5. பாரிமுனை- 1890
பாரிமுனை சென்னை மாநகரின் முக்கியமான வர்த்தக/வணிக மையமாகும். பாரிமுனை வடச் சென்னையில் உள்ளது. சென்னையின் வடக்கு கடற்கரை சாலையும் எந்.எஸ்.ஸி.போஸ் சாலையும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது பாரிமுனை. சென்னைத் துறைமுகத்தின் அருகில் அமைந்துள்ள இப்பகுதி, ஆங்கிலேய வர்த்தகரான திரு. தாமஸ் பாரி என்பவருக்குப்பின் இப்பெயர் பெற்றது. இவர், 1787ல் இ.இ.டி.பாரி என்கின்ற நிறுவனத்தை இவ்விடத்தில் துவக்கினார். இன்றுமுள்ள இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பாரிமுனையில் இருக்கின்றது. மேலும், பாரிமுனையில் ஏராளமான மற்ற நிறுவனத்தின் அலுவலகங்களும், கடைகளும் உள்ளன. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இப்பகுதியில் பழமை வாய்ந்த கட்டிடங்கள் நிறைய உள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் பாரிமுனையில் அமைந்துள்ளது. பாரிமுனையின் தபால் குறியீட்டு எண் 600001.
No comments:
Post a Comment