எண்ணிக்கை
சே! ஆயிரத்தோடு நிறுத்தியிருக்கலாம்...?
இப்படி எனது எண்ணிக்கையை நான் எப்போதுமெ சலித்துக்கொண்டதில்லை. சிறு வயதிலிருந்தெ எனது எண்ணிக்கை பழக்கம் துவங்கியதாக பாட்டி அடிக்கடி கூறுவாள். இரவு முழுவதும் வானத்து நட்சத்திரங்களை எண்ணுவதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வதையும், அரிசியில் கலந்து போன பருப்புகளை எண்ணிக்கையோடு சேர்ப்பதையும் அனைவரும் வீட்டிற்க்கு வந்து அதிசயமாக பார்த்து சென்றதாக் மிக பெருமையோடு சொல்லிக்கொண்டிருப்பள்.
அப்பாவிற்க்கோ தனது பையன் இப்படி சமர்த்தக இருந்ததில், அனைவரிடமும் தம்பம் அடித்து கொள்வதையும், வீட்டிற்கு வரும் அனைவரிடமும் சவால் விடுவதும், என்னிடம் பல விதமான எண்ணிக்கைகளின் புதிர்களை கேட்டும் நான் சொல்லும் பதில்களுக்கான எதிர் சவால் விடுவதுமாக இருந்தார்.
ஐந்தாம் வகுப்பு கூட முடிக்காத எங்கள் கிராமத்தில் யாருக்கும் எதிர் சவால் விடுவதில் தைரியம் இல்லை. இதனால் தான் என்னவோ என்னை மிக எளிதாக பக்கத்தில் உள்ள ட்வுன் பள்ளியில் இடம் கிடைத்தது. எங்கள் ஊர் தலைவர் தான் பள்ளிகூடத்தில் கொண்டு சேர்த்தார்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் மிக பிடித்த மாணவனக இருந்ததில், பல பையன்களின் அன்புத்தொல்லைகளை தாங்க வேண்டியிருந்த்தது. சில கடைசி பென்ச் மாணவர்கள் மட்டும் என்னை கவிழ்பதில் சமயம் பார்த்து கொண்டிருந்தனர்.
அன்று எந்த ஆசிரியரும் வராத காரத்தினால் எல்லொரையும் பி. டி கிளாசிற்க்கு வருமாறு அறிவுப்பு வந்திருந்தது. கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. இன்று நிச்சயமாக முத்துசாமி சொன்ன பந்தயதில் ஜெயித்து விடலாம். பந்தயம் என்னவென்றால் வேப்ப மரதிலிருந்து கீழ் விழும் இலைகளை அதிகமான எண்ணிக்கையில் யார் எடுப்பது என்பது தான்.
முத்துசாமி, கணேசன், தங்க ராசு எல்லோரும் சேர்ந்து கொண்டோ ம். முத்து சாமி தான் எண்ண ஆரம்பித்திருந்தான்.ஐம்பது, ஐம்பத்தி ஒன்று,.....ஒரே மூச்சில் நானும் எண்ண ஆரம்பித்திருந்தேன். என்னை சுற்றியிருந்த எல்லா சத்தங்களும் அடங்க தொடங்கின. எனது ஒரே குறியாக இலைகளை எண்ணுவதிலேயெ இருந்தது.
லேசாக இருட்டிக்கொண்டு வருவாதாக எனக்கு பட்டது. எப்போது படுத்தேனொ தெரியாது. முகத்தில் வெயில் சுள்ளென்று அடிக்க வாட்சுமேன் எழுப்பிய போது தான் தெரிந்தது காலை ஆகி விட்டதென்று. வாட்சுமேன் பக்கத்தில் அம்மாவும் நிற்பது தெரிந்த போது தான் விசயம் தெரிந்தது. வீட்டில் என்னை நேற்று முழுவதும் தேடியிருக்கவேண்டும். அந்த கவலை அம்மாவின் வீங்கிப்போன முகத்திலெ தெரிந்தது. இரவு முழுதும் அழுதிருக்கவேண்டும். அம்மா என்னை அணைத்துக் கொண்டு அழைத்துப் போனாள். மஞ்சள் வாசம் வீசியது.
அப்போது தான் சட்டென்று நினைவிற்க்கு வந்தது. 1887 நேற்று நான் எண்ணிக்கையில் விட்ட இலைகள். நிச்சயமாக முத்துசாமியொ, தங்கராசோ இந்த எண்ணிக்கையை அடைந்திருக்க முடியாது.
இப்படியெ எனது எண்ணிக்கை பயணம் கல்லூரி வரை தொடர்ந்தது. கல்லூரியில் பலரது காதலுக்கு எனது எண்ணிக்கை பயன் பட்டது. தனது காதலி எத்தனை தடவை மஞ்சள் புடவை போட்டிருந்தால் என்பதில் இருந்தது அவள் எத்தனை தடவை நாக்கு கடித்தாள் என்பது வரை என்னிடமிருந்து எண்ணிக்கை கணக்குகள் சென்று கொண்டிருந்தன.
அன்றும் அப்படித்தான் யாருடையொ காதலியின் ஏதோ எண்ணிக்கையை சொல்லிக்கொண்டிருந்தேன். அவன் சரியாக கேட்காமல் திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருந்ததால் எரிச்சலடைந்து சற்று சத்தமாகவெ சொல்லிவிட்டேன். திடீரென என் பின்னாலிருந்து ஒரு செருப்பு என் முதுகை தாக்கியது. திரும்பி பார்த்தேன். என் கண்கள் அப்படியெ நின்று போனது. நான் சொன்ன ஒரு எண் அவளுடைய எதோ ஒரு அளவு எண்ணிக்கையில் ஒத்து போனதில், அவளுடய செருப்பு என் மேல் விழுந்திருக்கிறது. மேலும் அவள் என்னை எதேதோ சொல்லி என்னை திட்டி கொண்டிருப்பதையும், எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதையும், நான் நினைவுக்கு வந்த பிறகெ தெரிந்தது. மொத்தமாகவெ என்னை அவளிடம் இழந்திருந்தேன்.
பிறகு மகேந்திரன் சொல்லிதான் அவள் பெயர் மதுமதி என்பதும், அவள் இந்த கல்லூரியில் புதிதாக சேர்ந்திருக்கிறாள் என்பதும் தெரிந்தது.பிறகு அவளை நான் எனது எண்ணிக்கை புலமை மூலம் அசத்தியதையும், அவள் என்னுடன் தனது வீட்டை விட்டு வந்ததையும், அவள் வீட்டார் திரும்பவும் என்னை தேடி வந்து கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதையும் எழுதுவதற்க்கு குறைந்தது நாற்பது வரிகளவாது தேவைப்படும். இப்போது வேண்டாமே...
இதோ கல்யாணமாகி ஆறு மாதங்களாகி விட்டது. மது என்னுடன் மிக சந்தோசமாகவே இருக்கிறாள். முத்துசாமி, தங்கராசு, கணெசன், மகேந்திரன் நம்மை பார்ப்பதற்க்காக வந்திருக்கிறார்கள். பழைய விசயங்களை நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
மறு நாள் காலை எழுந்தவுடன், நீச்சல் குளம் செல்வதென முடிவு செய்தோம். முத்துசாமி தான் கிராமத்தில் நான் தான் எப்பொதும் அதிக நேரம் தண்ணிரீல் இருப்பேன் என்றும், எண்ணிக்கையில் ஒரு தடவை 999 வரை சென்றதாகவும் ஞாபகப்படுத்தினான். எனக்கு பெருமையாக இருந்தது. இன்றும் அதெ போல் தண்ணீரில் யார் அதிக நேரம் மூழ்கி இருக்கபோவதென பந்தயம் செய்து கொண்டோம்.
மார்கழி மாதமாக இருந்ததில் நீச்சல் குளத்தில் அதிகம் பேர் இல்லை. நாங்கள் எங்கள் எண்ணிக்கையை ஆரம்பித்தோம். இந்த தடவை கணேசன் எண்ண ஆரம்பித்திருந்தான். 15, 16, 17, ...
நானும் எண்ணிக்கையை ஆரம்பித்தென். முதலில் கொஞ்சம் மூச்சையடைத்து, இருந்தாலும் எனது எண்ணிக்கையை தொடர்ந்த்து கொண்டிருந்தேன். 960...., 989.....................................999, 1000, 1001, 1002........... மிகவும் சந்தோசமாக இருந்தது. நிச்சயமாக வேறு யாரும் இவ்வளவு நேரம் இருந்திருக்க முடியாது.
வீட்டிற்க்கு வந்த போது வாசலில் நிறைய செருப்புகள் கிடந்தன. நிச்சயமாக மதுவுடைய சொந்தங்களாக இருப்பார்கள். கடந்த இரண்டு மாதங்காளாகவெ இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவளை தேடி அவள் சொந்தகாரர்கள் வருவதும், போவதும்.
இந்த தடவை எங்கள் வீட்டில் இருந்தும் வந்திருந்தனர். மது கொஞ்ச அதிகமாகவே அழுதிருந்தாள். கண்களுக்கு கீழெ கருமை நிரம்பி.... இருந்தாலும் அழகாகவே இருந்தாள். அவள் அருகில் அவளுடைய மாமா பையன் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தான். அவனைதான் மதுவுக்கு கட்டுவாதாக இருந்தது. ஆனால் நமது காதல் கல்யாணத்தில் எல்லாம் நின்று போனது. அதற்கு பிறகு இப்போது தான் இவனை பார்க்க முடிந்தது.
அவள் அழுகும் போது இவன் அவளின் தலையை கோதிவிடுவதும். அழுகை அதிகரிக்க அதிகரிக்க அவளை லேசாக அணைத்துக் கொள்வதுமாக இருந்தான். அவன் முகத்தில் அதிகப்படியான சிரிப்பு புதைந்திருந்தது.
என் தலைக்கு மேல் உள்ள குத்துவிளக்கு அணைந்து போயிருந்தது. நான் வாங்கியிருந்த எல்லா பரிசுகளையும் யார் யாரோ பார்த்துகொண்டிருந்தார்கள். வேன் வந்து விட்டதாக யாரோ கூறிய போது மது அதிகமாக கதறி அழுதாள். இப்போது அவன் மதுவை இருக்கமாக கட்டிக்கொண்டான்.
சே..! ஆயிரத்தோடு நிறுத்தியிருக்கலாம்.
No comments:
Post a Comment