Monday, August 22, 2011

எந்த கல்வி முறையில் படிப்பது சிறந்தது

பிளஸ் 2 முடித்த உடன் பட்டப்படிப்பு படிப்பது என்று முடிவெடுக்கும் மாணவர்கள் உடனடியாக ஒரு கல்லூரியில் சேர்ந்து விடுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பகல் நேர வகுப்புகளிலும், சிலர் மாலை நேர வகுப்புகளிலும் சேர்ந்து விடுகின்றனர். சில மாணவர்களுக்கு இதிலேயே குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை படிப்பதை விட, தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படிக்கலாமா என்று எண்ணுகின்றனர். தொலைதூரக் கல்வியில் படித்துக் கொண்டே டிப்ளமோ படிப்பு, சான்றிதழ் படிப்பு படிக்கலாம் என்றும் விரும்புகின்றனர். இப்படி பட்டப்படிப்பிலேயே இத்தனை முறைகள் இருக்கும் போது, எந்த முறையில் படிப்பது என்று மாணவர்கள் இடையே குழப்பம் வருவது சகஜம்தானே?

பொதுவாக, முதுகலை பட்டம் பயில நிச்சயமாக மூன்று அல்லது நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அதை கல்லூரியில் சேர்ந்தோ அல்லது தொலைதூரக் கல்வி மூலமாகவே பயின்று இருக்கலாம். அதே சமயம், பட்டப்படிப்புடன் உங்களது டிப்ளமோ படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும், உடனடியாக வேலை கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். தற்போது வளர்ந்து வரும் நவீன உலகில், வேலைக்கு ஆட்களை தேடுபவர்கள் நீங்கள் சான்றிதழ் கோர்ஸ் படித்திருக்கிறீர்களா, டிப்ளமோ முடித்திருக்கிறீர்களா அல்லது பட்டப்படிப்பை கல்லூரியில் படித்தீர்களா என்றெல்லாம் பார்ப்பதே இல்லை. அவர்கள் கொடுக்கும் வேலையை செய்யும் திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதை மட்டுமே. அதேப்போலத்தான், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும், உங்களது பட்டப்படிப்பு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதேத் தவிர, அதை நீங்கள் எந்த முறையில் படித்தீர்கள் என்பது அல்ல.

பலரும், தாங்கள் படித்த படிப்புக்கு சம்பந்தமே இல்லாத பணிகளை செய்வதும், சிலர் தாங்கள் பெற்ற பணி அனுபவத்திற்கேற்ற படிப்பினை படிப்பதும் படிப்பிற்கும், திறனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையே நிரூபிக்கிறது. மேலும், நல்ல திறமையான நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ஒரு நிர்வாகம் நடத்தும் நேர்முகத் தேர்வில், கல்விச் சான்றிதழுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. நேர்கானலில் கேட்கப்படும் கேள்விகள், எழுத்துத் தேர்வு, பணி அனுபவம் போன்றவைதான் முக்கிய இடம் வகிக்கிறது. அதே சமயம், பல நிறுவனங்கள் தாங்கள் தேர்வு செய்யும் ஆட்கள் பட்டப்படிப்பை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று விதிமுறையை வைத்துள்ளனர்.

இந்த விதிமுறையை பல நிறுவனங்கள் கவனமாக கையாள்கின்றன என்பதால் பணி அனுபவம் பெற்ற பிறகும், அதற்கேற்ற பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் கற்கும் பல ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் வேலை தேடும் போது இந்த பட்டப்படிப்பானது ஒரு பக்கத்துணையாக மட்டுமே இருக்கும். அவரது திறமைதான் முதன்மையானதாக இருக்கும் என்பதில் நினைவில் கொள்ளவும். ஆனால், கல்லூரியில் படித்த பட்டப்படிப்பிற்கும், தொலைதூரக் கல்விக்கும் எந்த வேறுபாடும் இல்லையா என்று கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் ஏக்கத்தோடு கேட்பது புரிகிறது.. நிச்சயம் உண்டு. ஒரு பணிக்கு இரு வேறு விதமான நபர்கள் விண்ணப்பித்து, இருவருமே திறமையுடன் காணப்பட்டால், அதில் கல்லூரியில் படித்தவரைத்தான் நிர்வாகம் முதலில் பரிந்துரைக்கும். அதேப்போலத்தான் மற்ற இடங்களிலும் கூட கல்லூரி பட்டப்படிப்பிற்கு நிச்சயம் முன்னுரிமை வழங்கப்படும். நாம் செய்து கொண்டிருக்கும் பணியில் முன்னேற்றம் அடையவும், மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் டிப்ளமோ படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும் நிச்சயம் உதவும். ஒரே இடத்தில் தேங்கி நிற்காமல், முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்த படிப்பிற்கும், அதற்குரிய முக்கியத்துவம் கிடைத்தே தீரும்.

விடலைப் பருவ பிள்ளைகளை கையாள்வது எப்படி?

குழந்தை வளர்ப்பு செயல்பாட்டில், விடலைப் பருவம் என்பது ஒரு மிக முக்கியப் பருவம். எது சரி? மற்றும் எது தவறு? என்று ஆராய ஆரம்பிக்கும் பருவம். உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கும் பருவம். இத்தகையப் பருவத்தில், பெற்றோர்-பிள்ளைகள் உறவுகளில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தங்களின் பிள்ளைகள் எந்த நிலையிலும் வழிமாறி விடக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் ஆசை. ஆனால், பிள்ளைகளை கையாள்வதில் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். எனவே, மிக முக்கிய பருவமான விடலைப் பருவத்தில், பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பாக சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

உங்களின் விடலைப் பருவ பிள்ளை, என்ன சொல்ல வருகிறது என்பதை கனிவோடு கேட்கப் பழக வேண்டும். ஏனெனில், ஒரு குழந்தை சிறுவயதில் இருக்கும்போது பெற்றோர்களிடம் ஏறக்குறைய அனைத்து விஷயங்களையும் கூறிவிடும். ஆனால் அதே பிள்ளை, விடலைப் பருவத்திற்கு வந்தவுடன், பல விஷயங்களை பெற்றோரிடம் சொல்வதற்கு தயங்குகிறது. எத்தகைய விஷயங்களுக்கு நீங்கள் எப்படி உங்களின் விடலைப் பருவ பிள்ளைகளிடம் நடந்துகொள்கிறீர்கள் என்பதை அவர்கள் அனுமானித்து, அதன்படி, உங்களுடனான உறவுநிலையில் ஒரு வரைமுறையை வகுத்துக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு நாளிலும், குழந்தையுடன் செலவிடுவதற்கென்றே வீட்டில் ஒரு நேரம் வகுத்துக் கொள்வது ஒரு சிறந்த வழி. குழந்தைகள் படிக்கும்போது, நீங்கள் சிறிதுநேரம் அவர்களின் உடன் அமர்ந்து படிக்கலாம். பாடப்புத்தகம் அல்லாத சில சிறந்த புத்தகங்களை, குழந்தைகளுக்குப் படிக்க கொடுத்து, அதன் கருத்தாக்கம் பற்றி அவர்களுடன் கலந்துரையாடலாம்.அதுபோன்ற கலந்துரையாடலில், உங்களின் கருத்தை திணிப்பதை தவிர்த்து, அவர்களின் கருத்தை ஆர்வமுடன் கேளுங்கள்.

பொதுவாக இரவு நேரத்தில் உணவருந்தும்போது, குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது ஒரு நல்ல ஆரோக்கிய சூழல். இந்தப் பழக்கமானது, உங்களுக்கும், உங்களின் விடலைப் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும். ஏனெனில், அத்தகைய சூழலில், குழந்தைகள் தங்களின் மனதில் உள்ளதை பெற்றோரிடம் வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஆனால், அந்த சந்தர்ப்பத்தை, பெற்றறோர்கள் தங்களின் கருத்துக்களை திணிப்பதற்கான போதனைக் களமாக ஆக்கிவிடக்கூடாது. பிள்ளைகளைப் பேசவிட வேண்டும்.

வெறுமனே அமர்ந்து கொண்டு ஏதாவது பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், ஏதேனும் ஒரு வேலையை நீங்களும், உங்களின் விடலைப் பருவ பிள்ளையும் இணைந்து செய்து கொண்டே பேசலாம். வீட்டை சரிப்படுத்துதல், வெளியில் கடைக்கு செல்லுதல் போன்ற பணிகளை செய்துகொண்டே பிள்ளைகளுடன் கலந்துரையாடுவது, சூழ்நிலையை எளிதாக்கும்.

பல ஆய்வு முடிவுகளின்படி, ஒரு வீட்டில் தந்தையைவிட, தாய்தான் குழந்தைகள் தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள அதிகளவில் துணைபுரிகிறார். தந்தை ஒரு அதிகார மற்றும் கட்டளை மையமாகவே பார்க்கப்படுகிறார். ஆனால் தற்போதைய சூழ்நிலைகளில், பல தந்தைகளும் தங்களின் பிள்ளைகளிடம் நெருங்கி வருகிறார்கள்.

சில விடலைப் பிள்ளைகளிடம் ஒரு வேலையை செய்யச் சொன்னால், அவர்கள், அதற்கு முற்றிலும் எதிர்பதமாகவே செய்வார்கள். ஏனெனில், அவர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலையில்தான், பெற்றோர்கள் தெளிவாக செயல்பட வேண்டும். உங்களின் முடிவுகளை பிள்ளைகளின் மீது திணிக்காமல், அவர்களுடன் ஆலோசித்தே எந்த திட்டமிடுதலையும் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகள் குழந்தைகளின் சிந்தனையை முதிர்ச்சியானதாக மாற்றும்.

தொடர்ச்சியான மற்றும் பின்வருபவைகள் பற்றி சிந்திக்கும் மூளையின் பகுதியானது, விடலைப் பருவத்தில்தான் வளர்ச்சியடைகிறது. விடலைப் பிள்ளைகளுக்கு, சரியான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம், தங்களின் புதுமையான செயல்களின் மூலம் நம்மை அவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார்கள்.

உங்களின் விடலைப் பிள்ளையை எப்படி வழிநடத்துவது என்பதில் உங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தால், உங்கள் பிள்ளையின் முன்பாக வெளிப்படையாக நீங்கள் விவாதம் செய்ய வேண்டாம்.

பல இல்லங்களில், பெற்றோரிடையே, தாங்கள் சொல்வதைத்தான் தங்களின் பிள்ளை கேட்க வேண்டும் என்ற ஒரு பிடிவாதம் இருக்கும். இதை வெளிப்படையாக காட்டிக் கொள்வதால், அவர்கள் இந்த சூழலை எதிர்மறையாக கையாள நினைப்பார்கள்.

தாயும்-தந்தையும், ஒருவரின் அக்கறையில் மற்றொருவர் நம்பிக்கை வைக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன்பாக நீங்கள் ஒற்றுமையுணர்வு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு மனப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், உங்களின் விடலைப் பிள்ளையுடனான உங்களின் உறவு வலுப்படும்.

என்னதான் உங்களின் அரவணைப்பிலேயே உங்களின் குழந்தை வளர்ந்திருந்தாலும், அவர்கள் விடலைப் பருவத்தை எட்டியவுடன், தாங்கள் பெரிய மனிதர்கள் என்பதை உணர்கிறார்கள். எனவே அவர்களின் தனிமை உணர்வுக்கு பெற்றோர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் முன்னுரிமை எடுத்துக்கொண்டு, தலையிட்டு, அவர்களை சங்கடப்படுத்தக்கூடாது. தேவையான உதவிகளை தவறாமல் செய்ய வேண்டும். அதேசமயம், அவர்களுக்கு தெரியாத வண்ணம் சரியான முறையில் கண்காணிக்கவும் வேண்டும்.

ஒரு பிரச்சினையைப் பற்றி உங்களது விடலைப் பிள்ளையிடம் நேரடியாக பேசுவதற்கான சூழல் இல்லாதபோது, கருத்தை எழுத்தில் தெரிவிப்பது ஒரு சிறந்த வழியாகும். நேருக்கு நேர் பேசுவது சிறந்த வழிமுறை என்றாலும், சில சமயங்களில் நேரடி விவாதங்கள் எல்லையை மீறி சென்றுவிட வாய்ப்புண்டு. எனவே, அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எழுத்து மூலமான உரையாடல் பெரும் உதவியாக இருக்கும்.

அதேசமயம், நீங்கள் எழுதியதை(கடிதம் வாயிலாகவோ அல்லது ஈ-மெயில் மூலமாகவோ) அனுப்பும் முன்பு அல்லது கொடுக்கும் முன்பாக, அவற்றை ஒருமுறை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் உணர்ச்சி வசத்தில் நீங்கள் ஏதேனும் பயன்படுத்தக்கூடாத வார்த்தையை பயன்படுத்த நேரிடலாம். எனவே சரிபார்த்து அவற்றை திருத்திவிட வேண்டும்.

உங்களின் விடலைப் பிள்ளைகள், அனைத்து விஷயங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் வற்புறுத்தக்கூடாது. ஏனெனில், எதை உங்களிடம் சொல்ல வேண்டும் மற்றும் தேவையில்லை என்று முடிவெடுக்கும் நிலைக்கு அவர்கள் வருகிறார்கள். எதுமாதிரியான விஷயங்களை உங்களிடம் அவர்கள் ஆர்வத்துடன் கூறுகிறார்கள் என்பதையும், எதுபோன்ற விஷயங்களை அவர்கள் உங்களிடம் கூறத் தயங்குகிறார்கள் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

எனவே, நீங்கள் அவர்களுடன் மேற்சொன்ன வகைகளில் உறவை வலுப்படுத்திக் கொள்வதன் மூலம், சூழலை மென்மையாக்கி, உங்களின் விடலைப்பிள்ளை உங்களிடம், அனைத்து முக்கிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும்.

Friday, August 19, 2011

காத்திருப்பு ....

இந்த சொல்லை சொல்வதற்கே நெஞ்சில் வலிமை வேண்டும். வருகிறேன் என்றவன் வாராமல் போய் விட மணித்துளிகள் நாட்களாக, நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக. மாதங்கள் பல வருடங்களானது. அவன் வருகை இன்னும் தாமதமாகவே உள்ளது. நிழலுக்கு ஏங்கும் பாலைவனமாய் என் மனது அவன் வருகைக்கு ஏங்கியது. சில இடங்களையும், பொருட்களையும் காணும் போதெல்லாம் மனசுடைந்து போகின்றேன் ... அவனும் அவன் நினைவுகளும் கடலோரம் வரைந்த கவிதைகளாய் அலைகளோடு காணாமலே போனது நிஜம் தானா ..?

இன்று வரை புரியவே இல்லை. எதோ மனதை வருட விழி மலர்ந்து பார்க்கிறேன். அதே இடம், அதே இருக்கை... எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் அவன் நினைவு மட்டும் இன்னும் அப்படியே ஒட்டிகொண்டது மனசெல்லாம்.

இதே புகையிரத நிலையத்தில் தான் அன்று நானும் அவனும் சந்தித்தோம். நினைவுகள் அலை மோத இளங்காற்றை சுவாசிக்கிறேன். நடு இரவு ... வீதிக்கு வருகிறேன். தூரவே என்னை கண்ட பறவைகள் சிறகடிக்கின்றன. எங்கோ நாய் ஊளையிடும் சத்தம், வீதியை வெறித்து பார்க்கின்றேன் முதல் முதல் அவனை சந்தித்த இடம் எதிர்பாராத மோதலில் சிதறிய புத்தகங்களை எடுத்து அடுக்குகிறேன். அவனும் அடுக்குகிறான் என் புத்தகங்களை பார்வைகள் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ள காதல் பறவை தன் இஷ்டப்படி பறந்தது. பார்வைகள் மட்டுமே பேசிக் கொண்டது. நெடு நாள் வரை ஒரு வார்த்தை பேச மூவிரண்டு மாதம் ஆனது. அந்த வார்த்தை பேசுவதற்குள் வியர்வை துளிகள் காதோரங்களில் சொல் சொல் என்று கூச்சலிட்டு கலைத்து தரையில் சரிந்து விழுந்தது. நெற்றியில் மிஞ்சி இருந்த வியர்வை துளிகள் விழவா வேண்டாமா என்று போட்டி போட்டுக் கொண்டு இருந்தது. மெதுவாக இதழ் மலர்ந்து வார்த்தைகளை உச்சரிக்க முனைகிறேன். தொண்டைக்குழியில் எதோ உருள்வதாய் ஓர் உணர்வு வார்த்தைகள் வெளி வர சிரமப் பட்டது. ஒரு வழியாய் மனதை திடப் படுத்தி சொல்வதற்கு வாய் திறக்க. அந்த வார்த்தைகளும் உமிழ் நீரில் மூழ்கி மரணமடைகிறது. திக்கி திக்கி என்றாலும் சொல்லலாமென எண்ணி நிமிர்கிறேன்.

அப்பொழுது ''உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என்ற வார்த்தைகள் தேனாய் என் செவிகளில் பாய்கிறது. அதிசயமாய் நிமிர்ந்து பார்கின்றேன் அவன், அவனே தான் சொல்லிவிட்டான். இதயம் திறந்து ... நான் தான் தாமதம். பாதணிகள் கால்களை மூடி இருக்க தரையில் கோலமிட முடியாமல் கால் கட்டை விரல் கோபமாய் ஆடிக் கொண்டிருந்தது, தமிழ் பெண்களுக்குரிய அந்த வெட்கம் தானோ நேர் நோக்க முடியவில்லை அவன் விழிகளை அதில் காதல் அம்புகள் தொடுக்க ஆவலோடு காத்திருந்தன. வேறு எங்கோ பார்த்தப் படி எதுவும் அறியாதவள் போல அவனை கேட்கின்றேன் ''என்ன சொல்லுறீங்க'' என்று மீண்டும் சொல்கிறான் சத்தமாய்...

மற்றவர் திரும்பி பார்க்க நகருகிறேன் அந்த இடத்தை விட்டு ஓடி வந்து பாதையை மறித்துக் கொண்டு பதிலை சொல்லிவிட்டு போ என்கிறான். அவன் மேல் எனக்கு இருந்த காதலை அவன் அறிந்திருக்க நியாயமில்லை இருந்தும் வார்த்தைகளை விட முடியவில்லை. அவன் மனதில் நானிருப்பது அறிந்ததும் ஆனந்தக் கண்ணீர் விழிவழியே துளிகளாய் எட்டி எட்டி பார்த்து கண்ணகளில் உருண்டு வர பதைக்கின்றான். தப்பா சொல்லிட்டேனா ...? மன்னிச்சுடுங்க என்கிறான். அவசரமாய் இடைமறித்து சொல்கிறேன் இல்லை இல்லை நான் அப்படி சொல்லவில்லை. குறும்பு தனமாய் அவன் சிரிப்பு கண்களும் சேர்ந்து சிரிக்க என் அருகில் வந்து நோக்கினான் குறு குறுக்கும் அவன் பார்வை என்னை என்னவோ செய்தது வேகமாய் ஓடி மறைந்தேன்.

அவன் துள்ளி குதித்து சிரிக்கும் ஓசை என் செவிகளில் நீண்ட நேரமாய் கேட்டது. அதிகமாய் பேசும் அவனிடம், என் வார்த்தைகள் வெளி வர அச்சப் பட்டு உள் வாங்கிக்கொள்ளும் மௌனமாகவே பேசும் என் மனதின் காதல் வார்த்தைகளை புரிந்து கொள்வான் அவன் எப்பவும் சற்று தள்ளி அமரும் என்னை அவன் விசித்திரமாய் பார்ப்பான். கவிதைகளை வரைந்து நான் நடக்கும் வழியில் போடுவான். கடிதங்களில் கல்லை கட்டி எறிந்து விடுவான். விடுமுறைகளில் காணாமல் தவிக்கும் நம் இதயங்கள் கண்டதும் கட்டித் தழுவிக் கொள்ள ஆசைப் படும். ஆனால் எதோ தடுக்கும். கலங்கிய விழிகளுடன் மன துயரங்களின் பரிமாறல் கொஞ்சமாய் பேசி நிறைய நேசித்து கல்லூரி காலம் கனவுகள் நிறைந்த காலம் இறுதி நாள்.

இன்றாவது நிறைய பேசணும், எண்ணிக் கொண்டு அருகருகே அமர்ந்து எதுவும் பேசாமால் மௌனமாய் இருவரும் கண் கலங்கி நிற்க, ரயில் இருவருக்கும் ஒரே நேரத்தில் வர செய்வதறியாமல் இருவரும் பார்த்துக் கொள்ள அவன் மெதுவாய் சொல்கிறான் "நான் ஊருக்கு போய் கடிதம் போடுகிறேன்."

பிரிய மனமின்றி ரயில்களில் ஏற ரயில் ஊர்ந்து செல்கிறது. இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து செல்ல சோகம் மனதை தழுவிக் கொள்ள அவனும் நானும் கைகளை அசைத்த வண்ணம் பிரிகின்றோம் கண்களில் தேக்கி வைத்திருந்த கண்ணீரெல்லாம் சொட்டு சொட்டாய் தரையை தொட்டது. ஜன்னலில் சாய்ந்தபடி உறங்கிப் போனேன்.

எதோ கூக்குரலிடும் சத்தம் கேட்டு திடிக்கிடுகிறேன். என்னாச்சு எழும்பி பார்கின்றேன் எதோ விபத்தாம். யாரோ சொல்கிறார்கள் நிறைய உயிர் சேதம் ஆச்சு என்று. எட்டி வெளியே பார்க்கின்றேன். ஒரே கூட்டம். மெதுவாய் தட்டு தடுமாறி ரயிலை விட்டு இறங்குகிறேன் என்ன செய்வதென்று தெரியவில்லை மெதுவாய் நடக்கின்றேன் தண்டவாளத்தில் வந்த திசைக்கே செல்ல ஒரு ரயில் ஆயத்தமாய் நிற்கிறது ஓடிச் சென்று அதில் ஏறுகிறேன். ரயில் நகர்கிறது. நாளைக்கு ஊருக்கு போய்க்கலாம் என்று எண்ணிக் கொண்டேன் மீண்டும் அதே இடம் அதே இருக்கை வந்து அமர்ந்து கொண்டேன் நடு சாமம் என்றதால் ஆள் அரவம் எதுவும் இல்லை அந்த இருக்கையில் முடங்கி படுத்துக் கொண்டேன்

மறு நாள் அதி காலையில் ரயில் நகரும் சத்தம் எழுந்து அமர்ந்து கொண்டேன் எட்டிப் பார்க்கின்றேன் ரயில் ஒன்று ஊருக்கு கிளம்புகிறது அப்போது தான் கவனித்தேன் இரண்டாவது ரயில் பெட்டியில் அவன் சத்தமாய் கூப்பிட்டேன் அவனுக்கு கேட்கவில்லை ரயில் நகர ஆரம்பித்துவிட்டது அவசர அவசரமாய் ஓடுகிறேன் ரயிலில் ஏற ஒருவாறு ஏறிவிட்டேன் கடைசி பெட்டியில் ஒவ்வொரு பெட்டியை கடந்து அவனை தேடி செல்கிறேன். ஒரே சன கூட்டம் அவனருகே வந்துவிட்டேன். அவன் பெயரை சொல்ல எண்ணுகையில் தான் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கவனித்தேன் சரி அவன் அனுமதி வாங்கிவிட்டான் போல துணிவுடன் ஊருக்கு வருகிறான் மனசில் ஒரே சந்தோசம்.

இவனுக்கு தெரியாமலே இவன் பின்னாடி செல்வோம் என்று எண்ணியவாறு மறைந்து அமர்ந்துக் கொண்டேன் ஊர் வந்தது அவன் இறங்கி நடக்கின்றான் நான் குறுக்கு வழியில் சென்று முன் வாசலுக்கு போகாமல் வீட்டு பின் வாசல் வழி செல்கிறேன் யாரையும் காணவில்லை அம்மா அப்பா கூப்பிடுகிறேன் யாரையும் காணவில்லை எங்கே என்று எண்ணியபடி அறையை எட்டி பார்க்கின்றேன் என் தங்கை விசும்பலுடன் சுற்றி அவள் தோழிகள் என்னடி ஆச்சு சத்தமாய் கேட்கின்றேன் அவள் பேசவில்லை.

கோபம் வர வராந்தாவுக்கு விரைகின்றேன் சொந்த பந்தங்கள் சுற்றிவர நிற்க நடுவில் அழகான கண்ணாடி பெட்டியில் யாரது எட்டிப் பார்க்கின்றேன். அதிர்ந்து போகிறேன் நானா அது ஆம் நானே தான். நான் இறந்து விட்டேனா...? மெதுவாக நிமிர்ந்து வாசலை பார்க்கின்றேன் அவன் தூணில் தலையை அடித்தபடி கதறிக்கொண்டு இருக்கின்றான் எல்லோரிடமும் ஓடி ஓடி சொல்கிறேன் நான் இங்க இருக்கேன் அழவேண்டாம் என்று யாருமே கேட்கவில்லை. அம்மாவின் சத்தம் பெருங்குரலாய் கேட்க யாரோ என் உடலை தூக்க. இறுதி சடங்கு நடக்கிறது. என் சக மாணவர்கள் அப்பாவிடம் எதோ சொல்ல அவன் காதுகளில் அப்பா எதோ சொல்ல அவன் அலறுகிறான் அயோ நானா என் கையாள எப்படி நான் அவளுக்கு கொல்லி வைப்பேன் கத்துகிறான் இல்லை இல்லை என்கிறான் அவன் துவண்டு போய் கிடக்கிறான் சுடுக்காட்டில் எனக்கான இறுதி சடங்கு. அவனே செய்கிறான். நான் அவன் பின்னாலேயே சுற்றுகிறேன் அவன் என்னை கண்டுக்கவில்லை எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்புகிறான்.

நானும் எல்லோரிடமும் சொல்கிறேன் அவர்கள் கவனிக்கவில்லை அவனுடன் சேர்ந்தே செல்கிறேன் ரயில் பயணம் மீண்டும் அவன் வழி நெடுக அழுது கொண்டே போகிறான் பரிதாபமாய் பார்க்கின்றேன் மீண்டும் அதே இடம் அவனும் இறங்க நானும் இறங்கினேன் அவன் நம் கல்லூரி வாசலில் ஒட்டுகிறான் என் கண்ணீர் அஞ்சலியை அழுதுகொண்டே அவனும் நானும் சந்தித்த இடங்களை ஒவ்வொன்றாய் பார்க்கின்றான் மீண்டும் திரும்புகிறான். தண்டவாளத்தில் தலையை வைக்கின்றான் நான் கதறுகிறேன் வேண்டாம் வேண்டாம் அவனுக்கு கேட்கவில்லை நிற்பவர் முதுகில் பலமாய் தட்டி சொல்கிறேன் அவனை காப்பாதுங்கள்.யாரோ அவனை ஓடி போய் காப்பாற்ற மீண்டும் வருகிறான் மகிழ்கிறேன். அவனை அனுப்பி வைக்கின்றன அவன் செல்லும் திசையை பார்கின்றேன்.

கண்ணீருடன் பல வருடங்களாக ரயில் நிலையத்தில் காத்திருக்கிறேன் தண்டவாளங்களை அடிக்கடி சரி பார்க்கின்றேன் இன்னொரு விபத்தும் இன்னொரு காதல் தோல்வியும் வேண்டாமென என்றாவது ஒரு நாள் அவன் வருவான் அவனை பார்ப்பேன் இங்கு இருந்தபடியே கண்ணீருடன் காத்திருக்கிறேன். அவன் ஒரு ஆண்மாவாயேனும் வராமலா போய் விடுவான் எத்தனை ஆண்டுகளானாலும் காத்திருப்பேன் அவனுக்காக. அவனுக்காக மட்டுமே.

Sunday, August 14, 2011

1954 – The China syndrome


Before India became independent of British rule, it had little political contact with its northerly neighbor. China had also recently undergone a political upheaval. The incumbent Kuomintang nationalist party had been defeated in a civil war by the People’s Liberation Army, which established the People’s Republic of China. Nehru’s foreign policy began with his government’s recognition of the new republic. In April 1954 Nehru traveled to Peking (as Beijing was then known) where he met Chinese leaders Zhou Enlai and Mao Zedong (in pic). April 29 became a red-letter day in the history of Sino-Indian ties for the declaration of the Five Principles of Peaceful Coexistence, known as Panchsheel (inspired in part from the Pancasila – the five principles for the foundation of Indonesia as laid out by the nation’s first president Sukarno), which comprised respect for each other's territorial integrity and sovereignty, non-aggression, non-interference in each other's internal affairs, equality and mutual benefit, and peaceful co-existence. The refrain “Hindi Chini bhai bhai” was common during the 1950s as the two countries ignored the odd border skirmish to maintain peaceful relations. Within a few years, India and China fell out over China’s occupation of Tibet.

1952 – Democracy’s first dance


Jawaharlal Nehru, who had led the interim government since 1947, was elected in the country’s first parliamentary election in 1952. The Congress Party emerged victorious in the elections, the first test of fledgling democracy. On May 13, Nehru formed the first democratically elected Government of India and assumed office as Prime Minister. Later that year the Prime Minister, seen here on his 65th birthday two years later, unveiled India’s first Five Year Plan.

1950 – The first missionary of charity


Agnes Gonxha Bojaxhiu, an Albanian nun, came to Darjeeling, India in 1929 with the Sisters of Loreto. She learned Bengali and took the name Teresa upon being initiated into the order. While the nuns at the Loreto Convent were engaged in teaching, Teresa was moved by the poverty she witnessed around her. Traveling by train to Kolkata (then Calcutta), she experienced the epiphany that was to become her life’s mission – to devote her life to the service of the poorest of the poor. On October 7, 1950, Teresa established her own congregation, the Missionaries of Charity, in Kolkata after receiving permission from the Vatican to do so. Its purpose was to care for “the hungry, the naked, the homeless, the crippled, the blind, the lepers, all those people who feel unwanted, unloved, uncared for throughout society, people that have become a burden to the society and are shunned by everyone." She abandoned her nun’s habit and adopted a white sari with a blue border, which continues to be worn by members of her order. Started with 13 members, the Missionaries of Charity have more than 4,000 nuns today running hospices and orphanages around the world.

1950 – Glory to the republic


On January 26, 1950, the 34th and last Governor-General of India Chakravarti Rajagopalachari read out a proclamation announcing the birth of the Republic of India. The Constitution of India came into effect, declaring India as a sovereign, democratic and secular state. Until this day, India was a dominion under the British Commonwealth acknowledging George VI as King and Emperor. Dr Rajendra Prasad (in picture, right) took oath as the President of the new republic. Interestingly, despite the newly proclaimed status India did not renounce allegiance to the British Commonwealth. As the Manchester Guardian observed on January 26, 1950, India regarded the Commonwealth as a “political machinery used to promote peace and economic advancement.”

1948-49 – A prodigal son’s patricide


Nathuram Vinayak Godse (extreme left) and Narayan Apte (center), members of the extremist outfit Hindu Mahasabha, blamed Mahatma Gandhi for conceding Pakistan to the Muslims. Godse and Apte had been part of previous unsuccessful attempts to assassinate Gandhi. On January 29, 1948, the two men reached Delhi Railway Station and checked into the retiring room. Financed by their organization, they had purchased a Beretta .38 semi-automatic pistol. The next morning Godse approached Gandhi as he was heading to a prayer meeting and bowed before him. At point blank range, the assassin fired three shots and the Mahatma collapsed to the ground. Gandhi, breathing his last, is believed to have uttered the words, “Hai Ram”. Announcing Bapu’s death to the nation, Prime Minister Jawaharlal Nehru said, “The light has gone out of our lives, and there is darkness everywhere.” Godse and Apte were executed in November 1949.

1947 - Train to Pakistan


As British India was cloven in two, the birth pangs of nationhood were followed by separation anxiety. The first train to Pakistan, which ran from Delhi to Lahore, was flagged off in August 1947 in a climate of warmth and bonhomie. However, as massive population exchanges took place between the two young nations, tensions ran high and fanned communal passions aflame. As people were plucked out of their homes and forced to cart their families and belongings to the strange new land across the newly drawn border, they came under attack from brigands and hired thugs. Both fledgling governments were ill equipped to deal with such massive migrations, displacement and violence driven by communal sentiments. About 10 million people are believed to have been displaced, and over a million are estimated to have died during the Partition. Sixty-four years later, the scars of Partition live on in public memory, even though the descendants of those affected by it have few physical memories of the event.

1947 - Tryst with destiny


Eleven days before August 15, 1947, Viceroy Lord Louis Mountbatten (center), Jawaharlal Nehru (extreme left) and Mohammad Ali Jinnah (right) prepare for the transfer of power from the British Crown. A notional picture of a divided nation comprising India and Pakistan, as distinct from the agglomeration of princely states and provinces administered by the Raj, came into being during these deliberations. Nehru represented the Indian National Congress while Jinnah stood for the Muslim League, which demanded a separate sovereign state for Muslims. Although the British were in favor of a united Indian subcontinent and the 1946 Cabinet Mission attempted to reach a compromise between the Congress and the Muslim League, neither Nehru nor Jinnah agreed to its proposal for a decentralized state with power vested in local governments. August 14, 1947, the dominion of Pakistan (which then included East Pakistan) declared independence from the British Crown. At midnight the following day, India followed suit with Nehru famously heralding our tryst with destiny.

சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்

சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர் . நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம். சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று 25 காரணங்களை கூறிய தீர்ப்பு அளிக்கிறோம்.
அவை வருமாறு:
1.தமிழகத்தில்தரமான கல்வி சமமான கல்வி தர கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் கல்வி கற்கும் குழந்தைகள் மத்தியில் பொருளாதார சமூக கலாச்சார வேறுபாடுகள் இருக்க கூடாது என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது.
2.கடந்த 2010ம் 2011ம் கல்வி ஆண்டில் 1ம் மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் பாடம் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011&2012 கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று கடந்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. மீண்டும் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழகஅரசு கூறியதை ஏற்க முடியாது.
3.சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில கருத்துக்களை கூறியுள்ளது. இதை கடந்த அரசு பின்பற்றவில்லை. எனவே சமச்சீர் கல்வியை தள்ளிவைத்தோம். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.
4.கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் சில மாற்றங்களை செய்ய சட்டத்தில் தனியாக வழியுள்ளது. இதற்காக நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பிக்க முடியும். இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான்.
5.கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தமிழக அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது என்பதை ஏற்க முடியாது.
6.புதிய அரசு கடந்த மே 16ம் தேதி பதவி ஏற்றது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 17 மற்றும் 18ம் தேதி சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் , தனியார் அமைப்புகள் அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தன. இந்த கோரிக்கைகளை கொடுத்த அமைப்புகள் தான் ஏற்கனவே சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இதை அரசு பரிசீலணைக்கு எடுத்து இருக்க கூடாது.
7.தமிழகஅரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே கடந்த மே மாதம் 21ம் பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அடிக்க தமிழக அரசு டெண்டர் கொடுத்தது. இதன் மூலம் சமச்சீர் கல்வியை தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசியில்ரீதியான உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதன்அடிப்படையில் தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
8.தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாட திட்டத்தை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
9.சமச்சீர் கல்வியை தள்ளிவைப்பதாக அரசு அறிவித்ததை எதிர்த்து பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. இதை அடுத்து தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
10.சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு முதலில் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. உச்ச நீதிமன்றம் அரசு மனுவை விசாரித்து, சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்க்க 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால் கமிட்டி சரியாக செயல்படவில்லை.
11.கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்ய கூடாது என்று கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். அவரே இந்த ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை,என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தவறானது. இப்படி பட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது தவறானது. எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
12.தற்போதைய கல்வித்துறை செயலாளர் கடந்த ஆண்டு 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு, 10 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடபுத்தகங்களை அச்சடி ஒப்புதல் வழங்கினார். இந்த புத்தகங்களுக்கும் விலை நிர்ணயம் செய்ததும் அவர் தான் என்று தெளிவாக தெரிகிறது.
13.தமிழக அரசின் நிபுணர்கள் குழு சில குறைபாடுகளை தான் கூறியுள்ளது தவிர சமச்சீர் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை.
14.சமச்சீர் கல்வி சட்டம் 2010ம் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் வெளி வந்ததால் மற்ற வகுப்புகளுக்கும் சட்டப்படி இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறோம்.
15.பாடத்திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ம் ஆண்டு கொண்டு வந்தாலும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்த சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வியை திரும்ப பெறுவது போல உள்ளது. எனவே இதை ரத்து செய்கிறோம்.
16.ஒரு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு அதை திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி திருத்த சட்டம் கொண்டு வந்தால் அது செல்லாதாகிவிடும்.
17.சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கடந்த அரசு டெண்டர் கொடுத்தது. புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. இதுதெரிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய பாடபுத்தகங்களை அச்சடிக்க டெண்டர் கொடுத்தது. இது தவறானது. இதை அனுமதிக்க முடியாது. இது உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
18.சென்னை உயர்நீதிமன்றம் அளித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு பின்பற்றவில்லை.
19.கடந்த 2005ம் ஆண்டின் தேசிய பாடதிட்ட வரைவை கடந்த சரியாக பின்பற்றியது. அதை சரியாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.
20.சமச்சீர் பாடத்திட்டத்தில் ஒரு சில தவறுகள் உள்ளது என்றும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தவறுக்களுக்காக ஒரு சட்டத்தையே திருத்த வேண்டிய அவசியம் இல்லை.
21.ஆரம்ப பள்ளி சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தலைவரின் படங்கள், கவிதைகள், தத்துவம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அது இளம் மாணவர்களை கவரும் வகையில் உள்ளது , அவர்கள் மனதில் அரசியல் சாயம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழக அரசு கூறியதால் அந்த பகுதிகளை நீக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதை அரசு ஏற்று இருக்க வேண்டும். இதை அரசு ஏற்காதது தவறானது. அதற்கு மாறாக சமச்சீர் கல்வியை காலவரையற்ற அளவில் தள்ளிவைத்துள்ளது.
22.தமிழக அரசின் கல்வித்துறை இணைய தளத்தில் 10 வகுப்பு பாடங்கள் வெளியிடப்பட்டதை தெரிந்து கொண்ட மாணவர்கள் அவற்றை நகல் எடுத்து படித்து வந்துள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ய முடியாது. 2010 &2011 கல்வி ஆண்டிலும் சமச்சீர் பாடத்திட்டம் தான் இருக்கும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.அந்த நம்பிக்கையை அரசு பாழ்படித்துள்ளது.
23.சமச்சீர் கல்வியை மேலும் வலுபடுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அரசு அமுல்படுத்திருக்க வேண்டும்.
24.ஒரு சில பள்ளிகள் தங்களுக்கு விரும்பமான பாட திட்டங்களை தேர்வு செய்யலாம் என்ற காரணத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது.
25.உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்தை செல்லும் என்று கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அப்படி இருக்கும்போது தற்போது 2011ம் ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது.
சமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்த, சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான். சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு செல்லும்.
ஒவ்வொரு கட்சியும் அரசு மாறும் போது மாணவர்கள் பாதிக்கும் அளவு நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது. தமிழக அரசின் நடவடிக்கை மாணவர்களின் அடிப்படை அதிகாரத்தை பறிப்பதாகும். மாணவர்களுக்கு பாதிப்பதாக உள்ளது. அரசியில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் என்ற காரணத்தை காட்டி மாணவர்கள் படிப்பு பாழாக்க கூடாது. பாழக்கியது தவறு. அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அதை ஏற்க முடியாது. குழந்தைகள் எதிர்காலம் பாதிக்காதவகையில் அரசு செயல்பட வேண்டும். அரசியில் உள்நோக்கத்துடன் அரசு நடவடிக்கை எடுத்ததாக தெளிவாக தெரிகிறது. உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழக அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்கிறோம்.