Monday, October 25, 2010

வானில் பறக்கலாம் வா தோழி!


உன்னை
ஒரு முறை அறிந்தேன் - பின்
பலமுறை நீயின்றி ஏங்குகிறேன்.
என்றும் உன்னலமே என் பேச்சு;
இன்று நீயின்றி ஏது மூச்சு
கண்டவுடன் கத்திக் குத்து - இதயத்தில்!
காத்திருப்பதென்னவோ உனக்காய்! - ஆனால்
காலம் போனது கனவாய்

கோடை வெயிலோ,
கார்கால மழையோ,
பனிக்கால குளிரோ
எதுவானால் என்ன?
கன்னிகையே உன் கயல்விழியே - என் காலம்!
நினைவுச் சாரல்கள் நெஞ்சக வயலில் வீசிய போது
கிளைத்ததென்னவோ வெறும் முட்செடிகளே!

தனம் சொன்னது என்னைத் தேடு எப்போதும்,
கானம் சொன்னது என்னைப் பாடு எப்போதும்,
பூவினம் சொன்னது என்னை நாடு எப்போதும்,
பாடம் சொன்னது என்னை படி எப்பொதும்,
துக்கம் சொன்னது என்னை விடு எப்பொதும்,
ஆனால்
நான் சொன்னேன் என்னைத் தொடு எப்பொதும்.

வானம்பாடி போல
சிரமமின்றி சிறகு விரித்து
வேண்டாததை வெறுத்து
துயரங்களை தொலைத்து,
தேடல்களை விடுத்து,
வலிகளை உதறி,
வானில் பறக்கலாம் வா தோழி!

No comments: