Thursday, March 1, 2012

எப்பாதையில் போனாள் ? எங்கு போய் மறைந்தாள் ?

என் ஆத்மாவை நெருங்கி குறுக்கிட்டவள் யார்
வசந்த காலத் தென்றல் நறுமணப் புகைபோல் ?
மங்கை என்னைக் கடந்து செல்கையில்
மலர்கள் பூத்துக் குலுங்கும் நூற்றுக் கணக்கில் !

போவ தெங்கெனப் புகலாது அவள் போனாள்
பாவை இங்கு திரும்பி மீளவும் இல்லை.
கடக்கும் போது ஓரக் கண்ணோட்டம் விட்டாள்
ஏதோ தெரியாத ஒரு பாடலை முணுமுணுத்து
மனத்தில் இது திரையிட வனத்தில் அமர்ந்தேன் !

அலையடிப்பு போல் தள்ளப்பட்டு நிலத்தை அடைந்தாள்
தொலைந்து போனது நிலவு அந்த வானிலே !
புன்னகையோடு அவள் உலவி வந்த பூமியில்
தன் புன்னகைதனை விட்டுச் சென்றாள் !
ஓரக் கண்ணில் என்னை அழைப்பதாய் எண்ணினேன்
எங்கே போனாள் ? எங்கு போய்த் தேடுவேன் ?
ஏகாந்தனாய் அமர்ந்தேன் அந்த வேதனை யோடு !

மதி முக நோக்கில் கனவு மாயம் ஓவியம் ஆனது
என் ஆத்மாவிலே எங்கோ பூமாலை வீசினாள் !
பூந்தோட்டம் போயவள் ஏதோ சொல்லிச் சென்றாள்
பூக்கள் நறுமணம் மறையும் மிடுக்கொடு அவளுடன்
இச்சையெழும் நெஞ்சில், கண்கள் மூடும் களிப்பில்
எப்பாதையில் போனாள் ? எங்கு போய் மறைந்தாள் ?

No comments: