Wednesday, September 15, 2010

வாழ்க்கையை தொலைத்து விட்டேன்!

சிறகொடிந்த பறவையின் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை!!!
இதயங்கள் கனத்திருந்தாலும் இதழளவில் புன்னகைப்பதால் தானோ எங்களுக்கு மென்பொறியாளர் என்று பெயர்!!!

அரை அடி இடைவெளியில்
ஆறுபேர் அமர்ந்திருந்தாலும்
அந்நியப்பட்டவர்கள் போல்
திசைக்கொருவறாக திரும்பியிருப்போம்!!!

விருப்பங்களுக்கேற்ற நீராகாரம்
விருந்தோம்பல் புரிய பணியாளர்கள்!
விடிய விடிய வேலை
விடிந்தபொழுதில் வீடுசேர்க்க வாகனம்!

அழையாவிருந்தாளியாய் ஆன்ஸைட் கால்கள்!
இன்னல்ப்படுத்தும் ஈமெயில்கள்!

இவ்வாறாக இயந்திரத்தனமாக சுழலும் எங்கள் நாட்கள்!

உள்ளத்தில் குடியிருக்கும் உறவுகளுக்குக்கூட தொலைப்பேசியில் தான் நலம்விசாரனை!

மணநாளுக்குக்குட மின்னஞ்சலில் வாழ்த்து பரிமாற்றிக்கொள்வர் மனைவியும் கணவனும்!

முகவரிகுக்கூட முகம் காட்ட முடியாத எங்களுக்கு பிறந்த நாளென்ன மணநாளென்ன? எல்லாமே மரண நாட்கள் தான்.

விடியுமுன் சென்று இருண்டபின் திரும்பும் மென்பொருள் பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கு வளர்த்த வேலைக்கார பெண்மணி தான்
ஈடுகட்டும் வாடகை தாய்!!!

பெற்றோரின் ஸ்பரிசம் கண்டதைவிட கரடி பொம்மையின்
கதகதகப்பில் உறங்கும்

எம்மிளம் பிஞ்சுகளின் தனிமைக்கு இந்த லட்சங்கள் ஈடாகுமா?

கை நிறையும் சம்பளத்தின் மறைவில் மனம் நிறையும் குறைகள் மண்டியிருக்கிறது!

நெஞ்சத்திலுதிக்கும் ஆசைகள் மஞ்சதிலுறங்கும் போது
மடிந்துதான் போகின்றன!!


கண்களில் தோன்றிய கனவுகள் யாவும் கண்ணீரில் மறைந்தன!

நித்திரைகள் நீண்டன நிறைவேறாத என் கனவுகளும் நீண்டன!

அன்று,வசதிகள் இல்லாத போது வாழ்ந்து கொண்டிருந்தேன்!

இன்று, வசதிகள் பெருக்கி விட்டேன், ஏனோ வாழ்க்கையை
தொலைத்து விட்டேன்!!!

No comments: