Wednesday, September 15, 2010
Monday, September 13, 2010
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?
1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.
2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.
3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.
4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே
நகத்தையும் கடித்து வையுங்கள்.
5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.
6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள்..
நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.
7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.
8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து
விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.
9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக்கொண்டிருங்கள்.
10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச்
செல்லுங்கள்.. நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச்செல்கிறீர்கள் என நினைப்பார்கள்..
11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய்,
ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.
12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள்.
கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.
13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.
14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.
15.. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக
இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.
16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள். மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.
17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம்
தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.
18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்?

Thursday, September 2, 2010
Please Take Some Time To Read All these wonderful Quotes
1) Innaiku thoonguna nalaiku enthirikalam.aana naalaiku thoonguna inaiku enthirika mudiyuma????
2) Bus la collector-yae erinalum.. mudhal seetu driveruku than......
3) Cycle carrierla tiffen-a vechu eduthuttu pogalam Aana... Tiffin carrierla cycle-a vechu eduthuttu poga mudiyathu... ???
4) Ticket vangittu ulla ponna adhu cinema theater anna ulla poittu ticket vanginaa adhu operation theater.
5) Enna than meenuku neendha therinjalum adhala meen kolambula neendha mudiyadhu
6) iron boxla iron panna mudiyum ....ana pencil box la pencil panna mudiyuma?...........idhuthan valka........
7) Ne Enna than costly mobile vachirundhalum, Athula evalavu than recharge pannalum, unnalla unakku call panna mudiyathu..
cream biscuitla cream irukkum, ana nai biscuitla nai irukkuma?
9) puyalala karaya kadaka mudiyum.. karayala puyala kadaka mudiyuma
10) Oru erumbu nenacha 1000 yanaya kadikkum. Ana 1000 yana nenachalum oru erumba kooda kadikka mudiyadhu..
11) Quarter Adichittu Kuppura padukkalaam! Aana kupura paduthuttu quarter adikka mudiyathu...!!
12) Nee Evalavu periya dance master'a irundhalum un saavuku unnala aada mudiyathu
13) trainukku ticket vaangi platformla okkaralam ana platformukku ticket vaangi trainla poga mudiyadhu
14) ambalainga adi patta ambulance varum.. pombalainga adi patta pombulance varuma????
15) Ulagam theriyaama valandha avan veguly..Cricket theriyaama valandha avan ganguly....
16) Bus la ne erinallum bus un mela erinalum?., ticket vanga poradhu nee than?.
17) Evallavu than neechal therinjalum?. oru glass thanila neentha mudiyadu
18) kakka evalavu than karuppa irundhalum adhu podura muttai vellayathan irukkum?.. adhu pola kakka muttai evvalavu than vellaya irundhalum adhu la irundhu vara kutti karuppathan irukkam?.
19) Adyar anandha bhavanukku city ayiram branch irukkalam ana adyar allamaruthukku adyar leya ayiram branch irukkum?
20) Sirpi Kalla Uliyaala adicha that is "Kalai" But Namma Sirpiya Uliyaala adicha that is "Kolai"
21) Railway Stationla Police Station irukkum But Police Stationla railway station irukkathu
22) Yevalavu Dan Neechal Therinjalum Tumler thannila Neentha Mudiyathu.
23) Ennathan Naiku Nalu Kaal Irundhalum Athaala Kaal Mela Kaal Pottu Ukkara Mudiyathu
24) Mandaiya Pota Die Mandaila Pota Dye
25) Nee Enna Thaan Costly Mobile Vachiruthalum Adhula Evalavu Thaan Recharge Pannalum Unnaala Unnaku Call Panna Mudiyathu
26) Kosu Kadicha Yaanaikaal Varum But Yaanai Kadicha Kosukaal Varathu
27) Valkaikum Valukaikum Orea Vithyasam Onnumae Illatha Valkai Bore Adikum
Onnumae Illatha Valukai Glare Adikum
28) Policesikkum Porukikkum enna Vithyasam "Adi-Thadi" Senja Porukki
"Thadi-Adi" Senja Police
29) Trainnuku Ticket Vangi Platformla Ukkaralaam Ana
Platform Ticket Vangi Trainla Ukkara Mudiyathu
30) Ennathan Karatela Black Belt Vanginalum
Naai Thorathina Odi Thaan Aganum
31) Busla Nee Earunalum
Unnmalae Bus Earunalum
Ticket Vangaporadhu Nee Thaan
32) PAAL Kotinna Vera Paal Vaangikkalam
Arisi Kotinna Vera Arisi Vaangikkalam Aana
Thel Kotinna Vera Thel Vanga Mudiyuma?
33) Ticket Vangitu Ulla Poradu Cinema Theatre
Ulae Poitu Ticket Vangaradu Operation Theatre
34) Kaakaa Enna Thaan Karuppa Irundalum Adhu Podura Vellai Thaan
Muttai Enna Thaan Vellaiya Irundalum Athukulae irukura Kaakaa
Karupp Thaan
35) Iron Boxla Iron Pannalam Anna
Pencil Boxla Pencil Panna Mudiyathu
36) Cream Biscuitla Cream Irukkum Anna
Naai Biscuitla Naai Irukathu.

Wednesday, August 25, 2010
வங்கி (bank chennai)
சென்னை எழும்பூர் ரயில் நிலையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்
இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாக திகழ்கின்றது.
வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களும், சென்னையின் தெற்குப்புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை எழும்பூரிலிருந்து செயல்படுகின்றன. தமிழ்நாட்டின் தெற்கு பகுதிகளுக்கு ரயில்கள் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்- 1925

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்-1925
இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாக திகழ்கின்றது. இந்த ரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. சென்னை மாநகரில் ஓடும் பக்கிங்கம் கால்வாய் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாகச் செல்கின்றது.
Pycrofts Road- 1890

Pycrofts Road- 1890
'Bharathi Salai' would make most people blink. They do not know where it is. But its old name Pycrofts Road is easily recognised. This road is said to be the abode of Saraswati, the Goddess of Learning. Name any book and you can get it here. School or college books unavailable anywhere in India can be bought at the bookshops on Bharathi Salai. If by chance a book is not available, they can immediately offer an alternative book in its place.
4. பாரிமுனை

5. பாரிமுனை- 1890
பாரிமுனை சென்னை மாநகரின் முக்கியமான வர்த்தக/வணிக மையமாகும். பாரிமுனை வடச் சென்னையில் உள்ளது. சென்னையின் வடக்கு கடற்கரை சாலையும் எந்.எஸ்.ஸி.போஸ் சாலையும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது பாரிமுனை. சென்னைத் துறைமுகத்தின் அருகில் அமைந்துள்ள இப்பகுதி, ஆங்கிலேய வர்த்தகரான திரு. தாமஸ் பாரி என்பவருக்குப்பின் இப்பெயர் பெற்றது. இவர், 1787ல் இ.இ.டி.பாரி என்கின்ற நிறுவனத்தை இவ்விடத்தில் துவக்கினார். இன்றுமுள்ள இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பாரிமுனையில் இருக்கின்றது. மேலும், பாரிமுனையில் ஏராளமான மற்ற நிறுவனத்தின் அலுவலகங்களும், கடைகளும் உள்ளன. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இப்பகுதியில் பழமை வாய்ந்த கட்டிடங்கள் நிறைய உள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் பாரிமுனையில் அமைந்துள்ளது. பாரிமுனையின் தபால் குறியீட்டு எண் 600001.
3. மயிலாப்பூர்- 1906

3. மயிலாப்பூர்- 1906
சென்னை மாநகரம் தோன்றுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மயிலாப்பூர் ஒரு கடலோர நகரமாகப் பெயர் பெற்றிருந்தது. தொலமியின் நூலில் இது மைலார்பொன் (Mylarphon) எனக் குறிப்பிடப்பட்டு, இது வளம் மிக்கதும் முக்கியத்துவம் கொண்டதுமானதுமான ஒரு இடம் எனக் கூறப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் இது ஒரு சிறப்புப் பெற்ற துறைமுகமாகவும் விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் போத்துக்கீசர் ஆதிக்கம் ஏற்பட்டபோது, இவ்விடத்தில் அவர்களுக்கான குடியேற்றம் ஒன்றை நிறுவ விரும்பினார்கள். இதனால், மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உள் நோக்கி இன்றைய இடத்துக்கு நகர்த்தினார்கள்.
சமணம்
தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் சமணம் எழுச்சியுற்று இருந்தபோது, மைலாப்பூரிலும் இச்சமயம் செழிப்புற்றிருந்தது. இப்போது சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறப்படுகின்றது. இங்கே நேமிநாத தீர்த்தங்கரரின் உருவம் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. மயிலையிலிருந்த இந்த நேமிநாதர் மீது திருநூற்றந்தாதி என்னும் நூலை அவிரோதியாழ்வார் என்பவர் இயற்றியுள்ளார். இது தவிர திருக்கலம்பகம், மயிலாப்பூர் பத்துப்பதிகம், மயிலாப்பூர் நேமிநாதசுவாமி பதிகம் என்பனவும் இப் பள்ளி தொடர்பில் எழுந்தவை ஆகும். இச் சமணக் கோயில் தொடர்பான தொல் பொருட்கள் பலவும் சாந்தோம் தேவாலயத்தை அண்டிய பகுதிகளில் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்து சமயம்
இப்பகுதியில் நீண்டகாலமாகவே இந்து சமயத்தின் சைவம் மற்றும் வைணவப் பிரிவுகள் சிறப்புற்று விளங்கின. பண்டைக்காலக் கரையோர மைலாப்பூரில் சிவனுக்குப் பெரிய கோயில் ஒன்று இருந்ததற்கான சான்றாக 1250 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று, இன்றைய கபாலீஸ்வரர் கோயிலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. போத்துக்கீசர் இக்கோயிலை அழித்துவிட்டனர். இன்றைய கபாலீஸ்வரர் கோயில் 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளை அண்டிக் கட்டப்பட்டதாகும்.
கிறிஸ்தவம்
இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான சென், தோமஸ் கி.பி 52 இல் கேரளாவுக்கு வந்து அங்கே சமயப் பணி செய்தபின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார் என்றும், கி.பி 72 ஆம் ஆண்டில் சென்னை அருகில் உள்ள சின்ன மலை (Little Mount) அருகே கொல்லப்பட்டார் எனவும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இவரது உடல் மயிலாப்பூருக்கு எடுத்துவரப்பட்டு, அங்கே அடக்கம் செய்யப்பட்டதாகவும் கருதப்படுகின்றது. இவ்விடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
Monday, August 23, 2010
குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டுமே!
தக்க வயதுக்கு முன்பே பள்ளியில் சேர்ப்பதால், நம் சின்னஞ்சிறு குழந்தைகளின் குழந்தைப் பருவம் எங்கோ காணாமல் போகிறது. இன்று அவர்கள் பந்து விளையாடுவது மண்ணில் வீடு கட்டுவது போன்றவற்றை விட்டு விட்டு கிளிகள் போல் பெரிய பெரிய நர்சரி ரைம்ஸ், பாடங்கள், கதைகள் போன்றவற்றை (அவற்றின் அர்த்தம் புரிந்தாலும் புரியாவிட்டாலும்) மனப்பாடம் செய்ய வேண்டியுள்ளது!
தங்கள் குழந்தைகள் ஆங்கில ரைம்ஸ் சொன்னால் பெற்றோருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்று அந்த பிள்ளைகளின் குழந்தைத்தனம் முடிந்து வருகிறது. அவர்கள் வயதுக்கு மிஞ்சிய புத்திசாலியாகிறார்கள்.
இதற்குக் காரணம் தக்க வயதுக்கு முன்பே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதுதான். தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தாய்மார்கள் 2-3 மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். எல்லாக் குழந்தைகளும் ஓடும்போது, ஏன் நம் குழந்தை மட்டும் பின்தங்க வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள்.
சில பள்ளிகளைத்தவிர பெரும்பாலான பள்ளிகள் பணம் சம்பாதிக்கும் வியாபார கூடங்களாக உள்ளன. அந்த பள்ளிகளில் உட்காருவதற்கு கூட சரியாக இடம் இல்லமல், அளவுக்கு அதிகமாக குழந்தைகளை சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த வயதில் குழந்தைகளுக்கு தேவையான படிப்பை நீங்களே விளையாட்டாக வீட்டிலேயே சொல்லித்தரலாம். நிச்சயமாக குழந்தைகள் அதை நன்றாகப் புரிந்து கொள்வார்கள்.
குழந்தைகளின் மனம் அழகானது. அவர்களை சரியான வயதுக்கு முன்பே கட்டுப்பாடுகளில் கட்டிப் போடாதீர்கள். அவர்கள் படிக்கும் பள்ளி 5-ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதி கொண்டதாக இருப்பினும், வீட்டின் சுதந்திரத்துக்கு ஈடு இணையில்லை. அவசரமாகக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து நாம் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடை போடுகிறோம். இதனால் குழந்தைகளுக்கு படிப்பின் மீது வெறுப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.
படிப்பதற்கு பல ஆண்டுகள் உள்ளன. ஆனால் குழந்தைப் பருவம் விரைவில் முடிந்துவிடும். குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டுமே!
உணர்ச்சி நீ கொள்வாய் தோழா!
வயலும் வயல் சார்ந்த இடமும்
பாவலர் வையவன்
தண்டலை மயில்கள் சாக
தாமரைக் குளங்கள் காய
கொண்டலும் பயிர்கள் வாழக்
கொடுத்தநீர் குறைந்து போக
வண்டிகள் சுமக்க வாரி
வழங்கிய வயல்கள் இன்று
அண்டிய உழவன் வீட்டு
அடுப்புபோல் காய்ந்த தம்மா!
கயலினம் சுமந்த ஓடை
கழிவுநீர் சுமக்க லாச்சு
வயல்களில் மேய்ந்த மாடு
வண்டியில் ஏற லாச்சு
கரைமரம் நிறைந்த ஏரி
கட்டிட மனைகள் ஆச்சு
உரைதிணை மருதம் இங்கு
உருத்தெரி யாமல் போச்சு!
நெற்களம் மட்டைப் பந்தின்
நேர்திடல் ஆன திங்கே
புற்களைச் சுமந்த பூமி
புதுப்புது நோய்க்குள் ளானாள்
சொற்களால் பெருமை யன்றி
சோகமே உழவன் சொத்து
தற்கொலை மூன்று போகம்
தவறாமல் விளையு தம்மா!
விலங்குகள் பறவை மற்றும்
விரிபுவி உயிர்கள் எல்லாம்
தொலைந்துதான் போன தன்றி
தோற்றது உழவர் வாழ்வும்
மலர்ந்திடும் அணு ஒப் பந்தம்
மாறிடும் நூறு ஆட்சி
உலர்ந்திடும் மருதம் கண்டு
உணர்ச்சி நீ கொள்வாய் தோழா!
தலைவனின் நடவடிக்கைகள் கிளீன் ஸ்லேட்டாக இருக்க வேண்டும்.
ஒரு நல்ல தலைவனுக்கு ஒரு நல்ல தீர்மானத்தை எடுத்து அதைச் செயல்படுத்த வேண்டிய மனோதைரியமும் துணிச்சலும் இருக்க வேண்டும் என்பது. இதற்கு நான் உதாரணம் காட்ட வேண்டும் என்றால் உடனடியாக என் நினைவுக்கு வருவது இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்தான்.
அவர் மட்டும் அன்று ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்தியிராவிட்டால் இன்று இந்தியா எத்தனையோ குட்டி குட்டி நாடுகளாக, சமஸ்தானங்களாகச் சிதறுண்டு போயிருக்கும். அவரை விமர்சித்தவர்களும் வாயடைத்துப் போனார்கள். இந்த டிஸிஷன் மேக்கிங் பண்பு ஒரு தலைவனுக்கு மிகவும் தேவையானது.
“தலைமைப் பண்பில் நேர்மையும் அறமும் தேவை.. ஒரு அமைப்புக்கு லாபம் என்பது குறிக்கோளாக இருக்கலாம், ஆனால் அது நேர்மையையும் அறத்தையும் விலை கொடுத்து வாங்குவதாக இருக்கக் கூடாது. அதே போல் ஒரு தலைவன் தன் பணிகளில் அறத்தைப் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டும்.
“ஒரு தலைவனின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.. இது இன்றைய காலகட்டத்துக்கு மிக முக்கியமான ஒன்று. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதை நாம் காண்கிறோம். பொது வாழ்க்கைக்கு மட்டுமின்றி ஒரு அமைப்புக்கு தலைவனாக இருப்பவனும் தன்னைப் பற்றிய நடவடிக்கைகளை வெளிப் படையாக வைத்திருக்க வேண்டும். அந்தத் தலைவனை உதாரணமாகக் கொண்டு தான் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வழிகாட்டுவது போல் அந்தத் தலைவனின் நடவடிக்கைகள் கிளீன் ஸ்லேட்டாக இருக்க வேண்டும்.
நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்த வெளிப்படையான தன்மைக்கு ஒரு உதாரண புருஷர். அவர் மக்களுக்கு எதையுமே மறைத்ததில்லை. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விஷயங்களைக் கூட அவர் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக அறிவித்தார். அவருடைய ஆசிரமத்தில் எப்போதும் பஜன் நடக்கும். அதில் கலந்து கொள்பவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் காணிக்கை அளித்து விட்டுக் கலந்து கொள்ளலாம். அதில் வசூலாகும் தொகை நல்ல விஷயங்களுக்குச் செலவிடப்படும்.
தினமும் அந்த வசூலில் சேரும் ஒரு ரூபாய்கள் மொத்தமாக கணக்கிடப்படும். ஒருநாள் அந்தக் கணக்கில் சிறு தவறு நேர்ந்து விட்டது. சிறு தவறு தான். அதாவது ஒரே ஒரு ரூபாய் கணக்கு இடித்தது. மகாத்மா காந்தி கடுங்கோபம் கொண்டு விட்டார். அந்த ஒரு ரூபாய்க்கு சரியான கணக்கு வரும்வரை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லி உண்ணாவிரததத்தில் இறங்கி விட்டார்.
மூன்று நாட்கள் அந்த உண்ணாவிரதம் நீடித்தது. பிறகு அந்த ஒரு ரூபாய்க்கான கணக்கு சரியாகக் காட்டப்பட... உண்ணா விரதம் ஒரு முடிவுக்கு வந்தது. ஒரு ரூபாயாக இருந்தாலும் பொது மக்களுக்கு அந்தக் கணக்கு சரியாகத் தெரியவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அந்த தேசப்பிதா.
வேலை செய்வதிலும் செய்து முடிப்பதில் ஒரு தலைவனுக்கு நம்பகத்தன்மையும் ஒற்றுமையுணர்வும் வேண்டும். நான் இந்தக் கருத்தைப் பல மீட்டிங்குகளில் சொல்வதுண்டு. இதை ஒப்புக் கொள்பவர்கள் கை தூக்குங்கள் என்று சொல்வேன். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் போன்றவர்கள் கை உயர்த்துவார்கள். ஆனால் பெரியவர்கள் கை உயர்த்த மாட்டார்கள். சமீபத்தில் நான் பள்ளி சென்றிருந்த போது இதே கேள்வியைக் கேட்டு கையை உயர்த்தச் சொன்னேன். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒருவர் கூட கை தூக்கவில்லை. ஆனால் இந்தத் தகுதியை ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதியாக நான் கருதுகிறேன்.
இந்த எட்டு அடிப்படை தகுதிகளுடன் ஒரு தலைவன் உருவாகும் போது, அது எந்தக் கட்சியில் அல்லது அமைப்பில் இருந்தாலும் சரி, அந்த தலைவனால் பெரிய மாற்றங்கள் உருவாகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த எல்லா அடிப்படைத் தகுதி களையும் ஒரே வார்த்தையில் அடக்குவதைத்தான் நான் “கிரியேட்டிவ் லீடர்ஷிப் என்று குறிப்பிட்டேன்.
இளைஞர்களிடம்தான் இந்த படைப்பாற்றல் மிக்க தலைமை இருக்கப் போகிறது. இது இளைஞர்கள் காலம். முழுமூச்சுடன் அவர்கள் பணியாற்றப் போகும் காலம். இந்த நாட்டில் உள்ள 540 மில்லியன் இளைஞர்களின் பொறுப்பில்தான் தேசத்தின் எதிர்காலமே இருக்கிறது. அவர்கள் சரியான நேரத்தில் சரியான வேலையைச் செய்ய வேண்டுமே தவிர, தேவையற்ற வேலைகளில் கவனத்தைச் சிதற விடக்கூடாது.
Saturday, August 14, 2010
Be proud to be............ I...N...D...A....N........
Happy Independence Day
NEVER FORGET THE HEROS
WHO SACRIFIED THEIR LIFES
TO BRING UP THIS GLORIOUS DAY TO india..
31 states,
7 union territories,
1618 languages,
6400 castes,
6 religion,
6 ethnic groups,
29 major festivals,
1 country!
Be proud to be an Indian!
HAPPY INDEPENDENCE DAY
HAPPY INDEPENDENCE DAY
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action
Into that heaven of freedom, my father, let my country awake.
Friday, August 13, 2010
நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்
ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும்.
அதனால் தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது.
பிறமொழியாளர்களுடைய பெயர்களை குழந்தைக்கு வைப்பதால் தேசிய இனப் பண்பை அக்குழந்தை, பிறமொழியாளர்களிடம் இழந்துவிடும். பிற மொழியாளர்கள் தமிழகத்தை ஆண்ட காலங்களில் தமிழ்மொழியின்ஊடே பல பிறமொழிச் சொற்களும் பெயர்களும் புகுந்து கொண்டது.
சோழர் காலத்திற்குப் பின்பு திட்டமிட்டு தமிழ்நாட்டு ஊர், பெயர்கள் வடமொழியாக்கம் செய்யப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் மூலம் தமிழர் தம் வரலாற்றையும், பண்டைய இலக்கியங்களையும் உணர்ந்ததால் தூய தமிழில் பெயரிடும் வழக்கம் தோன்றியது.
தமிழ் சமூகத்தில் உயர் சாதியினர் மத்தியில் மட்டுமே வேற்று மொழியினர் பெயரை வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்த நேரங்களில்கூட, தாழ்த்தப்பட்டோர் என்றுமே தூய தமிழ் பெயர்களையே இன்றுவரை தமக்கு வைத்துக் கொள்வதைக் காணலாம்.
தமிழ் பேராசிரியரான சூரிய நாராயண சாஸ்திரியார், தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும்; சுவாமி வேதாசலனார் - மறைமலையடிகள் என்றும்;சந்தோஷம்-மகிழ்நன் ஆனதும் பெரும் மாற்றத்தை படித்தோரிடம் கொண்டுவந்தது.
தனித்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், தமிழ் சங்கங்கள், புலவர் கல்லூரிகள், திராவிடக் கழகங்கள் மூலம் எண்ணற்றோர் தம்பெயரில் இருந்த வடமொழிப் பெயர்களைத் துறந்தனர். புதிய தமிழ் பெயரைப் பூண்டனர்.
தமிழர்கள் தன்னுணர்வு பெறுவதற்கு கட்டாயம் தமிழ்ப் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதன் மூலமே அதை அடைய இயலும்.
அருவியே உனக்கும் காதல் தோல்வியா மேல் இருந்து குதிக்கிறாய்...
1. நம் நாடு ஏழைகளின் நாடு அல்ல. ஏழைகள் வாழும் நாடு. மாற்றி அமைப்போம்.
2. அருவியே உனக்கும் காதல் தோல்வியா மேல் இருந்து குதிக்கிறாய்.
3. கவிதைகள் படைப்பாளிகள் இந்த பூமி உள்ளவரை உருவாகிக்கொண்டே இருப்பார்கள். உங்களை போலோ.
4. காதலே நீ ஏன் இன்னும் வெளியே உள்ளாய், உன்னை சிறை பிடிக்க காவலன் இன்னும் வரவில்லையோ? எத்தனை கொலைகளை செய்தாய் பாவி, சிரிக்காதே சிதறிப்போக இனிமேலும் என்னிடம் இடம் இதயம் இல்லை.
5. நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழுவதை விட, உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார், ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயரையே சொல்லும்.
Subscribe to:
Comments (Atom)