Monday, February 6, 2012

சுரேந்திர நாத் பானர்ஜி


இந்திய சுதந்திர போராட்டத்திற்குக் காரணகர்த்தா யார் என்று நாம் தேடிக் கொண்டே சென்றால் ஒரு இடத்தில் நமது தேடுதல் நிலைத்து நிற்கிறது. 1848 -ல் வங்கத்தில் பிறந்தவர் சுரேந்திர நாத் பானர்ஜி என்ற மாமனிதன். சிறுவயதிலேயே சிம்மக் குரலில் உணர்ச்சியூட்டும் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர். அமெரிக்க புரட்சிக் கொள்கையையும், மாசினி, கரிபால்டி போன்ற வீரர்களின் வரலாற்றையும் மக்களிடம் எடுத்துபேசி எழுச்சியூட்டினார்.

1871 - ல் இந்திய ஆட்சிப் பணித்துறைக்கான தேர்வில் வெற்றிப் பெற்றாலும், ஆங்கில அரசு பணியில் அமர்த்த மறுத்தது. தடைகளைக் கடந்து பதவி ஏற்றும் பயனில்லை. 1874 - ல் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

இதனால், பானர்ஜி கல்கத்தாவில் இந்தியர் கழகத்தை நிறுவினார். இந்திய இளைஞர்களுக்கு நாட்டுப்பற்றை ஊட்டுவதே அதனுடைய முக்கிய நோக்கம். இந்தியர்களை அரசு நிர்வாகத்தில் தடை செய்வதை எதிர்த்து மக்களைத் தட்டி எழுப்பினார். அதன் விளைவாக 1883 - ல் இந்திய தேசிய மாநாட்டைக் கூட்டினார். அந்த சமயத்தில் 1885 - ல் ஓய்வு பெற்ற ஆட்சிப் பணியாளரான ஆலன் ஆக்டேவியன் கியூம் இந்திய அரசின் அனுமதியுடன் இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநாட்டை கூட்டினார். இந்திய தேசிய மாநாட்டினரும் அதில் இணைந்தனர். பானர்ஜி 1895 - ல் காங்கிரஸ் தலைவரானார். 1921 முதல் 1923 வரை வங்க அரசின் அமைச்சராகவும் இருந்தார். வங்காளி என்ற பத்திரிகையை நடத்தினார். உருவாகின்ற ஒரு நாடுஎன்னும் நூலையும் எழுதினார். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குக் காரணமாக இருந்த முதல் நபர் இவரே. எனவேதான் இந்திய விடுதலை இயக்கத்தின் தந்தையாக பானர்ஜி போற்றப்படுகிறார். இவரது தந்தையாரே ஆரம்பத்தில் சுதந்திரம் குறித்த எண்ணங்களை இவருக்கு ஊட்டினார். அவர் மருத்துவராக பயிற்சி எடுத்து வந்தவர்.

No comments: