட்டத்திற்காக 2010ஆம் ஆண்டுவரை வரையப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கட்டுமானத்திற்கான செலவுகளுக்காக பி.ஏ.பி.-யால் அங்கீகரிக்கப்பட்ட தொகையானது மொத்த்த் திட்டச் செலவின் 33 சதவீத்த்தை மிஞ்சக்கூடாது. கட்டிடத்தைப் பராமரிக்க மற்றும் பழுதுபார்க்க ஆகும் செலவு இந்த 33 சதவீதத் தொகையில் அடங்காது.
ஆயினும், 33 சதவீத எல்லையைத் தாண்டாமல் கட்டுமானப் பணிகளுக்கென வருடாந்தரத் திட்டத்தின் 40 சதவீதம் வரை அந்த குறிப்பிட்ட ஆண்டின் திட்ட முன்னுரிமைகளுக்கேற்றவாறு செலவு செய்யலாம்.

7. பள்ளிக் கட்டிடங்களைப் பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல்

வி.ஈ.ஸி. எனப்படும் கிராமக் கல்விக் குழுக்கள்/பள்ளி நிர்வாகக் குழுக்களால்தான் செய்யப்பட வேண்டும்;
பள்ளி நிர்வாகக் குழுவின் தீர்மானத்தைப் பொறுத்து ஆண்டொன்றுக்கு ரூ.5000 வரை;
சமூகப் பங்கீட்டின் அம்சங்களையும் இப்பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்;
கட்டிடத்தைப் பராமரிக்க மற்றும் பழுதுபார்க்க ஆகும் செலவு கட்டுமானப் பணிக்கென ஒதுக்கப்பட்ட 33 சதவீத எல்லைக்குள் அடங்காது;
தங்களது சொந்தக் கட்டிடத்தில் பள்ளி நடத்தும் பள்ளிகளுக்கே மேற்சொன்ன மானியம் வழங்கப்படும்.

8. பள்ளிகளுக்கான மானியம்

பள்ளியிலிருக்கும் செயல்படாத உபகரணங்களுக்குப் பதில் வேறு உபகரணங்கள் வாங்குவதற்காக ஆரம்ப/ நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.2000 கிடைக்கும்.
இச்செலவு வி.ஈ.ஸி. எனப்படும் கிராமக் கல்விக் குழுக்கள்/பள்ளி நிர்வாகக் குழுக்களால்தான் செய்யப்பட வேண்டும்.

9. ஆசிரியர்களுக்க்கான மானியம்

ஆரம்பப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.100 வீதம்.

10. ஆசிரியர் பயிற்சி

அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆண்டொன்றுக்கு 20 நாட்கள் வேலையுடன் கூடிய பயிற்சி அளித்தல், பயிற்சி பெறா விட்டாலும் ஏற்கனவே ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 60 நாள் மதிப்பீட்டுப் பயிற்சி அளித்தல் மற்றும் புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.70/- உதவித்தொகையாக அளித்து பள்ளியிலேயே பயிற்சி அளித்தல்

11. சமூகப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல்

ஒவ்வொரு கிராமத்திலும் அதிகபட்சம் எட்டுப் பேர்களுக்கு - கூடியவரை பெண்களுக்கு - வருடத்தில் இரண்டு நாட்களுக்கு நபர் ஒன்றுக்கு நாளொன்றுக்கு ரூ.30/- அளித்துப் பயிற்சி அளித்தல்

12. உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான சலுகைகள்

குழந்தை ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1200/- வீதம் அளித்து அத்தகைய குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளுதல்

13. பள்ளிக்குச் செல்வதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டவர்களுக்கான நிவாரணஙகள்

சேவை வசதி சென்றடையாத இடங்களில் கல்வி உத்தரவாத மையங்களை (ஈ.ஜி.ஸி.) அமைத்தல்;
வேறு மாதிரியான மாற்றுப் பள்ளிக்கூட மாதிரிகளை அமைத்தல்;
இடைவெளியைக் குறைக்கும் பயிற்சிகள், தீர்வுக்கு உதவும் பயிற்சிகள், பள்ளிக்குச் செல்வதைப் பாதியிலேயே நிறுத்திவிட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தும் முகாம்கள்

Worlds 26 Greatest Palaces

Worlds 26 Greatest Palaces


Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos

Click here to join nidokidos
Click here to join nidokidos