ஜனநாயகம் என்ற ஆலமரம் இன்று உலகம் முழுவதும் விழுதுகள் பரப்பி செழிப்புடன் வளர்ந்ததற்கு காரணமான ஆணிவேரை 1100 வருடங்களுக்கு மேலாக அமைதியுடன் தாங்கிக்கொண்டுள்ள ஒரு அற்புதமான இடம் " உத்திரமேரூர் " !. சிறு வயதில் நாம் பள்ளியில் படித்த நியாபகம் வரலாம், ஆனால் நாம் அதை அப்போதே மறந்திருப்போம் ! தெரியாதவர்களுக்காக இந்த தகவல் ,இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்வதற்கும், மற்றும் பிற நாட்டு மக்கள் தங்களை ஆளப்போகிரவர்களை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை 1100 வருடங்களுக்கு முன்னர் நாம் பின்பற்றிய " குடவோலை " முறை தான் காரணம் என்றால் உங்களால் நம்பமுடியுமா ? ஆம் ஒரு மன்னன் ஆட்சியில் இருக்கும் வேலையில் அவன் கொடுமைகள் செய்தாலும் நல்லது செய்தாலும் மக்கள் தாங்கிக்கொள்ளவேண்டும் என்ற கதையை மாற்றி, தனக்கு பிடித்த தலைவனை தானே தேர்ந்தெடுக்கும் முறையை உலகிற்கே முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் நாம் ! .
கி.பி 950 சோழர்கள் இந்த பகுதியை ஆண்ட போது "பராந்தக சோழன்" தான் இந்த முறையை கொண்டு வந்தார் என்று இந்த கோயில் கல்வெட்டு தெளிவு படுத்துகின்றது .தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் இந்த இடத்திற்கு தான் உண்மையில் முதல் இடம் வழங்கி இருக்க வேண்டும்.சோழ கல்வெட்டுகளை ஆராய்ந்தமுன்னாள் தமிழ்நாடு தொல் பொருள் ஆராய்ச்சிமன்ற தலைவர் , திரு .டாக்டர்.நாகஸ்வாமி எழுதிய புத்தகத்தை வாங்கிப்படித்தால் இந்த கல்வெட்டுகளில் உள்ள அனைத்து விசயங்களும் உங்களுக்கு தெரிய வரும். இந்த கல்வெட்டுகளை ஆராய்ந்தால் " யார் தேர்தலில் நிற்க முடியும் ?, யார் நிற்க முடியாது ?,அவர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் ? ,தேர்தல் எவ்வாறு நடை பெற வேண்டும் ?தேர்ந்தேட்டுகப்பட்டவர்கள் எவ்வாறு செயல் பட வேண்டும் ? என்ற தகவலை தருகின்றது. இதில் இருக்கும் சட்ட திட்டங்கள் இன்று நடை முறையில் இருந்தால் ஒருவர் கூட யோக்கியன் என்ற போர்வையில் தேர்தலில் நிற்க முடியாது..அவ்வளவு நிபந்தனைகள் உள்ளன !கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் " நிர்வாகம்,நீதி,விவசாயம்,போக்குவரத்து," போன்ற இன்னும் பல தகவல்களை தருகின்றது . ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன தெரியுமா இன்று அன்னா அசாரே போராடிக்கொண்டிருக்கும் " தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் சரியாக செயல்படவில்லை என்றால் அவரை திரும்பப்பெறும் சட்டம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாம் கொண்டுவந்து விட்டோம் " !!!. பல்லவ மன்னன் " நந்திவர்மனால்" இந்த இடம் கி.பி 750 வருடம் உருவாக்கப்பட்டது..
இந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் இது போன்ற ஒரே இடம் அனைத்து மன்னர்களாலும் ஆளப்படவில்லை. இந்த இடத்தை " சோழர்கள், பாண்டியர்கள்,பல்லவர்கள்,சம்புவர்யர்கள்,விஜய நகர அரசர்கள்,நாயக்கர்கள் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இந்த இடத்திற்கு " ராஜேந்திர சோழனும் " , " கிருஷ்ணா தேவராயரும் " வந்துள்ளனர் ! இன்னொரு முக்கியமான தகவல் இந்த தொகுதியை ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தலிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள் இந்த தொகுதியின் நிலவரத்தை தான் முதலில் ஆவலுடன் பார்பார்கள் , ஏனெனில் இந்த தொகுதியை யார் கைப்பற்றினார்களோ அவர்கள் தான் இன்று வரை ஆட்சி அமைத்துள்ளனர் !!!. இந்த கூற்று 1952 ல் காங்கிரஸ் தமிழகத்தை ஆட்சி செய்ததிலிருந்து தொடங்கி ,இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கு " அம்மா " வரை இந்த பட்டியல் நீள்கிறது !!.இப்படிப்பட்ட உலகின் சிறப்பு வாய்ந்த இடத்தை எத்தனை தமிழர்கள் நேரில் சென்று பார்த்திருப்பீர்கள் ?...
No comments:
Post a Comment