Monday, August 22, 2011

எந்த கல்வி முறையில் படிப்பது சிறந்தது

பிளஸ் 2 முடித்த உடன் பட்டப்படிப்பு படிப்பது என்று முடிவெடுக்கும் மாணவர்கள் உடனடியாக ஒரு கல்லூரியில் சேர்ந்து விடுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பகல் நேர வகுப்புகளிலும், சிலர் மாலை நேர வகுப்புகளிலும் சேர்ந்து விடுகின்றனர். சில மாணவர்களுக்கு இதிலேயே குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை படிப்பதை விட, தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படிக்கலாமா என்று எண்ணுகின்றனர். தொலைதூரக் கல்வியில் படித்துக் கொண்டே டிப்ளமோ படிப்பு, சான்றிதழ் படிப்பு படிக்கலாம் என்றும் விரும்புகின்றனர். இப்படி பட்டப்படிப்பிலேயே இத்தனை முறைகள் இருக்கும் போது, எந்த முறையில் படிப்பது என்று மாணவர்கள் இடையே குழப்பம் வருவது சகஜம்தானே?

பொதுவாக, முதுகலை பட்டம் பயில நிச்சயமாக மூன்று அல்லது நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அதை கல்லூரியில் சேர்ந்தோ அல்லது தொலைதூரக் கல்வி மூலமாகவே பயின்று இருக்கலாம். அதே சமயம், பட்டப்படிப்புடன் உங்களது டிப்ளமோ படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும், உடனடியாக வேலை கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். தற்போது வளர்ந்து வரும் நவீன உலகில், வேலைக்கு ஆட்களை தேடுபவர்கள் நீங்கள் சான்றிதழ் கோர்ஸ் படித்திருக்கிறீர்களா, டிப்ளமோ முடித்திருக்கிறீர்களா அல்லது பட்டப்படிப்பை கல்லூரியில் படித்தீர்களா என்றெல்லாம் பார்ப்பதே இல்லை. அவர்கள் கொடுக்கும் வேலையை செய்யும் திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதை மட்டுமே. அதேப்போலத்தான், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும், உங்களது பட்டப்படிப்பு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதேத் தவிர, அதை நீங்கள் எந்த முறையில் படித்தீர்கள் என்பது அல்ல.

பலரும், தாங்கள் படித்த படிப்புக்கு சம்பந்தமே இல்லாத பணிகளை செய்வதும், சிலர் தாங்கள் பெற்ற பணி அனுபவத்திற்கேற்ற படிப்பினை படிப்பதும் படிப்பிற்கும், திறனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையே நிரூபிக்கிறது. மேலும், நல்ல திறமையான நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ஒரு நிர்வாகம் நடத்தும் நேர்முகத் தேர்வில், கல்விச் சான்றிதழுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. நேர்கானலில் கேட்கப்படும் கேள்விகள், எழுத்துத் தேர்வு, பணி அனுபவம் போன்றவைதான் முக்கிய இடம் வகிக்கிறது. அதே சமயம், பல நிறுவனங்கள் தாங்கள் தேர்வு செய்யும் ஆட்கள் பட்டப்படிப்பை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று விதிமுறையை வைத்துள்ளனர்.

இந்த விதிமுறையை பல நிறுவனங்கள் கவனமாக கையாள்கின்றன என்பதால் பணி அனுபவம் பெற்ற பிறகும், அதற்கேற்ற பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் கற்கும் பல ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் வேலை தேடும் போது இந்த பட்டப்படிப்பானது ஒரு பக்கத்துணையாக மட்டுமே இருக்கும். அவரது திறமைதான் முதன்மையானதாக இருக்கும் என்பதில் நினைவில் கொள்ளவும். ஆனால், கல்லூரியில் படித்த பட்டப்படிப்பிற்கும், தொலைதூரக் கல்விக்கும் எந்த வேறுபாடும் இல்லையா என்று கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் ஏக்கத்தோடு கேட்பது புரிகிறது.. நிச்சயம் உண்டு. ஒரு பணிக்கு இரு வேறு விதமான நபர்கள் விண்ணப்பித்து, இருவருமே திறமையுடன் காணப்பட்டால், அதில் கல்லூரியில் படித்தவரைத்தான் நிர்வாகம் முதலில் பரிந்துரைக்கும். அதேப்போலத்தான் மற்ற இடங்களிலும் கூட கல்லூரி பட்டப்படிப்பிற்கு நிச்சயம் முன்னுரிமை வழங்கப்படும். நாம் செய்து கொண்டிருக்கும் பணியில் முன்னேற்றம் அடையவும், மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் டிப்ளமோ படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும் நிச்சயம் உதவும். ஒரே இடத்தில் தேங்கி நிற்காமல், முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்த படிப்பிற்கும், அதற்குரிய முக்கியத்துவம் கிடைத்தே தீரும்.

விடலைப் பருவ பிள்ளைகளை கையாள்வது எப்படி?

குழந்தை வளர்ப்பு செயல்பாட்டில், விடலைப் பருவம் என்பது ஒரு மிக முக்கியப் பருவம். எது சரி? மற்றும் எது தவறு? என்று ஆராய ஆரம்பிக்கும் பருவம். உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கும் பருவம். இத்தகையப் பருவத்தில், பெற்றோர்-பிள்ளைகள் உறவுகளில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தங்களின் பிள்ளைகள் எந்த நிலையிலும் வழிமாறி விடக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் ஆசை. ஆனால், பிள்ளைகளை கையாள்வதில் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். எனவே, மிக முக்கிய பருவமான விடலைப் பருவத்தில், பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பாக சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

உங்களின் விடலைப் பருவ பிள்ளை, என்ன சொல்ல வருகிறது என்பதை கனிவோடு கேட்கப் பழக வேண்டும். ஏனெனில், ஒரு குழந்தை சிறுவயதில் இருக்கும்போது பெற்றோர்களிடம் ஏறக்குறைய அனைத்து விஷயங்களையும் கூறிவிடும். ஆனால் அதே பிள்ளை, விடலைப் பருவத்திற்கு வந்தவுடன், பல விஷயங்களை பெற்றோரிடம் சொல்வதற்கு தயங்குகிறது. எத்தகைய விஷயங்களுக்கு நீங்கள் எப்படி உங்களின் விடலைப் பருவ பிள்ளைகளிடம் நடந்துகொள்கிறீர்கள் என்பதை அவர்கள் அனுமானித்து, அதன்படி, உங்களுடனான உறவுநிலையில் ஒரு வரைமுறையை வகுத்துக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு நாளிலும், குழந்தையுடன் செலவிடுவதற்கென்றே வீட்டில் ஒரு நேரம் வகுத்துக் கொள்வது ஒரு சிறந்த வழி. குழந்தைகள் படிக்கும்போது, நீங்கள் சிறிதுநேரம் அவர்களின் உடன் அமர்ந்து படிக்கலாம். பாடப்புத்தகம் அல்லாத சில சிறந்த புத்தகங்களை, குழந்தைகளுக்குப் படிக்க கொடுத்து, அதன் கருத்தாக்கம் பற்றி அவர்களுடன் கலந்துரையாடலாம்.அதுபோன்ற கலந்துரையாடலில், உங்களின் கருத்தை திணிப்பதை தவிர்த்து, அவர்களின் கருத்தை ஆர்வமுடன் கேளுங்கள்.

பொதுவாக இரவு நேரத்தில் உணவருந்தும்போது, குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது ஒரு நல்ல ஆரோக்கிய சூழல். இந்தப் பழக்கமானது, உங்களுக்கும், உங்களின் விடலைப் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும். ஏனெனில், அத்தகைய சூழலில், குழந்தைகள் தங்களின் மனதில் உள்ளதை பெற்றோரிடம் வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஆனால், அந்த சந்தர்ப்பத்தை, பெற்றறோர்கள் தங்களின் கருத்துக்களை திணிப்பதற்கான போதனைக் களமாக ஆக்கிவிடக்கூடாது. பிள்ளைகளைப் பேசவிட வேண்டும்.

வெறுமனே அமர்ந்து கொண்டு ஏதாவது பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், ஏதேனும் ஒரு வேலையை நீங்களும், உங்களின் விடலைப் பருவ பிள்ளையும் இணைந்து செய்து கொண்டே பேசலாம். வீட்டை சரிப்படுத்துதல், வெளியில் கடைக்கு செல்லுதல் போன்ற பணிகளை செய்துகொண்டே பிள்ளைகளுடன் கலந்துரையாடுவது, சூழ்நிலையை எளிதாக்கும்.

பல ஆய்வு முடிவுகளின்படி, ஒரு வீட்டில் தந்தையைவிட, தாய்தான் குழந்தைகள் தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள அதிகளவில் துணைபுரிகிறார். தந்தை ஒரு அதிகார மற்றும் கட்டளை மையமாகவே பார்க்கப்படுகிறார். ஆனால் தற்போதைய சூழ்நிலைகளில், பல தந்தைகளும் தங்களின் பிள்ளைகளிடம் நெருங்கி வருகிறார்கள்.

சில விடலைப் பிள்ளைகளிடம் ஒரு வேலையை செய்யச் சொன்னால், அவர்கள், அதற்கு முற்றிலும் எதிர்பதமாகவே செய்வார்கள். ஏனெனில், அவர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலையில்தான், பெற்றோர்கள் தெளிவாக செயல்பட வேண்டும். உங்களின் முடிவுகளை பிள்ளைகளின் மீது திணிக்காமல், அவர்களுடன் ஆலோசித்தே எந்த திட்டமிடுதலையும் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகள் குழந்தைகளின் சிந்தனையை முதிர்ச்சியானதாக மாற்றும்.

தொடர்ச்சியான மற்றும் பின்வருபவைகள் பற்றி சிந்திக்கும் மூளையின் பகுதியானது, விடலைப் பருவத்தில்தான் வளர்ச்சியடைகிறது. விடலைப் பிள்ளைகளுக்கு, சரியான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம், தங்களின் புதுமையான செயல்களின் மூலம் நம்மை அவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார்கள்.

உங்களின் விடலைப் பிள்ளையை எப்படி வழிநடத்துவது என்பதில் உங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தால், உங்கள் பிள்ளையின் முன்பாக வெளிப்படையாக நீங்கள் விவாதம் செய்ய வேண்டாம்.

பல இல்லங்களில், பெற்றோரிடையே, தாங்கள் சொல்வதைத்தான் தங்களின் பிள்ளை கேட்க வேண்டும் என்ற ஒரு பிடிவாதம் இருக்கும். இதை வெளிப்படையாக காட்டிக் கொள்வதால், அவர்கள் இந்த சூழலை எதிர்மறையாக கையாள நினைப்பார்கள்.

தாயும்-தந்தையும், ஒருவரின் அக்கறையில் மற்றொருவர் நம்பிக்கை வைக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன்பாக நீங்கள் ஒற்றுமையுணர்வு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு மனப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், உங்களின் விடலைப் பிள்ளையுடனான உங்களின் உறவு வலுப்படும்.

என்னதான் உங்களின் அரவணைப்பிலேயே உங்களின் குழந்தை வளர்ந்திருந்தாலும், அவர்கள் விடலைப் பருவத்தை எட்டியவுடன், தாங்கள் பெரிய மனிதர்கள் என்பதை உணர்கிறார்கள். எனவே அவர்களின் தனிமை உணர்வுக்கு பெற்றோர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் முன்னுரிமை எடுத்துக்கொண்டு, தலையிட்டு, அவர்களை சங்கடப்படுத்தக்கூடாது. தேவையான உதவிகளை தவறாமல் செய்ய வேண்டும். அதேசமயம், அவர்களுக்கு தெரியாத வண்ணம் சரியான முறையில் கண்காணிக்கவும் வேண்டும்.

ஒரு பிரச்சினையைப் பற்றி உங்களது விடலைப் பிள்ளையிடம் நேரடியாக பேசுவதற்கான சூழல் இல்லாதபோது, கருத்தை எழுத்தில் தெரிவிப்பது ஒரு சிறந்த வழியாகும். நேருக்கு நேர் பேசுவது சிறந்த வழிமுறை என்றாலும், சில சமயங்களில் நேரடி விவாதங்கள் எல்லையை மீறி சென்றுவிட வாய்ப்புண்டு. எனவே, அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எழுத்து மூலமான உரையாடல் பெரும் உதவியாக இருக்கும்.

அதேசமயம், நீங்கள் எழுதியதை(கடிதம் வாயிலாகவோ அல்லது ஈ-மெயில் மூலமாகவோ) அனுப்பும் முன்பு அல்லது கொடுக்கும் முன்பாக, அவற்றை ஒருமுறை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் உணர்ச்சி வசத்தில் நீங்கள் ஏதேனும் பயன்படுத்தக்கூடாத வார்த்தையை பயன்படுத்த நேரிடலாம். எனவே சரிபார்த்து அவற்றை திருத்திவிட வேண்டும்.

உங்களின் விடலைப் பிள்ளைகள், அனைத்து விஷயங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் வற்புறுத்தக்கூடாது. ஏனெனில், எதை உங்களிடம் சொல்ல வேண்டும் மற்றும் தேவையில்லை என்று முடிவெடுக்கும் நிலைக்கு அவர்கள் வருகிறார்கள். எதுமாதிரியான விஷயங்களை உங்களிடம் அவர்கள் ஆர்வத்துடன் கூறுகிறார்கள் என்பதையும், எதுபோன்ற விஷயங்களை அவர்கள் உங்களிடம் கூறத் தயங்குகிறார்கள் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

எனவே, நீங்கள் அவர்களுடன் மேற்சொன்ன வகைகளில் உறவை வலுப்படுத்திக் கொள்வதன் மூலம், சூழலை மென்மையாக்கி, உங்களின் விடலைப்பிள்ளை உங்களிடம், அனைத்து முக்கிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும்.

Friday, August 19, 2011

காத்திருப்பு ....

இந்த சொல்லை சொல்வதற்கே நெஞ்சில் வலிமை வேண்டும். வருகிறேன் என்றவன் வாராமல் போய் விட மணித்துளிகள் நாட்களாக, நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக. மாதங்கள் பல வருடங்களானது. அவன் வருகை இன்னும் தாமதமாகவே உள்ளது. நிழலுக்கு ஏங்கும் பாலைவனமாய் என் மனது அவன் வருகைக்கு ஏங்கியது. சில இடங்களையும், பொருட்களையும் காணும் போதெல்லாம் மனசுடைந்து போகின்றேன் ... அவனும் அவன் நினைவுகளும் கடலோரம் வரைந்த கவிதைகளாய் அலைகளோடு காணாமலே போனது நிஜம் தானா ..?

இன்று வரை புரியவே இல்லை. எதோ மனதை வருட விழி மலர்ந்து பார்க்கிறேன். அதே இடம், அதே இருக்கை... எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் அவன் நினைவு மட்டும் இன்னும் அப்படியே ஒட்டிகொண்டது மனசெல்லாம்.

இதே புகையிரத நிலையத்தில் தான் அன்று நானும் அவனும் சந்தித்தோம். நினைவுகள் அலை மோத இளங்காற்றை சுவாசிக்கிறேன். நடு இரவு ... வீதிக்கு வருகிறேன். தூரவே என்னை கண்ட பறவைகள் சிறகடிக்கின்றன. எங்கோ நாய் ஊளையிடும் சத்தம், வீதியை வெறித்து பார்க்கின்றேன் முதல் முதல் அவனை சந்தித்த இடம் எதிர்பாராத மோதலில் சிதறிய புத்தகங்களை எடுத்து அடுக்குகிறேன். அவனும் அடுக்குகிறான் என் புத்தகங்களை பார்வைகள் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ள காதல் பறவை தன் இஷ்டப்படி பறந்தது. பார்வைகள் மட்டுமே பேசிக் கொண்டது. நெடு நாள் வரை ஒரு வார்த்தை பேச மூவிரண்டு மாதம் ஆனது. அந்த வார்த்தை பேசுவதற்குள் வியர்வை துளிகள் காதோரங்களில் சொல் சொல் என்று கூச்சலிட்டு கலைத்து தரையில் சரிந்து விழுந்தது. நெற்றியில் மிஞ்சி இருந்த வியர்வை துளிகள் விழவா வேண்டாமா என்று போட்டி போட்டுக் கொண்டு இருந்தது. மெதுவாக இதழ் மலர்ந்து வார்த்தைகளை உச்சரிக்க முனைகிறேன். தொண்டைக்குழியில் எதோ உருள்வதாய் ஓர் உணர்வு வார்த்தைகள் வெளி வர சிரமப் பட்டது. ஒரு வழியாய் மனதை திடப் படுத்தி சொல்வதற்கு வாய் திறக்க. அந்த வார்த்தைகளும் உமிழ் நீரில் மூழ்கி மரணமடைகிறது. திக்கி திக்கி என்றாலும் சொல்லலாமென எண்ணி நிமிர்கிறேன்.

அப்பொழுது ''உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என்ற வார்த்தைகள் தேனாய் என் செவிகளில் பாய்கிறது. அதிசயமாய் நிமிர்ந்து பார்கின்றேன் அவன், அவனே தான் சொல்லிவிட்டான். இதயம் திறந்து ... நான் தான் தாமதம். பாதணிகள் கால்களை மூடி இருக்க தரையில் கோலமிட முடியாமல் கால் கட்டை விரல் கோபமாய் ஆடிக் கொண்டிருந்தது, தமிழ் பெண்களுக்குரிய அந்த வெட்கம் தானோ நேர் நோக்க முடியவில்லை அவன் விழிகளை அதில் காதல் அம்புகள் தொடுக்க ஆவலோடு காத்திருந்தன. வேறு எங்கோ பார்த்தப் படி எதுவும் அறியாதவள் போல அவனை கேட்கின்றேன் ''என்ன சொல்லுறீங்க'' என்று மீண்டும் சொல்கிறான் சத்தமாய்...

மற்றவர் திரும்பி பார்க்க நகருகிறேன் அந்த இடத்தை விட்டு ஓடி வந்து பாதையை மறித்துக் கொண்டு பதிலை சொல்லிவிட்டு போ என்கிறான். அவன் மேல் எனக்கு இருந்த காதலை அவன் அறிந்திருக்க நியாயமில்லை இருந்தும் வார்த்தைகளை விட முடியவில்லை. அவன் மனதில் நானிருப்பது அறிந்ததும் ஆனந்தக் கண்ணீர் விழிவழியே துளிகளாய் எட்டி எட்டி பார்த்து கண்ணகளில் உருண்டு வர பதைக்கின்றான். தப்பா சொல்லிட்டேனா ...? மன்னிச்சுடுங்க என்கிறான். அவசரமாய் இடைமறித்து சொல்கிறேன் இல்லை இல்லை நான் அப்படி சொல்லவில்லை. குறும்பு தனமாய் அவன் சிரிப்பு கண்களும் சேர்ந்து சிரிக்க என் அருகில் வந்து நோக்கினான் குறு குறுக்கும் அவன் பார்வை என்னை என்னவோ செய்தது வேகமாய் ஓடி மறைந்தேன்.

அவன் துள்ளி குதித்து சிரிக்கும் ஓசை என் செவிகளில் நீண்ட நேரமாய் கேட்டது. அதிகமாய் பேசும் அவனிடம், என் வார்த்தைகள் வெளி வர அச்சப் பட்டு உள் வாங்கிக்கொள்ளும் மௌனமாகவே பேசும் என் மனதின் காதல் வார்த்தைகளை புரிந்து கொள்வான் அவன் எப்பவும் சற்று தள்ளி அமரும் என்னை அவன் விசித்திரமாய் பார்ப்பான். கவிதைகளை வரைந்து நான் நடக்கும் வழியில் போடுவான். கடிதங்களில் கல்லை கட்டி எறிந்து விடுவான். விடுமுறைகளில் காணாமல் தவிக்கும் நம் இதயங்கள் கண்டதும் கட்டித் தழுவிக் கொள்ள ஆசைப் படும். ஆனால் எதோ தடுக்கும். கலங்கிய விழிகளுடன் மன துயரங்களின் பரிமாறல் கொஞ்சமாய் பேசி நிறைய நேசித்து கல்லூரி காலம் கனவுகள் நிறைந்த காலம் இறுதி நாள்.

இன்றாவது நிறைய பேசணும், எண்ணிக் கொண்டு அருகருகே அமர்ந்து எதுவும் பேசாமால் மௌனமாய் இருவரும் கண் கலங்கி நிற்க, ரயில் இருவருக்கும் ஒரே நேரத்தில் வர செய்வதறியாமல் இருவரும் பார்த்துக் கொள்ள அவன் மெதுவாய் சொல்கிறான் "நான் ஊருக்கு போய் கடிதம் போடுகிறேன்."

பிரிய மனமின்றி ரயில்களில் ஏற ரயில் ஊர்ந்து செல்கிறது. இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து செல்ல சோகம் மனதை தழுவிக் கொள்ள அவனும் நானும் கைகளை அசைத்த வண்ணம் பிரிகின்றோம் கண்களில் தேக்கி வைத்திருந்த கண்ணீரெல்லாம் சொட்டு சொட்டாய் தரையை தொட்டது. ஜன்னலில் சாய்ந்தபடி உறங்கிப் போனேன்.

எதோ கூக்குரலிடும் சத்தம் கேட்டு திடிக்கிடுகிறேன். என்னாச்சு எழும்பி பார்கின்றேன் எதோ விபத்தாம். யாரோ சொல்கிறார்கள் நிறைய உயிர் சேதம் ஆச்சு என்று. எட்டி வெளியே பார்க்கின்றேன். ஒரே கூட்டம். மெதுவாய் தட்டு தடுமாறி ரயிலை விட்டு இறங்குகிறேன் என்ன செய்வதென்று தெரியவில்லை மெதுவாய் நடக்கின்றேன் தண்டவாளத்தில் வந்த திசைக்கே செல்ல ஒரு ரயில் ஆயத்தமாய் நிற்கிறது ஓடிச் சென்று அதில் ஏறுகிறேன். ரயில் நகர்கிறது. நாளைக்கு ஊருக்கு போய்க்கலாம் என்று எண்ணிக் கொண்டேன் மீண்டும் அதே இடம் அதே இருக்கை வந்து அமர்ந்து கொண்டேன் நடு சாமம் என்றதால் ஆள் அரவம் எதுவும் இல்லை அந்த இருக்கையில் முடங்கி படுத்துக் கொண்டேன்

மறு நாள் அதி காலையில் ரயில் நகரும் சத்தம் எழுந்து அமர்ந்து கொண்டேன் எட்டிப் பார்க்கின்றேன் ரயில் ஒன்று ஊருக்கு கிளம்புகிறது அப்போது தான் கவனித்தேன் இரண்டாவது ரயில் பெட்டியில் அவன் சத்தமாய் கூப்பிட்டேன் அவனுக்கு கேட்கவில்லை ரயில் நகர ஆரம்பித்துவிட்டது அவசர அவசரமாய் ஓடுகிறேன் ரயிலில் ஏற ஒருவாறு ஏறிவிட்டேன் கடைசி பெட்டியில் ஒவ்வொரு பெட்டியை கடந்து அவனை தேடி செல்கிறேன். ஒரே சன கூட்டம் அவனருகே வந்துவிட்டேன். அவன் பெயரை சொல்ல எண்ணுகையில் தான் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கவனித்தேன் சரி அவன் அனுமதி வாங்கிவிட்டான் போல துணிவுடன் ஊருக்கு வருகிறான் மனசில் ஒரே சந்தோசம்.

இவனுக்கு தெரியாமலே இவன் பின்னாடி செல்வோம் என்று எண்ணியவாறு மறைந்து அமர்ந்துக் கொண்டேன் ஊர் வந்தது அவன் இறங்கி நடக்கின்றான் நான் குறுக்கு வழியில் சென்று முன் வாசலுக்கு போகாமல் வீட்டு பின் வாசல் வழி செல்கிறேன் யாரையும் காணவில்லை அம்மா அப்பா கூப்பிடுகிறேன் யாரையும் காணவில்லை எங்கே என்று எண்ணியபடி அறையை எட்டி பார்க்கின்றேன் என் தங்கை விசும்பலுடன் சுற்றி அவள் தோழிகள் என்னடி ஆச்சு சத்தமாய் கேட்கின்றேன் அவள் பேசவில்லை.

கோபம் வர வராந்தாவுக்கு விரைகின்றேன் சொந்த பந்தங்கள் சுற்றிவர நிற்க நடுவில் அழகான கண்ணாடி பெட்டியில் யாரது எட்டிப் பார்க்கின்றேன். அதிர்ந்து போகிறேன் நானா அது ஆம் நானே தான். நான் இறந்து விட்டேனா...? மெதுவாக நிமிர்ந்து வாசலை பார்க்கின்றேன் அவன் தூணில் தலையை அடித்தபடி கதறிக்கொண்டு இருக்கின்றான் எல்லோரிடமும் ஓடி ஓடி சொல்கிறேன் நான் இங்க இருக்கேன் அழவேண்டாம் என்று யாருமே கேட்கவில்லை. அம்மாவின் சத்தம் பெருங்குரலாய் கேட்க யாரோ என் உடலை தூக்க. இறுதி சடங்கு நடக்கிறது. என் சக மாணவர்கள் அப்பாவிடம் எதோ சொல்ல அவன் காதுகளில் அப்பா எதோ சொல்ல அவன் அலறுகிறான் அயோ நானா என் கையாள எப்படி நான் அவளுக்கு கொல்லி வைப்பேன் கத்துகிறான் இல்லை இல்லை என்கிறான் அவன் துவண்டு போய் கிடக்கிறான் சுடுக்காட்டில் எனக்கான இறுதி சடங்கு. அவனே செய்கிறான். நான் அவன் பின்னாலேயே சுற்றுகிறேன் அவன் என்னை கண்டுக்கவில்லை எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்புகிறான்.

நானும் எல்லோரிடமும் சொல்கிறேன் அவர்கள் கவனிக்கவில்லை அவனுடன் சேர்ந்தே செல்கிறேன் ரயில் பயணம் மீண்டும் அவன் வழி நெடுக அழுது கொண்டே போகிறான் பரிதாபமாய் பார்க்கின்றேன் மீண்டும் அதே இடம் அவனும் இறங்க நானும் இறங்கினேன் அவன் நம் கல்லூரி வாசலில் ஒட்டுகிறான் என் கண்ணீர் அஞ்சலியை அழுதுகொண்டே அவனும் நானும் சந்தித்த இடங்களை ஒவ்வொன்றாய் பார்க்கின்றான் மீண்டும் திரும்புகிறான். தண்டவாளத்தில் தலையை வைக்கின்றான் நான் கதறுகிறேன் வேண்டாம் வேண்டாம் அவனுக்கு கேட்கவில்லை நிற்பவர் முதுகில் பலமாய் தட்டி சொல்கிறேன் அவனை காப்பாதுங்கள்.யாரோ அவனை ஓடி போய் காப்பாற்ற மீண்டும் வருகிறான் மகிழ்கிறேன். அவனை அனுப்பி வைக்கின்றன அவன் செல்லும் திசையை பார்கின்றேன்.

கண்ணீருடன் பல வருடங்களாக ரயில் நிலையத்தில் காத்திருக்கிறேன் தண்டவாளங்களை அடிக்கடி சரி பார்க்கின்றேன் இன்னொரு விபத்தும் இன்னொரு காதல் தோல்வியும் வேண்டாமென என்றாவது ஒரு நாள் அவன் வருவான் அவனை பார்ப்பேன் இங்கு இருந்தபடியே கண்ணீருடன் காத்திருக்கிறேன். அவன் ஒரு ஆண்மாவாயேனும் வராமலா போய் விடுவான் எத்தனை ஆண்டுகளானாலும் காத்திருப்பேன் அவனுக்காக. அவனுக்காக மட்டுமே.

Sunday, August 14, 2011

1954 – The China syndrome


Before India became independent of British rule, it had little political contact with its northerly neighbor. China had also recently undergone a political upheaval. The incumbent Kuomintang nationalist party had been defeated in a civil war by the People’s Liberation Army, which established the People’s Republic of China. Nehru’s foreign policy began with his government’s recognition of the new republic. In April 1954 Nehru traveled to Peking (as Beijing was then known) where he met Chinese leaders Zhou Enlai and Mao Zedong (in pic). April 29 became a red-letter day in the history of Sino-Indian ties for the declaration of the Five Principles of Peaceful Coexistence, known as Panchsheel (inspired in part from the Pancasila – the five principles for the foundation of Indonesia as laid out by the nation’s first president Sukarno), which comprised respect for each other's territorial integrity and sovereignty, non-aggression, non-interference in each other's internal affairs, equality and mutual benefit, and peaceful co-existence. The refrain “Hindi Chini bhai bhai” was common during the 1950s as the two countries ignored the odd border skirmish to maintain peaceful relations. Within a few years, India and China fell out over China’s occupation of Tibet.

1952 – Democracy’s first dance


Jawaharlal Nehru, who had led the interim government since 1947, was elected in the country’s first parliamentary election in 1952. The Congress Party emerged victorious in the elections, the first test of fledgling democracy. On May 13, Nehru formed the first democratically elected Government of India and assumed office as Prime Minister. Later that year the Prime Minister, seen here on his 65th birthday two years later, unveiled India’s first Five Year Plan.

1950 – The first missionary of charity


Agnes Gonxha Bojaxhiu, an Albanian nun, came to Darjeeling, India in 1929 with the Sisters of Loreto. She learned Bengali and took the name Teresa upon being initiated into the order. While the nuns at the Loreto Convent were engaged in teaching, Teresa was moved by the poverty she witnessed around her. Traveling by train to Kolkata (then Calcutta), she experienced the epiphany that was to become her life’s mission – to devote her life to the service of the poorest of the poor. On October 7, 1950, Teresa established her own congregation, the Missionaries of Charity, in Kolkata after receiving permission from the Vatican to do so. Its purpose was to care for “the hungry, the naked, the homeless, the crippled, the blind, the lepers, all those people who feel unwanted, unloved, uncared for throughout society, people that have become a burden to the society and are shunned by everyone." She abandoned her nun’s habit and adopted a white sari with a blue border, which continues to be worn by members of her order. Started with 13 members, the Missionaries of Charity have more than 4,000 nuns today running hospices and orphanages around the world.

1950 – Glory to the republic


On January 26, 1950, the 34th and last Governor-General of India Chakravarti Rajagopalachari read out a proclamation announcing the birth of the Republic of India. The Constitution of India came into effect, declaring India as a sovereign, democratic and secular state. Until this day, India was a dominion under the British Commonwealth acknowledging George VI as King and Emperor. Dr Rajendra Prasad (in picture, right) took oath as the President of the new republic. Interestingly, despite the newly proclaimed status India did not renounce allegiance to the British Commonwealth. As the Manchester Guardian observed on January 26, 1950, India regarded the Commonwealth as a “political machinery used to promote peace and economic advancement.”

1948-49 – A prodigal son’s patricide


Nathuram Vinayak Godse (extreme left) and Narayan Apte (center), members of the extremist outfit Hindu Mahasabha, blamed Mahatma Gandhi for conceding Pakistan to the Muslims. Godse and Apte had been part of previous unsuccessful attempts to assassinate Gandhi. On January 29, 1948, the two men reached Delhi Railway Station and checked into the retiring room. Financed by their organization, they had purchased a Beretta .38 semi-automatic pistol. The next morning Godse approached Gandhi as he was heading to a prayer meeting and bowed before him. At point blank range, the assassin fired three shots and the Mahatma collapsed to the ground. Gandhi, breathing his last, is believed to have uttered the words, “Hai Ram”. Announcing Bapu’s death to the nation, Prime Minister Jawaharlal Nehru said, “The light has gone out of our lives, and there is darkness everywhere.” Godse and Apte were executed in November 1949.

1947 - Train to Pakistan


As British India was cloven in two, the birth pangs of nationhood were followed by separation anxiety. The first train to Pakistan, which ran from Delhi to Lahore, was flagged off in August 1947 in a climate of warmth and bonhomie. However, as massive population exchanges took place between the two young nations, tensions ran high and fanned communal passions aflame. As people were plucked out of their homes and forced to cart their families and belongings to the strange new land across the newly drawn border, they came under attack from brigands and hired thugs. Both fledgling governments were ill equipped to deal with such massive migrations, displacement and violence driven by communal sentiments. About 10 million people are believed to have been displaced, and over a million are estimated to have died during the Partition. Sixty-four years later, the scars of Partition live on in public memory, even though the descendants of those affected by it have few physical memories of the event.

1947 - Tryst with destiny


Eleven days before August 15, 1947, Viceroy Lord Louis Mountbatten (center), Jawaharlal Nehru (extreme left) and Mohammad Ali Jinnah (right) prepare for the transfer of power from the British Crown. A notional picture of a divided nation comprising India and Pakistan, as distinct from the agglomeration of princely states and provinces administered by the Raj, came into being during these deliberations. Nehru represented the Indian National Congress while Jinnah stood for the Muslim League, which demanded a separate sovereign state for Muslims. Although the British were in favor of a united Indian subcontinent and the 1946 Cabinet Mission attempted to reach a compromise between the Congress and the Muslim League, neither Nehru nor Jinnah agreed to its proposal for a decentralized state with power vested in local governments. August 14, 1947, the dominion of Pakistan (which then included East Pakistan) declared independence from the British Crown. At midnight the following day, India followed suit with Nehru famously heralding our tryst with destiny.

சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்

சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர் . நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம். சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று 25 காரணங்களை கூறிய தீர்ப்பு அளிக்கிறோம்.
அவை வருமாறு:
1.தமிழகத்தில்தரமான கல்வி சமமான கல்வி தர கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் கல்வி கற்கும் குழந்தைகள் மத்தியில் பொருளாதார சமூக கலாச்சார வேறுபாடுகள் இருக்க கூடாது என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது.
2.கடந்த 2010ம் 2011ம் கல்வி ஆண்டில் 1ம் மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் பாடம் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011&2012 கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று கடந்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. மீண்டும் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழகஅரசு கூறியதை ஏற்க முடியாது.
3.சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில கருத்துக்களை கூறியுள்ளது. இதை கடந்த அரசு பின்பற்றவில்லை. எனவே சமச்சீர் கல்வியை தள்ளிவைத்தோம். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.
4.கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் சில மாற்றங்களை செய்ய சட்டத்தில் தனியாக வழியுள்ளது. இதற்காக நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பிக்க முடியும். இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான்.
5.கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தமிழக அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது என்பதை ஏற்க முடியாது.
6.புதிய அரசு கடந்த மே 16ம் தேதி பதவி ஏற்றது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 17 மற்றும் 18ம் தேதி சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் , தனியார் அமைப்புகள் அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தன. இந்த கோரிக்கைகளை கொடுத்த அமைப்புகள் தான் ஏற்கனவே சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இதை அரசு பரிசீலணைக்கு எடுத்து இருக்க கூடாது.
7.தமிழகஅரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே கடந்த மே மாதம் 21ம் பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அடிக்க தமிழக அரசு டெண்டர் கொடுத்தது. இதன் மூலம் சமச்சீர் கல்வியை தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசியில்ரீதியான உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதன்அடிப்படையில் தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
8.தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாட திட்டத்தை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
9.சமச்சீர் கல்வியை தள்ளிவைப்பதாக அரசு அறிவித்ததை எதிர்த்து பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. இதை அடுத்து தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
10.சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு முதலில் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. உச்ச நீதிமன்றம் அரசு மனுவை விசாரித்து, சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்க்க 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால் கமிட்டி சரியாக செயல்படவில்லை.
11.கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்ய கூடாது என்று கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். அவரே இந்த ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை,என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தவறானது. இப்படி பட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது தவறானது. எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
12.தற்போதைய கல்வித்துறை செயலாளர் கடந்த ஆண்டு 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு, 10 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடபுத்தகங்களை அச்சடி ஒப்புதல் வழங்கினார். இந்த புத்தகங்களுக்கும் விலை நிர்ணயம் செய்ததும் அவர் தான் என்று தெளிவாக தெரிகிறது.
13.தமிழக அரசின் நிபுணர்கள் குழு சில குறைபாடுகளை தான் கூறியுள்ளது தவிர சமச்சீர் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை.
14.சமச்சீர் கல்வி சட்டம் 2010ம் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் வெளி வந்ததால் மற்ற வகுப்புகளுக்கும் சட்டப்படி இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறோம்.
15.பாடத்திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ம் ஆண்டு கொண்டு வந்தாலும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்த சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வியை திரும்ப பெறுவது போல உள்ளது. எனவே இதை ரத்து செய்கிறோம்.
16.ஒரு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு அதை திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி திருத்த சட்டம் கொண்டு வந்தால் அது செல்லாதாகிவிடும்.
17.சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கடந்த அரசு டெண்டர் கொடுத்தது. புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. இதுதெரிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய பாடபுத்தகங்களை அச்சடிக்க டெண்டர் கொடுத்தது. இது தவறானது. இதை அனுமதிக்க முடியாது. இது உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
18.சென்னை உயர்நீதிமன்றம் அளித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு பின்பற்றவில்லை.
19.கடந்த 2005ம் ஆண்டின் தேசிய பாடதிட்ட வரைவை கடந்த சரியாக பின்பற்றியது. அதை சரியாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.
20.சமச்சீர் பாடத்திட்டத்தில் ஒரு சில தவறுகள் உள்ளது என்றும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தவறுக்களுக்காக ஒரு சட்டத்தையே திருத்த வேண்டிய அவசியம் இல்லை.
21.ஆரம்ப பள்ளி சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தலைவரின் படங்கள், கவிதைகள், தத்துவம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அது இளம் மாணவர்களை கவரும் வகையில் உள்ளது , அவர்கள் மனதில் அரசியல் சாயம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழக அரசு கூறியதால் அந்த பகுதிகளை நீக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதை அரசு ஏற்று இருக்க வேண்டும். இதை அரசு ஏற்காதது தவறானது. அதற்கு மாறாக சமச்சீர் கல்வியை காலவரையற்ற அளவில் தள்ளிவைத்துள்ளது.
22.தமிழக அரசின் கல்வித்துறை இணைய தளத்தில் 10 வகுப்பு பாடங்கள் வெளியிடப்பட்டதை தெரிந்து கொண்ட மாணவர்கள் அவற்றை நகல் எடுத்து படித்து வந்துள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ய முடியாது. 2010 &2011 கல்வி ஆண்டிலும் சமச்சீர் பாடத்திட்டம் தான் இருக்கும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.அந்த நம்பிக்கையை அரசு பாழ்படித்துள்ளது.
23.சமச்சீர் கல்வியை மேலும் வலுபடுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அரசு அமுல்படுத்திருக்க வேண்டும்.
24.ஒரு சில பள்ளிகள் தங்களுக்கு விரும்பமான பாட திட்டங்களை தேர்வு செய்யலாம் என்ற காரணத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது.
25.உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்தை செல்லும் என்று கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அப்படி இருக்கும்போது தற்போது 2011ம் ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது.
சமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்த, சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான். சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு செல்லும்.
ஒவ்வொரு கட்சியும் அரசு மாறும் போது மாணவர்கள் பாதிக்கும் அளவு நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது. தமிழக அரசின் நடவடிக்கை மாணவர்களின் அடிப்படை அதிகாரத்தை பறிப்பதாகும். மாணவர்களுக்கு பாதிப்பதாக உள்ளது. அரசியில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் என்ற காரணத்தை காட்டி மாணவர்கள் படிப்பு பாழாக்க கூடாது. பாழக்கியது தவறு. அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அதை ஏற்க முடியாது. குழந்தைகள் எதிர்காலம் பாதிக்காதவகையில் அரசு செயல்பட வேண்டும். அரசியில் உள்நோக்கத்துடன் அரசு நடவடிக்கை எடுத்ததாக தெளிவாக தெரிகிறது. உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழக அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்கிறோம்.

Saturday, June 25, 2011

குளவிக் கூடு

மதுரையான் கோவிலுக்குப் பக்கத்தில் அரசமரத்தின் நிழலில் பிள்ளையார் உட்கார்ந்திருக்கிறார். பயங்கர விஷத்திற்கு மனிதர் முடி தாழ்த்தி வணங்குவதைக் குறிப்பிடும் நாகங்கள் ஆலம் விழுதைப் போல் கல்லிலே நெளிகின்றன. பக்கத்தில்தான் ஒரு புதர் இருக்கிறது - இருள சாதிப் பெண்ணின் தலைமயிரைப் போல். நான் மேடையில் மேய்ந்து கொண்டிருந்தேன். நான் மாடென்னவோ அல்ல. இருந்தாலும் சைவ சித்தாந்திகள் சொல்வதுபோல் பசுதானே? அதிலும் ஆரறிவுள்ள பசுவானதால் நுனிப்புல்லை மேய்வதில் என்ன உபயோகம்?

ஒரு குளவி பிள்ளையாரண்டை வந்து உட்கார்ந்தது. என்னை நினைத்துக் கொண்டதோ என்னவோ - பிள்ளையார் பீடத்தை முன் மீசையால் தொட்டுத் தடவிவிட்டு, எப்படி வலம் வருவது - இடமாகவோ, வலமாகவோ - என்று மாறி மாறி சோதித்துக் கொண்டிருந்தது.

நான் குளவியின் பக்தியைவிட அதன் உடலின் மேல் அதிக நாட்டம் கொண்டேன். என்ன அற்புதமான ஆகாய விமான உடல்! எவ்வளவு லேசான இடுப்பு! நூல் போன்ற இடை! அந்தி நேரத்துச் செங்காவி போன்ற என்ன இறகுகள். அமாவாசை போன்ற என்ன பளிங்கிருள் உடல்! நட்சத்திரம் போன்ற என்ன கண்கள்!

என் நாட்டத்தைக் கலைத்தது ஒரு நாதம். ஆகாய விமானம் எட்டத்தில் மிதந்து வருவது போன்ற ஆழ்ந்த குமுறல். கண்ணுக்கருகில் பறக்கும் ஈ வான் முகட்டில் பறக்கும் கருடனோ என்ற பிரமையைச் சில சமயம் உண்டாக்குக்கிறதல்லவா? அதே போன்று ஒரு ஓசை. கிட்டத்திலிருக்கும் குளவியின் ரீங்காரம் எனத் தெரிய ஒரு வினாடி பிடித்தது. ஐந்து நிமிஷம் புதரில் மறைந்திருந்து விட்டுத் திரும்பவும் பிள்ளையாரண்டை வந்தது. பிள்ளையாரண்டை வந்து செய்த காரியம் ஒன்றும் இல்லை. பைத்தியத்தைப் போல் குறிப்பில்லாமல் வருவதும் போவதுமாயிருந்தது.

புதரைப் போய் பார்ப்போம் என்று போய் அங்கே ஊன்றிக் கவனித்தேன். குளவியின் கூடு தென்பட்டது. லக்ஷ்மணர் சீதையின் பர்ணசாலையைச் சுற்றி வந்து, சுற்றி வந்து பாதுகாத்தாராமே, கண்களை இமை காத்து வருகிற மாதிரி. அதைப் போல் குளவி கூட்டின் மேல் உட்காருவதும் பறப்பதும் வருவதுமாய்க் கூட்டைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது.

எனக்கு விஷம புத்தி வந்து விட்டது. கூட்டைக் காக்கக் கூடிய திறமையை அளவிட்டு விட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஒரு சிறியகல்லை எடுத்தெறிந்தேன். அது கூட்டின் பக்கத்தில் விழுந்தது. ஆகாசவாணத்தைப் போல் உஸ் என்று சீறிக்கொண்டு இரண்டு அடி உயரம் குளவி பறந்து உட்கார்ந்தது. ஒரு காரியத்தை சாதிக்க வேண்டுமானால் போகப் போகக் கடுமையான சோதனையைக் கையாள வேண்டும் என்கிறார்கள். எட்டிக் கொட்டையைத் தின்ன வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று பிறகு அளவை உயர்த்திக் கொண்டே போனால், ஒரு மண்டலத்திற்குப் பிறகு மண்டலமிட்டு வரும் கருநாகம் கடித்தால் கூடப் பாம்புதான் சாகுமாம்.

பிறகு ஒரு குச்சியை எடுத்துக் கூட்டைத் தொட்டிழுத்தேன். வேட்டைக்காரனுடைய துப்பாக்கிப் புகைவழியே வேங்கை பாய்வதுபோல் என் குச்சி திரும்பிய வழியே குளவி சீறியது. ஒரு பக்கத்தில் நகர்ந்தேன். குளவி எதிரியைக் காணாமையால் கூட்டுக்கே திரும்பி விட்டது.

குளவி சீறி வந்ததால் மனிதனை இந்த அற்பப் பொருள் எதிர்ப்பதா என்ற அகங்காரம் எழுந்தது. அப்படியா சேதி என்று கூட்டை ஒரு மூலையில் இடித்தேன், கோபத்துடன் குளவி வந்தடித்தது. நான் மறைந்தேன். கூட்டுக்குக் குளவி திரும்பிவிட்டது. தாய், தற்காப்பு என்ற நினைப்புகளைத் தவிர குளவிக்கு கூடு மூளியாகி இருந்தது தெரியவில்லை.

நான் விளையாட நினைத்தவனாகையால், கூட்டை அப்படியே கீழே தள்ளிவிட்டேன். குளவியின் நிலையைப் பார்க்க வேண்டுமே! கோபங் கொண்ட தாயைக் காணேம். பிள்ளைகளை இழந்தபேதை, பரிதவித்துப் புலம்புவதுபோல் கூடு இருந்த இடத்தில் சுற்றிச் சுற்றி வந்ததே ஒழிய என் பக்கம் பாயவில்லை. கூட்டின் முக்காலே மூணு வீசம் பங்கு எவ்வித சேதமுமாகாமல் கீழே கிடந்தும் அது குளவியின் கண்ணுக்குப் படவில்லை. தான் கூடு கட்டிய இடம் காலியானதே அதற்கு சாவின் குறி. அப்படி இப்படி மயங்கி மயங்கி, துயரத்துடன் புலம்புவது போன்ற ஓசை கொஞ்ச நேரம் கேட்டது. குழந்தை இறந்ததென்று உறுதியானதும் தாயுள்ளம் செத்துவிட்டது போல புது ஓசையுடன் கிளம்பி விட்டது.

அதுதான் நாயகனைத் தேடும் ஓசையா?

Friday, June 24, 2011

Try

  1. Don’t try to read other people’s minds. Don’t make other people try to read yours. Communicate.
  2. Be polite, but don’t try to be friends with everyone around you. Instead, spend time nurturing your relationships with the people who matter most to you.
  3. Your health is your life, keep up with it. Get an annual physical check-up.
  4. Live below your means. Don’t buy stuff you don’t need. Always sleep on big purchases. Create a budget and savings plan and stick to both of them.
  5. Get enough sleep every night. An exhausted mind is rarely productive.
  6. Get up 30 minutes earlier so you don’t have to rush around like a mad man. That 30 minutes will help you avoid speeding tickets, tardiness, and other unnecessary headaches.
  7. Get off your high horse, talk it out, shake hands or hug, and move on.
  8. Don’t waste your time on jealously. The only person you’re competing against is yourself.
  9. Surround yourself with people who fill your gaps. Let them do the stuff they’re better at so you can do the stuff you’re better at.
  10. Organize your living space and working space.
  11. Get rid of stuff you don’t use.
  12. Ask someone if you aren’t sure.
  13. Spend a little time now learning a time-saving trick or shortcut that you can use over and over again in the future.
  14. Don’t try to please everyone. Just do what you know is right.
  15. Don’t drink alcohol or consume recreational drugs when you’re mad or sad. Take a jog instead.
  16. Be sure to pay your bills on time.
  17. Fill up your gas tank on the way home, not in the morning when you’re in a hurry.
  18. Use technology to automate tasks.
  19. Handle important two-minute tasks immediately.
  20. Relocate closer to your place of employment.
  21. Don’t steal.
  22. Always be honest with yourself and others.
  23. Say “I love you” to your loved ones as often as possible.
  24. Single-task. Do one thing at a time and give it all you got.
  25. Finish one project before you start another.
  26. Be yourself.
  27. When traveling, pack light. Don’t bring it unless you absolutely must.
  28. Clean up after yourself. Don’t put it off until later.
  29. Learn to cook, and cook.
  30. Make a weekly (healthy) menu, and shop for only the items you need.
  31. Consider buying and cooking food in bulk. If you make a large portion of something on Sunday, you can eat leftovers several times during the week without spending more time cooking.
  32. Stay out of other people’s drama. And don’t needlessly create your own.
  33. Buy things with cash.
  34. Maintain your car, home, and other personal belongings you rely on.
  35. Smile often, even to complete strangers.
  36. If you hate doing it, stop it.
  37. Treat everyone with the same level of respect you would give to your grandfather and the same level of patience you would have with your baby brother.
  38. Apologize when you should.
  39. Write things down.
  40. Be curious. Don’t be scared to learn something new.
  41. Explore new ideas and opportunities often.
  42. Don’t be shy. Network with people. Meet new people.
  43. Don’t worry too much about what other people think about you.
  44. Spend time with nice people who are smart, driven, and like minded.
  45. Don’t text and drive. Don’t drink and drive.
  46. Drink water when you’re thirsty.
  47. Don’t eat when you’re bored. Eat when you’re hungry.
  48. Exercise every day. Simply take a long, relaxing walk or commit 30 minutes to an at-home exercise program
  49. Let go of things you can’t change. Concentrate on things you can.
  50. Find hard work you actually enjoy doing.
  51. Realize that the harder you work, the luckier you will become.
  52. Follow your heart. Don’t waste your life fulfilling someone else’s dreams and desires.
  53. Set priorities for yourself and act accordingly.
  54. Take it slow and add up all your small victories.
  55. However good or bad a situation is now, it will change. Accept this simple fact.
  56. Excel at what you do. Otherwise you’ll just frustrate yourself.
  57. Mature, but don’t grow up too fast.
  58. Realize that you’re never quite as right as you think you are.
  59. Build something or do something that makes you proud.
  60. Make mistakes, learn from them, laugh about them, and move along.

30 நாட்களில் பாடலாசிரியர் ஆவதெப்படி..?

1. முதலில் ஒரு பாடலாசிரியருக்கான தகுதிகளை தெரிந்துகொள்ளுங்கள். இயல்பாகவே நீங்கள் அர்த்தம் இல்லாமல் பேசுபவராக, எதையும் எதனுடனும் முடிச்சு போடத் தெரிந்தவராக, மொழிகொலையில் கைத்தேர்ந்தவராக இருந்தால், நுழைவுத் தேர்வில் உங்களுக்கு 100 மதிப்பெண்.

2. சிச்சுவேஷனுக்கு சம்பந்தமேயில்லாமல் உளறவும், கிறுக்கவும், பிறர் பாடல்களிலிருந்து வார்த்தைகளைப் பொறுக்கவும் நிபுணத்துவம் பெற்றிருப்பது கூடுதல் தகுதி. இத்துடன் பிறமொழி வார்த்தைகளைக் கலக்கி காக்டெய்ல் செய்யக் கற்றுக்கொண்டால், நீங்கள் அடுத்த சுற்றுக்குத் தகுதியானவர்.

3. சிரங்கும் நமைச்சலும் எப்படி இணை பிரியாதிருக்குமோ, அப்படித்தான் எதுகை-மோனையும் தமிழ் பாடலும். இவை இல்லாமல் பாடல் இல்லை. பொன்மேனி உருகுதே; என்னாசைப் பெருகுதே; ஏதேதோ நினைவு தோன்றுதே; எங்கேயோ இதயம் போகுதே என்றும், ஆண்டி, வேண்டி, தோண்டி, தாண்டி என ‘காது’ குளிர எழுதுவதே எதுகை. உங்கள் முதல் பாடலைக் கேட்டு, யாராவது தூ..தூ… என துப்பினாலோ, விமர்சன சேற்றை அப்பினாலோ துவண்டுவிட வேண்டாம். இன்றைய எச்சில் மழை, நாளையப் பண மழை, பாராட்டு மழை.

4. பாடலை எழுதுவதற்கு முன், உங்கள் வாயில் வரும் வார்த்தைகளை, சும்மா வைரமுத்து போல், ‘கணீர்’ குரலில், நல்ல அழுத்தமான உச்சரிப்போடு உங்கள் மேன்சன் வாட்ச்மேன், ரூம்மேட், காதலி அல்லது மனைவியிடம் பாடிக் காட்டுங்கள். அம்மாப்பேட்டை, அய்யம்பேட்டை, தேனாம்பேட்டை, தேங்காமட்டை என நீங்கள் எழுதும் கருத்தாழம்மிக்க, கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைத் தொடர்களால் அவர்கள் உங்களைத் திட்டலாம், அடிக்கலாம், இல்லை…தூக்கிப் போட்டும் மிதிக்கலாம். அதற்கெல்லாம் அயர்ந்துவிடாதீர்கள். காரணம், இப்போது நீங்கள் அரைக் கவிஞனாகிவிட்டீர்கள்.

5. மேற்சொன்ன முயற்சி ஒருவேளை உங்கள் உயிருக்கு உலை வைக்கலாம். எனவே, முன்னெச்சரிக்கையாக, எல்.ஐ.சி பாலிசி எடுப்பது விரும்பத்தக்கது. பிரீமியம் கட்ட வசதியில்லாதவரா, கவலை வேண்டாம்: மனதில் தோன்றிய வார்த்தைகளை, ஒரு பேப்பரில் கிறுக்குங்கள். பின் அதை ஒரு கோர்வையாக கோர்க்க, பொறுக்குங்கள். கிறுக்குவதால் நீங்கள் கிறுக்கன் என்றோ, பொறுக்குவதால் நீங்கள் "பொறுக்கி" என அழைக்கப்பட்டால், அதற்காக என் மீது மான நஷ்ட வழக்குத் தொடுக்க முடியாது.

6. நீங்கள் பாடுபொருளாக ‘கொள்ளப்போவதை’ முதலில் உறுதி செய்து கொண்டு தான் மற்றவர்களை கொல்ல வேண்டும். உதாரணமாக "அக்கடானு நாங்க…….. துக்கடானு நீங்க”, “இது பீர் தந்த தொப்பை”, நித்தம் பல முத்தம் பெறும் அவளின் லக்கி நாய்”, “அவள் பாஸாக காரணம் நான் கொடுத்த பிட்டு” என யாரும் நினைக்காத அளவிற்கு, அந்த பொருள் வித்தியாசமாய் இருந்தால் உத்தமம்.

7. முக்கியமாக பாடல் எழுதும்போது, கேட்பவர்கள் தலையைப் பிய்ச்சுக்கிற மாதிரி சில சஸ்பென்ஸ் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, "அசலி, ஃபிசலி என் ரசகளி”, “இந்திரன் தோட்டத்து முந்திரியே”, என்று எழுதிப் பழக‌ வேண்டும். எதார்த்தத்தை புட்டு புட்டு வச்சு ஈஸியா குத்துப் பாட்டு, மெல்லிசைப் பாட்டு எழுதிவிடலாம். உதாரணமாக, “குத்தாம குத்துது ஆம்பளை மீசை; பத்தாம பத்துது பொம்பளை ஆசை”, “லூசுப் பெண்ணே, லூசுப் பெண்ணே, லூசுப் பெண்ணே, லூசுப் பையன் உன்மேலத்தான் லூசா சுத்துறான்”.


8. இவ்வகையான‌ எதுகை, மோனை தவிர, நீங்கள் நடுநடுவே மானே, தேனே, பொன் மானே போன்றவற்றையும் கண்டுபிடித்து உட்புகுத்தினால், நல்லதொரு பாடலை மேலும் சுவையாக சமைக்க முடியும். அவ்வாறு சமைக்கும் போது மெட்ராஸ் தமிழுடன் நக்கல், பில்டப், குழப்பம், மர்மம் மற்றும் இன்ன பிற சமாச்சார‌ங்கள் சரியாக இருக்க வேண்டும்.

9. உடம்பில் மலச்சிக்கல் இருந்தால் எப்படி சீக்கிரத்தில் வராது பாடுபடுத்துமோ, அப்படித்தான் மனச்சிக்கல் இருந்தாலும் பாடல் கொஞ்சத்தில் வராது. அதே சமயம், இந்த இடத்தில்தான் பிறக்குமென்றும் சொல்ல முடியாது. உதாரணமாக, நீங்கள் சாலையில் நடக்கும் போது மோதுவது போல் வரும் வாகனமும், சடன் பிரேக்கில் அது குலுங்கி நிற்கும் அழகும் கூட நல்லதொரு பாடல் படைக்க வல்லவைதாம். சில சமயங்களில் மூத்திர சந்தில் நுழையும்போது, டாஸ்மாக்கில் கடைப் பரப்பும்போது, சில சமயங்களில் கழிவறைகளிலும். எனவே, எப்போதும் அலர்ட்டாக, காகிதமும், பேனாவும் கொண்டு செல்வது உத்தமம்.

10. இப்போது, ஓரளவு உங்களுக்கு ஒரு பாடலாசிரியருக்குரிய ஒரு 'கெத்து' வந்திருக்கும். அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணி கொண்டுவந்தீர்களேயானால், இந்நாள் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா நாட்களும் தமிழ் பாடல்களால் மக்களைக் கிறங்கடிக்க முடியும் (மக்களை காது கிழிய நோகடிக்க முடியும் என்று வஞ்சப்புகழ்ச்சி அணியில் சொல்வதாக நீங்கள் அர்த்தப்படுத்திக் கொண்டால் அடியேன் பொறுப்பல்ல) என்பதை நான் சொல்லிதான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. ஏனென்றால் தற்போது நீங்களும் ஒரு கவிஞர் அல்லது கவிதாயினி. வாழ்த்துக்கள்.

Thursday, June 2, 2011

குறைந்த செலவில் துணைவேந்தர் பதவி வேண்டுமா?

குறைந்த செலவில் துணைவேந்தர் பதவி வேண்டுமா? உடனடியாக இந்த எண்ணில் தொடர்புகொள்ளவும்' என, பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படாத குறை தான். அந்தளவுக்கு துணைவேந்தர் பதவியைப் பெறும் விதம், விமர்சனங்களுக்கு உள்ளாகிவிட்டது.


"துணைவேந்தர்' என்றாலே, கல்வியாளர்கள் முதல் கட்சிக்காரர்கள் வரை, எழுந்து நின்ற காலம் போய், கரைவேட்டிகளைக் கண்டால், துணைவேந்தர்கள் எழுந்து நிற்கும் காலம் வந்துவிட்டது. காரணம் மிக எளிமையானது. அந்தக் கரைவேட்டிகளின் தயவில், அவர்கள் துணைவேந்தர் பதவியை அடைந்தது தான்.கடந்த பத்து ஆண்டுகளாகத் தான் இந்த நிலைமை. குறிப்பாக, கடந்த ஐந்தாண்டுகளில், மிக மோசம். கிட்டத்தட்ட, எல்லா பல்கலையின், எல்லா துணைவேந்தர்கள் மீதும், ஏதேனும் ஒரு புகார் அல்லது சர்ச்சை இருந்தது.கோவை அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் மீது, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு புகுந்தது. "சர்ச்சைக்குரியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்' என, அப்போதைய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. "திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தராக இருந்த பொன்னவைக்கோ மீதும் புகார்கள் இருந்தன; அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்பதே, அரசின் பிரமாணப் பத்திரம் மூலம் தான் உலகத்துக்கு தெரிந்தது.இவர்கள் இரண்டு பேர் தான் என்றில்லை. சர்ச்சையில் சிக்கியவர்களின் பட்டியல் போட்டால், பக்கம் போதாது. தற்போதைய வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதி, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் உதவியாளராக இருந்தவர். சென்னைப் பல்கலை துணைவேந்தர் திருவாசகம், தி.மு.க., ஆதரவாளராக அறியப்பட்டவர்; முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புத்தகங்களை முழுமூச்சாக மொழி பெயர்த்தவர். அதனால் தானோ என்னவோ, கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்ததுமே, சென்னை பல்கலைக்கு நியமிக்கப்பட்டார்.


எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் துணைவேந்தராக பணியாற்றும் மயில்வாகனன் நடராஜன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்ப டாக்டராகத் திகழ்ந்தவர். அவர் மீது, ஜாதிச் சாயமும் பூசப்பட்டது. யாரும் எதிர்பாராத விதத்தில், சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்ட விஸ்வநாதன், அதற்கு முன், எந்தக் கல்லூரியிலும் துறைத் தலைவராகக் கூட இருந்ததில்லை. கூட்டணிக் கட்சித் தலைவரின் கடும் நெருக்கடி காரணமாக நியமிக்கப்பட்டதாக புகார்.திறந்தவெளி பல்கலை துணைவேந்தர் கல்யாணி அன்புச்செல்வன், முன்னாள் நிதியமைச்சர் அன்பழகனின் உறவினர். கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் மருமகன் மா.ராஜேந்திரன், தஞ்சை தமிழ்ப் பல்கலைத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இவர், எந்தப் பல்கலையிலும் பணிபுரிந்ததில்லை.


பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன், கல்வியாளர் தான் என்றாலும், அப்பகுதியில் உள்ள பெரும்பான்மை சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், அவர் நியமிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தராக மீனா அறிவிக்கப்பட்டது, கல்வியாளர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக, ம.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவிய, தி.மு.க.,வில் எம்.எல்.ஏ., சீட் கேட்ட, ஊரறிந்த அரசியல்வாதியான சபாபதி மோகனுக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் பதவி தாரைவார்க்கப்பட்டது தான், "ஹைலைட்!'


ஆட்சியாளர்களின் அபிலாஷைகள் ஒருபுறம் என்றால், அதிகார வர்க்கத்தின் உச்சத்தில் இருப்பவரின் மகன், தனது நண்பரோடு இணைந்து, வசூல் வேட்டை நடத்தியதாக பெரியளவில் பேச்சு அடிபட்டது. அந்த நண்பருக்கு என்ன கல்வித் தகுதி; துணைவேந்தர் நியமனத்தில் கூட புரோக்கர்களின் தலையீடு சரிதானா என்பதெல்லாம், விடை தெரியாத வினாக்கள். இவர்கள் தரப்பிலிருந்து, துணைவேந்தர் பதவிக்கு, இரண்டு கோடி ரூபாயில் இருந்து ஏழு கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்டது. இதெல்லாம், பிரபல பல்கலைகளுக்குத் தான். ஒருமைப் பல்கலை, கால்நடை பல்கலைக்கெல்லாம், "கட்டணம்' கம்மி.சரி, எல்லாமே முறைகேடு தானா? எதுவுமே உருப்படியாக நடக்கவில்லையா என்றால், ஒன்று மட்டுமே சொல்லும்படி இருந்தது. சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக முத்துச்செழியன் நியமிக்கப்பட்டது, முழுக்க முழுக்க வெளிப்படையாக நடந்தது. ஆன்-லைனில் தான் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. எதனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும், அவரது தேர்விலேயே விளக்கப்பட்டிருந்தது. அதனால், அந்த நியமனத்தில் மட்டும் தான் எந்த சர்ச்சையும் எழவில்லை.


தமிழகத்தில் உள்ள 23 பல்கலைக் கழகங்களில் தற்போது மதுரை காமராஜர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், கொடைக்கானல் அன்னை தெரசா, தஞ்சை தமிழ்ப் பல்கலை ஆகியவற்றில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. இவற்றின் நியமனங்களிலாவது சர்ச்சையோ, புகாரோ இல்லாமல், வெளிப்படையான, நேர்மையான முறையில் துணைவேந்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


கோடிகள் புரள்வது ஏன்?சில கல்வியாளர்கள், துணைவேந்தர் பதவியை லட்சியமாக நினைப்பர். அவர்களால் இவ்வளவு தொகையைச் செலவழிக்க முடியாது. எனவே, பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் அல்லது கல்வி நிறுவனங்கள் மூலம் பணம் கொடுத்து, "ஸ்பான்சரில்' பதவியைப் பிடிப்பர். முதலீடு செய்த பணத்தை மீட்க, தொழில் நிறுவனங்கள் முயற்சி செய்யாதா, என்ன?பல்கலைக் கழகங்களில் படிப்பு தான் வரும்; பணம் எங்கிருந்து வரும்? புது கல்லூரிகளின் இணைப்பு, பணியிட நியமனம், புதிய பாடத்திட்டங்களுக்கு அனுமதி, கூடுதல் மாணவர் ஒதுக்கீடு, தர நிர்ணயம் என ஏராளமான விஷயங்களில், பல்கலைக் கழகங்களை நம்பி கல்லூரிகள் இயங்குகின்றன. தரத்தின் அடிப்படையில் நடந்துவந்த இவ்விஷயங்கள் தான் இப்போது பணத்தை நம்பி செயல்படத் தொடங்கிவிட்டன.


துணைவேந்தராக தகுதி எது?துணைவேந்தர் பதவிக்கான தகுதிகள் பற்றி யு.ஜி.சி.,யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில், குறைந்தது பத்து ஆண்டுகளாவது பேராசிரியராக பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான, தகுதிவாய்ந்த நிறுவனத்தில் பத்து ஆண்டுகளாவது ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.மூன்று அல்லது ஐந்து நபர் கொண்ட குழு தான், துணைவேந்தரை தேர்ந்தெடுக்க வேண்டும். இக்குழுவின் தலைவராக, கவர்னரின் பிரதிநிதி இருக்க வேண்டும். ஒருவர், யு.ஜி.சி.,யின் பிரதிநிதியாகவும், இன்னொருவர் பல்கலை சிண்டிகேட் பிரதிநிதியாகவும் இருக்க வேண்டும்.இவர்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில், தகுதிவாய்ந்த கல்வியாளர்கள் மூன்று பேரின் பட்டியலை, கவர்னரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களில் ஒருவரை புதிய துணைவேந்தராக, கவர்னர் நியமிப்பார். பட்டியலில் உள்ள மூன்று பெயர்களையும் நீக்கிவிட்டு, புதுப் பட்டியலை தயாரிக்க உத்தரவிடும் அதிகாரமும், பல்கலைக் கழகங்களின் வேந்தராகிய கவர்னருக்கு உண்டு. அப்படி ஒரு சம்பவம், மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் ஏற்கனவே ஒரு முறை நடந்திருக்கிறது.

Thursday, May 5, 2011

தமிழ்ச் சமூக வரலாறு

சங்க காலம்

தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய (FEUDAL) முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின. இதனடிப்படையில் வெவ்வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி (UNEVEN DEVELOPMENT)சங்ககாலத்தில் நிலவியது.

நிலப் பாகுபாடு

மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்பட்டன. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெம்மையால் தம் நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கும். இது தற்காலிகமான ஒன்று. இந்நிலப்பகுதி பாலை எனப்பட்டது.

மக்களும் பண்பாடும்

குறிஞ்சி நில மக்கள் சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர், குன்றவர் என அழைக்கப்பட்டனர். தொடக்கத்தில் வில், அம்பு, வேல் ஆகியவற்றின் துணையுடன் வேட்டையாடி வாழ்ந்தனர். மூங்கிலரிசி, திணை, மலை நெல், தேன், கிழங்குகள் ஆகியனவும் உணவாகப் பயன்பட்டன. உணவு தேடி வாழும் வாழ்க்கை இங்கு நிலவியது. பின், புன்புல வேளாண்மை உருவாகியது. சேயோனாகிய முருகன் இவர்களுடைய கடவுளாக இருந்தான். பறை, தொண்டகப்பறை, குறிஞ்சியாழ் ஆகியன இங்கு வழங்கிய இசைக் கருவிகள். வள்ளிக்கூத்து குறிஞ்சி நிலத்துக்குரிய ஆட்டக் கலையாகும்.

ஆடுமாடுகளை மேய்க்கும் மேய்ச்ச்சல் நில வாழ்க்கையை மையமாகக் கொண்டது முல்லை நிலம். வரகு, சாமை, கேழ்வரகு, கடலை, அவரை, துவரை ஆகியன மழையை நம்பி மேற்கொண்ட வேளாண்மையில் கிட்டின. மாயோனாகிய திருமால் முல்லை நிலத்தின் கடவுள். ஏறுகோட்பறை, குழல், முல்லையாழ் ஆகியன இந்நிலத்துக்குரிய இசைக் கருவிகள். உணவு தேடும் வாழ்க்கையைக் கடந்து உணவு உற்பத்தி செய்யும் நிலையும் நிரைகளை சொத்துக்களாக கொள்ளும் நிலையும் இங்கு உருவாகின.

மலையிலும் காட்டிலும் அலைந்து திரிந்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று ஆற்றங்கரையில் நிலையாக வாழத் தொடங்கிய இடம் மருத நிலமாகும். இங்கு உழு தொழிலின் மூலம் உணவு உற்பத்தி நிகழ்ந்தது. ஆற்று நீரை நேரடியாகவும் நீர்நிலைகளில் தேக்கி வைத்தும் பயன்படுத்தினர். செந்நெல், வெண்நெல், கரும்பு, மஞ்சள் (பிற்காலத்தில் வாழை) ஆகியன முக்கிய உற்பத்திப் பொருளாயின. கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகளும், உபரி நெல்லை மூலதனமாகக் கொண்டு பண்டமாற்று வாணிபத்தை மேற்கொண்ட வாணிப குழுக்களும் உருவாயின. சிற்றூர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெறத் தொடங்கின. நெல்லரிப் பறையும், மருதயாழும் இந்நிலத்தின் இசைக் கருவிகளாகயிருந்தன. தச்சர், கொல்லர், குயவர் ஆகிய கைவினைர்களின் தோற்றமும் இங்குதான் உருவாகியது.

நெய்தல் நிலப்பகுதியில் மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி, உலர்மீன் உற்பத்தி செய்தலும், இவற்றை பிற நிலப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று பண்டமாற்று செய்தலும் முக்கிய தொழில்கள். இதன் வளர்ச்சி நிலையாகக் கடல் வாணிபம் உருவாகியது. நெய்தல் குடியிருப்புகள் பட்டினம், பாக்கம் என்றழைக்கப்பட்டன. வருணன் (வண்ணன்) இந்நிலத்தின் தெய்வம். நாவாய்பறையும், நெய்தல் யாழும் இசைக் கருவிகள்.

வளமற்ற நிலப்பகுதியான பாலையில் வழிப்பறியும் கொள்ளையும் மக்களின் துணைத் தொழில்களாயின. இங்கு வாழ்ந்த மறவர்களின் குடியிருப்பு, கொல் குறும்பு எனப்பட்டது. கொற்றவை, இந்நிலத்தின் தெய்வம். நிறைகோட்பறை, சூறைகோட்பறை, வாகையாழ் ஆகியன இந்நிலத்தின் இசைக் கருவிகள்.

சங்ககால அரசியல்

சங்ககாலத் தமிழகம் மன்னராட்சியின் கீழ் செயல்பட்டது. ஆட்சி புரிவோர் குறுநில மன்னர்கள். வேந்தர் என இரண்டு வகையாக அழைக்கப்பட்டனர். குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை ஆகிய நான்கு நிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குறவர், ஆயர், பரவர், மறவர் ஆகிய மக்கட் பிரிவினர் தத்தமக்கென சுயேச்சையான ஆளுவோரைக் கொண்டிருந்தனர். இவர்களையே குறுநில மன்னர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். குறுநில மன்னர்களுக்கும் அவர்களால் ஆளப்படும் மக்களுக்குமிடையே ஆழமான வேறுபாடுகள் நிலவவில்லை. மருதநில அல்லது நெய்தல் நில நகர் ஒன்றினை மையமாகக் கொண்டு பரந்த நிலப்பகுதியை ஆட்சிபுரிந்தவர்கள் வேந்தர் எனப்பட்டனர். சேரர், சோழர், பாண்டியர் என மூன்று வேந்தர்கள் மட்டுமே பெருநிலப் பகுதியை ண்டனர். வாய்ப்பு நேரிடும் போது குறுநில மன்னர்களின் நிலப் பகுதியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.

மூவேந்தர்களுக்கு துணை புரிய 1. அமைச்சர், 2. புரோகிதர், 3. சேனாதிபதி, 4. தூதர், 5. ஒற்றர் என்போரைக் கொண்ட ஐம்பெருங் குழுவும், 1. கரணத் தலைவர், 2. கருமகாரர், 3. கனகச்சுற்றம், 4. கடைகாப்பாளர், 5. நகரமாந்தர், 6. படைத் தலைவர், 7. யானை வீரர், 8. இவுளிமறவர் என்போரைக் கொண்ட எண்பேராயம் என்ற அமைப்பும் இருந்தன. ஆயினும் இவ்விரு அமைப்புகளும் மன்னனைக் கட்டுப்படுத்தும் தன்மையன அல்ல. குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் பொதியில் மன்றம் என்ற அமைப்புகள் செயல்பட்டன.

சமயம்

ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட ஆவி உலகக் கோட்பாடும் (Animism)‘குலக்குறி’ (Totem) வழிபாடும் மூத்தோர் வீரர்வழிபாடும் சங்ககாலச் சமயத்தில் செல்வாக்கு செலுத்தின. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டி வழிபடும் நடுகல் வழிபாடு பரவலாக இருந்தது. கடிமரம், காவல்மரம் என்ற பெயரில் குறிப்பிட்ட மரங்கள் புனித மரங்களாகக் கருதப்பட்டன. பாம்பு வழிபாடும் வழக்கிலிருந்தது. திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்ககாலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை. சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. வாலியோன் என்ற பெயரில் பலராமர் வழிபாடு இருந்துள்ளது. சமணம், பெளத்தம் ஆகிய வடபுல சமயங்கள் இங்கு பரவின. வடமொழித் தாக்கத்தின் விளைவாக வேள்விகள் நிகழ்ந்தன. சங்ககால கவிஆர்கள் சிலர் இவ்விரு சமயங்களையும் தழுவியிருந்தனர். இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கும் நிலையாமைக் கோட்பாடு செல்வாக்குப் பெறவில்லை. வாழ்க்கை உவப்புக் கொள்கையே மேலோங்கியிருந்தது.

பொருளியல்

நாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும். தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன.

இலக்கணம்

தமிழ் மொழி தொன்மையான நூலாக இன்று நம் பார்வைக்குக் கிட்டுவது தொல்காப்பியமாகும். தனக்கு முன்னால் வாழ்ந்த நூலாசிரியர்களின் நூல்களை கற்றுத் தேர்ந்து தொல்காப்பியர் இந்நூலை உருவாக்கியுள்ளார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது. பொதுவாக மொழிகளின் இலக்கணம் என்பது எழுத்து, சொல் யாப்பு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால் தொல்காப்பியம் இவை மூன்றுடன் மட்டுமின்றி மனித வாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில் பொருளதிகாரம் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளது.

இலக்கியம்

தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக சங்ககாலம் அமைந்தது. இக்காலத்தில் தோன்றிய பெரும்பான்மைப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பெயரில் பிற்காலத்தில் தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. 1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு, 4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல், 6. கலித்தொகை, 7. அகநானூறு, 8. புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்ற தொகுப்பில் அடங்குகின்றன. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பல்வேறு கவிஆர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை. 1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல் வாடை, 8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம் என்ற பத்து நூல்களும் பத்துப்பாட்டு எனப் பெயர் பெற்றன. இவற்றுள் திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் நக்கீரராலும், எஞ்சிய எட்டு நூல்களும் எட்டு கவிஆர்களாலும் இயற்றப்பட்டன. இவ்விலக்கியங்களின் தனிச்சிறப்பு இவை அகம் புறம் என்ற பொருள் பாகுபாடுகளைக் கொண்டிருப்பதாகும். மனிதர்களின் அகம் (மனம்) சார்ந்த காதல் தொடர்பான செய்திகளைக் கூறுவது அகத்திணை ஆகும். இதற்குப் புறத்தேயுள்ள கல்வி, வீரம், கொடை, நீதி அறமல்லன போன்றவற்றைக் குறிப்பது புறத்திணையாகும். அகநூல்களில் இடம்பெறும் காதலர்களை, இயற்பெயர் சுட்டிக் குறிப்பிடக் கூடாது, என்ற தொல்காப்பியர் விதியை சங்ககாலக் கவிஆர்கள் உறுதியாகக் கடைபிடித்தனர்.

சங்ககாலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். இக்காலத்தில் உருவான பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படுகின்றன. இவற்றுள் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்ற ஆறு நூல்களும் சங்ககால அகத்திணைமரபு சார்ந்தவை. எஞ்சிய நூல்களில் திருக்குறள் தவிர்ந்த, நாலடியார், பழமொழி, ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக் கோவை, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி என்ற பதினொறு நூல்களும் புறத்திணை சார்ந்தவை. குறள் அகமும், புறமும் சார்ந்த நூலாகும்.

பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் தலையான இடத்தைப் பெறுவது திருக்குறள். 1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. எச்சமயத்தையும் சாராது வாழ்வியல் நெறிகளைக் கூறுவது இதன் தனிச் சிறப்பாகும். சங்க காலத்தில் வாழ்வியலின் பகுதியாகக் கருதப்பட்ட கள்ளுண்டல், பரத்தையற் பிரிவு, புலால் உண்ணுதல், சூதாடல் ஆகியன வள்ளுவரால் கடிந்தொதுக்கப்படுகின்றன. திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பெறும் நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூல் குறளுக்கு மாறாக உலகியல் வாழ்க்கை மீது வெறுப்பை வெளிப்படுத்தி துறவறத்தை வற்புறுத்துகிறது. இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரு நூல்களும் வைதீக சமயச் சார்பானவை. ஒழுக்கங்களின் தொகுதி என்ற பொருளைத் தரும் ஆசாரக் கோவை என்ற நூல் வடமொழி நீதிநூல்கள் சிலவற்றின் சாரமாக அமைகின்றது. பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியன சமணம் சார்ந்து நீதி கூறுகின்றன.

பல்லவர் காலம் (கி.பி. 3 முதல் 9 வரை)

சங்ககாலத்துக்குப் பின் களப்பிரர் என்ற அரச மரபினரின் ஆட்சி நடைபெற்றது. இவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது காலத்தை இருண்ட காலம் என்று சொல்வது பொதுவான மரபு. ஆனால் திரமிள சங்கம் என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தமையை சதாசிவபண்டாரத்தார் சுட்டிக்காட்டி, தமிழ் மொழிக்கு இது இருண்ட காலமல்ல என்பதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். களப்பிரர் ஆட்சிக்குப் பின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி. பி. 260 தொடங்கி 450 ஆண்டுகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி நிலை பெற்றிருந்தது.

சமயம்

சைவமும், வைணவமும் எழுச்சி பெற்ற காலம் பல்லவர் காலம் ஆகும். சைவநாயன்மார்களும், வைணவ ழ்வார்களும் தோற்றுவித்த சமய இயக்கம் பக்தி இயக்கம். இவ்விரு சமயத்தினரும் சமணத்துடனும், பெளத்தத்துடனும் மாறுபட்டு அவற்றின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தேவார ஆசிரியர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ் நாடெங்கும் பயணம் செய்து சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர். இவர்களால் பாடப்பெற்ற சைவக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள் எனப் பெயர் பெற்றன. இவர்களைப் போன்றே ஆழ்வார்களும் வைணவக் கோயில்களுக்குச் சென்று பக்திப் பாசுரங்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்கள் மங்களா சாசனம் செய்த திருப்பதிகள் எனப்பட்டன.

பெளத்த சமணத் துறவிகள் வாழும் சமய மடங்களில் சமய நூல்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. காஞ்சிபுரம் பெளத்த மடத்தில் பயின்ற போதிதருமர், போதிருசி என்ற இரு துறவிகளும் சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று சென் புத்தமதப் பிரிவை பரப்பினர். பீகாரில் இருந்த உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும் இருந்த தருமபாலர் காஞ்சியில் பிறந்து பயின்றவர்தாம். வெளிநாட்டுப் புத்ததுறவிகள் இங்கு வந்து சமய நூல்களைக் கற்றுச் சென்றனர்.

பல்லவர் அரசு

சங்ககாலத்தைப் போன்றே பல்லவர் காலத்திலும் ஆட்சிமுறை பிறப்பு வழி உரிமையாய் இருந்து வந்தது. மன்னருக்குத் துணைபுரிய அமைச்சர்கள் இருந்தனர். ஆட்சிப் பகுதியானது கோட்டம், நாடு, ஊர் என்று மூன்று பிரிவுகளாக பகுக்கப்பட்டது. நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் நாட்டார் என்றும், ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பான வேளாளர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். இவை தவிர பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்களைப் பிராமணர்களே நிர்வகித்து வந்தனர். இம்மூன்று வகையான நிர்வாகிகளும் கோவில் மான்யங்கள், நீர்ப்பாசனம், நீதி விசாரணை, நிலவுரிமை போன்றவற்றை கவனித்து வந்தனர். இதன் பொருட்டு வாரியங்கள் பல உருவாக்கப்பட்டன. இவ்வாரியங்கள் அதற்கென்று விதிக்கப்பட்ட பணியினைச் செய்து வந்தன. சான்றாக வேளாண்மைக்கு ஆதரவான ஏரிகளைப் பராமரிக்கும் வாரியம் ஏரி வாரியம் என்றும் தோட்டங்களைப் பராமரிக்கும் வாரியம் தோட்ட வாரியம் என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.

கலை

பல்லவர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் வளர்ச்சியடைந்தது. கருங்கற்களினால் கட்டிடங்களை கட்டும் பணி பல்லவர் காலத்தில்தான் உருவாகியது. குகைகளை உருவாக்கி அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் பல்லவர் காலத்தில் செல்வாக்கு பெற்றன (பல்லவர்களுக்கு முன்னர் பாண்டியர்கள் குடைவரைக் கோவில்களை உருவாக்கி உள்ளனர் என்பது தொல்லியல் வல்லுநர் நாகசாமியின் கருத்து). கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவர் கால சிற்பக்கலைக்கு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உள்ள கோவில் சிற்பங்கள் சான்று பகர்கின்றன. இவை தவிர இசையும், நடனமும் பல்லவர் காலத்தில் தழைத்தமைக்கு, குடுமியான்மலை, திருமெய்யம் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சித்தன்ன வாசலில் தீட்டப் பெற்றுள்ள நடன மங்கையரின் ஓவியங்களும் சான்று.

பல்லவர் காலத்தில் வடமொழி செழித்து வளர்ந்தது. பல்லவர்கள் வடமொழி ஆர்வலர்களாக இருந்தமையே இதற்குக் காரணமாகும். பல்லவ மன்னர்கள் அவையில் நடிப்பதற்காக பாஷகவி என்பவர் வடமொழி நாடகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார். பெளத்த துறவிகளைப் பகடி செய்யும் வகையில் மத்த விலாச பிரகசனம் என்ற எள்ளல் நாடகத்தை மகேந்திர வர்மன் வடமொழியில் எழுதியுள்ளான். அணி இலக்கண அறிஞரான தண்டி என்னும் கவிஞர் எழுதிய காவிய தரிஸனம் என்ற வடமொழி அணி இலக்கண நூல் தண்டியலங்காரம் என்ற பெயரில் தமிழில் வெளியாயிற்று. பாரதக் கதையைக் கூறும் பாரத வெண்பாவும் நந்திக் கலம்பகம் என்ற சிற்றிலக்கியமும், பெருங்கதை என்ற காப்பியமும் பல்லவர் காலத்தில் உருவான குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியங்கள் ஆகும்.

சோழர் காலம் (கி.பி. 10 - கி.பி. 13)

பல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசு கும். சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான். சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது. சுப்பாராயலுவின் கருத்துப்படி 10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை - காவல் - வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்.

கலை இலக்கியம்

சோழர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் செழித்து வளர்ந்தன. தன் நிழலைத் தனக்குள்ளே தருக்குடனே தாங்கி நிற்கும் தஞ்சைப் பெருங்கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களும் அங்குள்ள சிற்பங்களும் சோழர்காலக் கட்டிடக் கலைக்குச் சான்றுகளாய் உள்ளன.

சோழர் கால இலக்கியங்களில் சைவ சமயச் சார்புடைய இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உருவாயின. உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எட்டு சைவ சித்தாந்த நூல்களை இயற்றியுள்ளார். சைவ சமயத்தின் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறும் திருவிளையாடற் புராணம் என்ற நூலைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதியுள்ளார்.

ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவால நடையில் ஈடு எனப்படும் விரிவுரை இக்காலத்தில் உருவாகியது.

சமண சமயத்தைச் சார்ந்த திருத்தக்கத்தேவர் எழுதிய சீவகசிந்தாமணி, கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை ஆகிய காவியங்களும் வளையாபதி, நீலகேசி என்ற சமணக் காப்பியங்களும் குண்டலகேசி என்ற பெளத்த காப்பியமும் தோன்றின. திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, புறப்பொருள் வெண்பா மாலை, வீரசோழியம், வெண்பாப் பாட்டியல் ஆகிய இலக்கண நூல்களும் உருவாயின.

செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி ஒட்டக்கூத்தரின் மூவருலா, கம்பரின் இராமாயணம், புகழேந்தியின் நளவெண்பா ஆகியன சோழர் காலத்தில் தோன்றிய பிற இலக்கியங்கள் ஆகும். இளம்பூரணர், சேணாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும், பரிபாடலுக்கும், திருக்குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகரும் சோழர் காலத்தவரேயாவர்.

சோழர் காலத்தில் வடமொழிப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனங்கள் (கடிகா) பல நிறுவப்பட்டன. நூல்களைச் சேகரித்து வைக்கும் நூலகம் போன்ற அமைப்பு சோழர் காலத்தில் இருந்தது. இதை சரஸ்வதி பண்டாரம் என்றழைத்தனர்.

கிராமசபை

சோழர் ஆட்சியின் சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலி எனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில் தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டு ஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில் உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35 வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல் என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும் ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள், ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.

பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம் என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.

சமூகம்

சோழர் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.

பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர். சோழர் காலச் சாதிகள் வலங்கையர், இடங்கையர் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவ்விரு பிரிவுகளின் உருவாக்கம் குறித்து வினோதமான புராணக் கதைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 98 குலங்கள் இடம் பெற்றிருந்தன. வலங்கையர் இடங்கையரிடையே சில நேரங்களில் பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்தன. பெரும்பாலும் இடங்கையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தனர். சில நேரங்களில் வலங்கையினர் இடங்கையினர் ஆகிய இரு வகுப்பினரும் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்துப் போராடியுள்ளனர். பெரும்பாலும் இப்போராட்டம் வரி எதிர்ப்பை மையமாகக் கொண்டேயிருந்தது.

தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.

ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.

அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.

சமயம்

சோழர் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (இருள் + தளை) என்ற மூன்றும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இதன்படி உலக உயிர்கள் ஆணவம் - கன்மம் - மாயை என்ற மூன்றையும் உள்ளடக்கிய பாசத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும். சைவசமய இலக்கியங்களாகப் பன்னிரு திருமுறைகள் அமைகின்றன. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.

தமிழ் வைணவர்களின் புனித நூலான நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற தொகுப்பு சோழர் காலத்தில்தான் உருப்பெற்றது.

பாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு)

சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, எண்ணெய் எடுத்தல், வெல்லம் தயாரித்தல், உப்பு விளைவித்தல் கிய தொழில்கள் நிகழ்ந்தன. பாண்டியர் ஆட்சியில் சிறப்புமிக்க தொழிலாக முத்து குளித்தல் விளங்கியது. உரோம் நாட்டிற்கு இம்முத்துக்கள் ஏற்றுமதியாகி தங்கத்தைக் கொண்டு வந்தன. மார்கோபோலோ என்ற இத்தாலி நாட்டு சுற்றுப் பயணி மாரவர்மன் குலசேகரன் என்ற பாண்டிய மன்னன் 1200 கோடி பொன்னைச் சேமித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொலைத் தண்டனை பெற்ற கைதிகள் முத்து குளித்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்த அரேபியர்கள் இங்கே தங்கள் சமயத்தை பரப்பினர். பாண்டிய மன்னனின் அரசவையில் இஸ்லாமியர் சமயத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் இடம் பெற்றிருந்தார். பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. மணிக்கிராமம், அஞ்சு வண்ணத்தார் என்ற வணிகச் சங்கங்களும் நானாதேசிகன் என்ற பெயரில் அயல்நாட்டு வாணிபம் மேற்கொண்ட குழுவும் இருந்தன. அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. இது குறித்து வசப் என்ற அரேபியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"அந்தக் குதிரைகள் வந்து இறங்கியதும், அவற்றிற்குப் பச்சை வாற்கோதுமையைத் தருவதற்கு மாறாக, வறுத்த வாற்கோதுமையையும் வெண்ணெய் சேர்த்துச் சமைத்த தானியத்தையும் தீனியாகப் போட்டுக் காய்ச்சிய ஆவின் பாலைக் குடிப்பதற்குக் கொடுக்கிறார்கள். இது மிகவும் விசித்திரமான செயல். லாயத்தில் முளைகளை அடித்து, குதிரைகளை அவற்றோடு கயிற்றால் பிணைத்து, அங்கேயே அவற்றை 40 நாள் விட்டு விடுகிறார்கள். அதனால் குதிரைகள் கொழுத்துப் பருத்துப் போகின்றன. பின்னர், அவற்றிற்குப் பயிற்சியளிக்காமலும் அங்கவடி முதலிய குதிரைச் சாமான்களைப் பூட்டாமலும், அவற்றின் மீது ஏறியுட்கார்ந்து இந்திய வீரர்கள் அவற்றைப் பிசாசைப் போல் ஓட்டுகிறார்கள். அவற்றின் வேகம் புரக்கின் வேகத்திற்குச் சமமாயிருக்கிறது. மிகுந்த வலிமையும் வேகமும் சுறுசுறுப்பும் உடைய புதிய குதிரைகளும் வெகு விரைவில் வலிமையற்ற, வேகமற்ற, பயனற்ற, மதியற்ற குதிரைகளாய் மாறிவிடுகின்றன. அதாவது, அவை எதற்கும் உதவாத இழி நிலையை எய்தி விடுகின்றன. சாட்டையடி வாங்காமலே மிக வேகமாக ஓடக்கூடிய வலிமைமிக்க அந்தக் குதிரைகள் இந்நாட்டுத் தட்பவெப்ப நிலையைத் தாங்க மாட்டாமல் வலியிழந்து வாடிப் போகின்றன. எனவே, அவை சவாரி செய்வதற்குப் பயனில்லாமல் போகின்றன. அதனால் ஆண்டு தோறும் புதிய குதிரைகளை வாங்குவது இன்றியமையாததாகி விடுகின்றது. எனவே ஆண்டுதோறும் முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மா.பாருக்குக் குதிரைகளைக் கொண்டு வருகிறார்கள் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 276). குதிரைக்கு லாடம் கட்டுபவர்களும் இங்கே இல்லை. குதிரை வணிகர்கள் இலாடக்காரர்களை அழைத்துக் கொண்டு வருவதில்லை. லாடக்காரர் யாதேனும் வர முயன்றாலும் அவர்களை வணிகர்கள் தடுத்து விடுகிறார்கள். அப்படிச் செய்யாவிட்டால் குதிரை வாணிகம் குறைந்து போகுமென்று அவர்கள் அஞ்சினார்கள். அந்த வாணிகத்தில் அவர்களுக்கு ஆண்டுதோறும் பெரும் பொருள் கிடைத்தது. அந்த லாபத்தை இழப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. குதிரைகளை அவர்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள்.

என்று மார்கோபோலாவும் குறிப்பிட்டுள்ளார் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 273 - 274).

விஜயநகரப் பேரரசு (கி.பி. 14 - 16)

பாண்டியர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் அடுத்தடுத்து வடஇந்திய இஸ்லாமியர்களின் படையெடுப்புக்கு ஆளானது. கி.பி. 1311இல் மாலிகாபூரும், 1318இல் குஷ்ருகானும், 1323இல் முகமது பின் துக்ளக்கும் படையெடுத்தனர். துக்ளக் பரம்பரையினரின் ஆட்சி டெல்லியில் நிலவியபோது அதன் 23வது மாநிலமாக தமிழகம் (தென்னிந்தியா) ஆனது. 1378 வரை இந்நிலை நீடித்தது. கி.பி. 1378இல் விஜயநகரப் பேரரசை நிறுவிய இரு சகோதரர்களில் ஒருவராகிய புக்கன் என்பவனின் மகன் குமாரகம்பனன் என்பவன் மதுரையின் மீது படையெடுத்து விஜயநகரப் பேரரசின் ஆட்சியை நிறுவினான். இதன்பின் தமிழகம் விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் மறைந்து போன சோழப் பேரரசின் ஆட்சிமுறையே பெரும்பாலும் பாண்டியர் ஆட்சியில் தொடர்ந்தது. ஆனால் விஜயநகரப் பேரரசு புதிய ஆட்சியமைப்பையும், நிறுவனங்களையும் தோற்றுவித்தது. மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் என நான்கு மண்டலங்கள் உருவாயின. இவற்றை நிறுவகிக்க மண்டலாபதி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிலவிய கிராம ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டது. சாதி வேற்றுமையும், தீண்டாமையும் இறுக்கமாயின. அடிமைமுறை பரவலாகியது. சைவமும், வைணவமும் செல்வாக்குப் பெற்றன. அதே நேரத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையே சமயப் பூசல்கள் உருவாயின.

நில அளவுகோலை மாற்றி நிலத்தை அளந்ததன் விளைவாக நிலத்தின் பரப்பு அதிகரித்து வரியளவு உயர்ந்தது. நிலக்குத்தகைத் தொகையை உயர்த்தின ர். விஜயநகர ஆட்சிக் காலத்தில் வரிப்பளு அதிகரித்தது. பரம்பரை நிலக்கிழார்களான பிராமணர்களும், வெள்ளாளர்களும் விஜயநகரப் பேரரசின் அதிகாரிகளும் உழுகுடிகளைக் கொண்டு நிலங்களைப் பயிரிட்டனர். ஆனால் உழுகுடிகளுக்கும், கைவினைஆர்களுக்கும் உரிய பங்கைக் கொடுக்கத் தவறினர். இதன் காரணமாக மக்கள் வலங்கை-. இடங்கை என்ற பிரிவுகளைக் கடந்து நின்று காணியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எதிராக கிளர்ந்து எழுந்தனர். தஞ்சை மாவட்டத்தில் கொருக்கை என்ற ஊரில் கிடைத்துள்ள கி.பி. 1429ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் நாம் மண்டலம் சேர இனம் ஒத்து இராதபடி ஆலே அல்லோ இப்படி நம்மை அநியாயம் செய்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ள செய்தி மக்கள் ஒன்றுபட்டுப் போராடியதைக் குறிப்பிடுகின்றது.

நாயக்கர் காலம்

கி.பி. 1529இல் தொடங்கி 1736 வரை மதுரை நாயக்கர் ஆட்சி நிலவியது. நாயக்கர் ஆட்சியில் பாளையப்பட்டுமுறை என்ற ஆட்சி முறை கி.பி. 1535இல் உருவானது. இதன்படி 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பாளையமும் பாளையக்காரன் ஒருவனால் நிறுவகிக்கப்பட்டது. ஏற்கனவே குறுநல மன்னர்களாக இருந்த தமிழர்கள் மட்டுமின்றி கன்னட, தெலுங்கர் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு பாளையங்காரரும் தன் ஆளுகைக்குட்பட்ட பாளையங்களில் வரிவசூல் செய்யவும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கவும் உரிமையுடையவர்களாயிருந்தனர். நாயக்கர் மன்னர்கள் நிகழ்த்தும் படையெடுப்பின் போது தங்கள் சொந்தப் படையை பாளையக்காரர் அனுப்புவது கட்டாயமாக இருந்தது. பாளையத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு நாயக்க மன்னருக்கும், மற்றொரு பங்கு பாளையக்காரரின் படைவீரர்களின் செலவுக்கும் எஞ்சிய ஒரு பகுதி பாளையக்காரரையும் சென்றடைந்தது.

நாட்டின் மைய ஆட்சி அதிகாரம் நாயக்க மன்னர்களிடம் இருந்தது. அரசனை அடுத்திருந்த உயர் அதிகாரி தளவாய் என்றழைக்கப்பட்டார். இவரை அடுத்திருந்தவர் பிரதானி, இவர் நீதி வழங்கும் பணியையும் மேற்கொண்டிருந்தார். இவரை அடுத்த பதவி ராயசம் என்பதாகும். இம்மூன்று பதவிகளும் முக்கியமான பதவிகளாக இருந்தன.

நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. நிலங்கள் தரவாரியாகப் பிரிக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டது. வீடு, குடியிருப்பு மனை, தோட்டம், கால்நடைகள் ஆகியனவற்றிற்கு சொத்துவரி விதிக்கப்பட்டது. கருமார் (கொல்லர்), தச்சர், குயவர், நெசவாளர் போன்ற கைவினைஆர்களிடமிருந்து தொழில்வரி வாங்கப்பட்டது. பரத்தையரும் தொழில்வரி செலுத்தியுள்ளார்கள். படைவீரர் பராமரிப்பிற்கென்று அவ்வப்போது வரிவாங்கப்பட்டது. நன்செய் நிலவரி நெல்லாயம் என்ற பெயரில் நெல்லாகவே வாங்கப்பட்டது. புன்செய் நில வரிகளும் ஏனைய வரிகளும் பொன்னாக வாங்கப்பட்டது.

நாயக்க மன்னர்கள் வைணவர்கள், என்றாலும் பிற சமயங்களை மதித்தனர். சைவ, வைணவ வேறுபாடின்றி கோவில்களுக்குத் திருப்பணி செய்தனர். இவர்கள் ஆட்சியில்தான் கத்தோலிக்க கிறித்துவம் தமிழ்நாட்டில் கால் கொண்டது. தத்துவ போதகர் என்றழைக்கப்படும் ராபர்-டி-நொபிலி என்பவர் தம் சமயத்தை பரப்ப வேறுபாடான ஒரு முறையை மேற்கொண்டார்.

சோழர் காலத்தைப் போன்றே நாயக்கர் காலத்திலும் வடமொழிக் கல்வியே முக்கியத்துவம் பெற்றது. வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகை, நைடதம், என்ற இலக்கியங்கள் அதிவீரராம பாண்டியன் என்பவரால் எழுதப்பட்டன. வரதுங்கராம பாண்டியன் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி திருக்கருவைக் கலித்துறை அந்தாதி என்ற நூல்களையும், மாரனலங்காரம் என்ற நூலை திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரும், சுப்பிரதீபக் கவிராயர் கூளப்பநாயக்கன் காதல், கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது என்றும் நூல்களையும் இயற்றியுள்ளனர். 1. அழகர் அந்தாதி, 2. திருவரங்கக் கலம்பகம், 3. திருவரங்கத்தந்தாதி, 4. திருவரங்கத்துமாலை, 5. திருவரங்கத்து ஊசல், 6. திருவேங்கடத்தந்தாதி, 7. திருவேங்கடமாலை, 8. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்ற எட்டு நூல்களும் அஷ்டப் பிரபந்தம் எனத் தலைவர்களால் போற்றப்படுகின்றன. இவற்றை எழுதிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருமலைநாயக்கர் காலத்தவர். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் எழுதிய குமரகுருபரர், சீறாப்புராணம் பாடிய உமருப் புலவர், குற்றாலக் குறவஞ்சி பாடிய திருகூடராசப்பக் கவிராயர் ஆகியோர் நாயக்கர் காலத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க கவிஆர்களாவர்.

ஐரோப்பியர் காலம் (1533- 1947)

கி.பி. 1533இல் முத்துக்குழித்துறை கடற்கரைப் பகுதியில் உள்ள தூத்துக்குடி நகரில் வாணிபத்திற்காக வந்து தங்கியிருந்த அரேபிய மூர்களுக்கும் நெய்தல் நிலத் தொல்குடியினரான பரதவர்களுக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. இம்மோதலில் பரதவர்கள் மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டார்கள். இதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வழிமுறையாக கொச்சி நகரிலிருந்த போர்ச்சுக்கீசியரின் உதவியைப் பரதவர்கள் நாடினர். பரதவர்களுக்குத் தங்கள் கடற்படை துணையுடன் உதவ முன் வந்த போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் உதவிக்குக் கைமாறாக கத்தோலிக்கர்களாக மதம் மாறும்படி அவர்களை வேண்டினர். அதற்கு உடன்பட்ட பரதவர்கள் மதம் மாறியதுடன் போர்ச்சுக்கீசிய மன்னனின் குடிகளாகவும் தங்களை மாற்றிக் கொண்டனர். இதன் விளைவாக வடக்கே வேதாளை தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரையிலான கடற்கரைச் சிற்றூர்கள் போர்ச்சுக்கீசியரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.

வெகு திரளான மதமாற்றம் சில புதிய வரவுகளை தமிழ்மொழிக்கு வழங்கியது. அண்டிரீக் என்ற போர்ச்சுக்கீசிய சேசுசபைத் துறவி பரதவர்களின் நிதி உதவி பெற்று கி.பி. 1567இல் தம்பிரான் வணக்கம் என்ற நூலையும், 1568இல் கிறிஸ்டியாவின் வணக்கம் என்ற நூலையும் முறையே அம்பலக்காட்டிலும் கொல்லத்திலும் அச்சிட்டு வெளியிட்டார். இந்திய மொழிகளிலேயே முதன்முதலாக அச்சு வடிவம் பெற்ற மொழி என்ற பெருமையை இந்நூல்களின் வாயிலாகத் தமிழ்மொழி பெற்றது. தூத்துக்குடி அருகில் உள்ள புன்னக்காயல் என்ற கடற்கரைச் சிற்றூரில் அடியார் வரலாறு என்ற நூலை 1586இல் இவர் அச்சிட்டு வெளியிட்டார். போர்ச்சுக்கீசிய மொழியில் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார். தற்கால மருத்துவமனை ஒன்றையும் புன்னக்காயலில் இவர் நிறுவினார்.

கி.பி. 1658இல் டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடி நகரைக் கைப்பற்றினர். தூத்துக்குடி நகரில் நெசவாளர்களைக் குடியமர்த்தி அவர்கள் நெய்த கச்சைத் துணிகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்தனர். ப்ராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்த டச்சுக்காரர்கள் தங்கள் சமயத்தை இங்கு பரப்ப முயற்சி செய்தனர். ஆனால் இம்முயற்சியில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. "ஐரோப்பாவில் நிகழ்ந்த யுத்தங்கள் இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்தன என்ற கூற்றிற்கு ஏற்ப இங்கிலாந்திடம் ஐரோப்பிய யுத்தம் ஒன்றில் தோற்றுப் போன டச்சுக்காரர்கள் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களின் உரிமையை ஆ ங்கிலேயரிடம் தந்தனர்.

மைசூரை ஆண்டு வந்த நிஜாமின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆர்காடு நவாப் அதிலிருந்து விடுபெற்று சுயேச்சை மன்னனாக செயல்படத் தொடங்கினார். முதல் இரண்டு கருநாடகப் போர்களின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் மைசூர் போர்களின் வாயிலாக தென்னிந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். மதுரை நாயக்கர் உருவாக்கிய பாளையக்காரர்கள் சுயேச்சை மன்னர்கள் போல் செயல்படத் தொடங்கினர். இத்தகைய சூழலில் பாளையக்காரரிடம் வரி வாங்கும் உரிமையை கி.பி. 1781-இல் நவாப்பிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி வாங்கியது. இதன் அடிப்படையில் அவர்கள் வரி வாங்கும்போது, பூலித்தேவர், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர், தீர்த்தகிரி (தீரன் சின்னமலை) ஆகியோர் வரிதர மறுத்துப் போராடி ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். அந்நிய ஆட்சிக்கு எதிராகத் தெளிவான கொள்கைகளை முன்வைத்துப் போராடவிட்டாலும் இவர்களுடைய உறுதியான வீர உணர்வும், வெள்ளையர் எதிர்ப்புணர்வும் பாராட்டுதலுக்குரியன. 1806இல் வேலூரில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்புசுல்தானின் மகன்களின் ஆதரவுடன் நிகழ்ந்த வேலூர்க் கலகம் (வேலூர் எழுச்சி) வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிகழ்வுகளுக்குப் பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிர்ப்பில்லாமல் போய்விட்டது.

சென்னை மாகாணம் என்ற பெயரில் இன்றையக் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்திலுள்ள செங்கோட்டைத் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நீங்கலாக ஏனைய பகுதிகள் முழுவதிலும் கிழக்கிந்திய கம்பெனியின் நேரடி ஆட்சி நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டைத் தாலுகா ஆகியன திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிப் பகுதியாகவும் புதுக்கோட்டை மன்னரின் ஆளுகையின் கீழ் புதுக்கோட்டைப் பகுதியும் விளங்கின. மேலும் இன்றையக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் பகுதிகள் சிலவும் சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தன.

சென்னை மாகாணத்தின் தலைநகராகச் சென்னை விளங்கியது. ஆட்சித் தலைவராகக் கவர்னர் இருந்தார். சென்னை மாகாணம் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மாவட்டத்தின் தலைவராகக் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு மாவட்டமும் பல தாலுகாக்களையும் தாலுகாக்கள் பிர்காக்கள் என்ற பிரிவுகளையும் கொண்டிருந்தன. தாலுகாவின் தலைவராக தாசில்தார் நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட குற்ற விசாரணை பொறுப்பு பின்னர் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பண்டைத் தமிழ்நாட்டைப் போன்று கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் அரசின் முக்கிய வருவாயாக நிலவரியே இருந்தது. தனி நிலவுடைமை அனுமதிக்கப்பட்டு அவ்வுடையாளர்களிடமிருந்து நேரடியாக வரி வாங்கப்பட்டது. இதை இரயத்துவாரி முறை என்றழைத்தனர். பாளையக்காரர்கள் என்ற பெயர் மாறி ஜமீன்தார்கள் என்ற பெயர் உருவானது. ஜமீன்தார்களும், ஜாகீர்தர்கள், மிட்டாதாரர்களும் குறிப்பிட்ட நிலப்பகுதிகளுக்கு உரிமை பெற்று, பயிரிடுவோரிடமிருந்து வரி வாங்கினர். ஒரு பகுதி வரியை எடுத்துக் கொண்டு எஞ்சியதைக் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் வழங்கினர்.

ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டல் தமிழகத்தை வெகுவாகப் பாதித்தது. உணவு தானியங்கள் உற்பத்திக்கு மாற்றாகப் பணப் பயிர்களைப் பரந்த அளவில் பயிரிடச் செய்தனர். குறிப்பாக இங்கிலாந்தின் நெசவாலைகளுக்கு அடிப்படைத் தேவையான பருத்தியையும், நூல்களுக்குச் சாயமேற்ற உதவும் அவுரியையும் அதிக அளவில் பயிரிடச் செய்தனர். அதே நேரத்தில் அவற்றிற்கு அவர்களே விலை நிர்ணயம் செய்தனர். தமிழ்நாட்டு உழவன், தான் உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழந்தான். இதை,

ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி

காயிதம் போட்டானாம் வெள்ளக்காரேன்

என்ற நாட்டார் பாடல் எடுத்துரைக்கிறது.

1857 சிப்பாய் எழுச்சிக்குப் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்குப் பதிலாக இங்கிலாந்து பாராளுமன்றத்தின் நேரடி ளுகையின் கீழ் தமிழ்நாடு வந்தது. 1859இல் இந்திய சிவில் சட்டமும், 1860இல் இந்தியக் குற்றச் சட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. 1861இல் உயர்நீதி மன்றம் சென்னையில் நிறுவப்பட்டது.

பாரம்பரிய கிராம சபைகளுக்கு மாற்றாக தாலுகா போர்டு ஜில்லா (மாவட்டம்) போர்டு, பஞ்சாயத்து ஆகிய நிறுவனங்கள் உருப்பெற்றன. பாரம்பரிய பள்ளிகளுக்கு மாற்றாக நவீனக் கல்விக் கூடங்கள் அரசினராலும், கிறித்தவ மிஷனரிகளாலும், தனிப்பட்டவர்களாலும், சாதியமைப்புகளாலும் நிறுவப் பெற்றன. இக்கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியமும் கிட்டியது. சாதிய எல்லைகளைத் தாண்டி அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்பு இப்போதுதான் முதன் முதலாக உருப்பெற்றது. பெண் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. மரபுகளை மீறிப் பெண்கள் கல்வி பெறும் நிலை உருவாகத் தொடங்கியது. மாநிலக் கல்லூரி ஒன்றும், 1834இல் பொறியியல் கல்லூரி ஒன்றும், 1835இல் மருத்துவக் கல்லூரி ஒன்றும் சென்னையில் தொடங்கப்பட்டது. 1857ம் ண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப் பெற்றது. இந்நவீனக் கல்வியானது படித்த மக்கள் கூட்டத்தை உருவாக்கியது. இதன் விளைவாகப் பத்திரிகைகள் சில உருப்பெற்றன. மதராஸ் கெஜட், கூரியர் என்ற பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. 1878 செப்டம்பரில் இந்து என்ற ஆங்கில நாளேடும் 1878 டிசம்பரில் மதராஸ் மெயில் என்ற ஆங்கில நாளேடும் வெளி வந்தன. 1880இல் சுதேசமித்திரன் என்ற தமிழ் நாளேடு வெளியானது. செய்யுள் வடிவங்களின் வாயிலாகவே பொதுமக்களிடம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்து வந்த முறை மாறி உரைநடை செல்வாக்குப் பெற்று வளரத் தொடங்கியது. அச்சு இயந்திரத்தின் வருகையின் காரணமாகப் பழைய தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் அச்சு வடிவம் பெறத் தொடங்கின. சிறுகதை, நாவல் என்ற புதிய இலக்கிய வடிவங்கள் தமிழில் உருவாயின.

தமிழ்நாட்டை ண்ட மன்னர்கள் பலரும் வேளாண்மையின் அடிப்படை தாரமான நீர்வளத்தைப் பெருக்குவதிலும், பேணுவதிலும் ஆர்வம் காட்டினர். ஆனால் ஆங்கிலேயர்கள் முழுமையாக ஆர்வம் காட்டவில்லை. மேலும் உணவு தானியங்களை வரைமுறையின்றி ஏற்றுமதி செய்தனர். இதன் விளைவாக 1876- 1878 ஆண்டுகளில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. தாது வருஷப் பஞ்சம் என்று மக்கள் இதை அழைத்தனர். பஞ்சமோ பஞ்சம் என்று பரிதவித்து மக்கள் பல்லாயிரக் கணக்கில் மாண்டனர்.

காட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே

வீட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே

ரோட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே

மேட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே

என்று நாட்டார் பாடல் ஒன்று எடுத்துரைக்கிறது. இப்பஞ்சத்தையும் ஆங்கிலேயர்கள் தங்கள் சுரண்டலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு குறைந்த அளவு கூலி கொடடுத்து இரயில் பாதைகளும், கால்வாய்களும் அமைத்தனர். சென்னையில் ஓடும் பக்கிங்காம் கால்வாயின் ஒரு பகுதி இந்த முறையில்தான் வெட்டப்பட்டது. பஞ்சத்தின் துணை விளைவாக ஆங்கிலேயர்களின் இதர குடியேற்ற நாடுகளான இலங்கை, பர்மா (மியாமர்), மலேசியா, பிஜி தீவு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்று தேயிலை, காப்பி, இரப்பர் தோட்டங்களை உருவாக்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வளமான பொருள் கிட்டவில்லை. கூலித் தமிழன் என்ற பெயர்தான் கிட்டியது.

19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாட்டில் நிலை பெற்றது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வ.உ.சி. பாரதி, சிவா ஆ கியோரின் தலைமையில் சுதேசிய இயக்கம் வீறு கொண்டு எழுந்தது. 1920இல் நிகழ்ந்த ஒத்துழையாமை இயக்கமும், 1930இல் உருவான சிவில் சட்ட மறுப்பு இயக்கமும், 1942இல் நிகழ்ந்த வெள்ளையனே வெளியேறு போராட்டமும், தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்தன. வள்ளலார் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்க இயக்கம், வைகுண்ட சாமியின் அய்யாவழி இயக்கம், தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக உருவாகி நீதிக் கட்சியாக மாறி சுயமரியாதை இயக்கமாக வளர்ந்த திராவிட இயக்கம், பொதுவுடைமைக் கட்சியினர் உருவாக்கி வளர்த்த உழவர், தொழிலாளர் இயக்கங்கள் ஆகியன தமிழ்நாட்டின் இயக்கங்கள் என்ற தலைப்பில் தனியாக ஆராய்வதற்குரியன