Tuesday, December 6, 2011

ஏமாற்றி விடாதீர்கள். ஜமாயுங்கள் …


கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படை யிலான காரணங்கள் உண்டு.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும்…அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப் பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது….

இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல. முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸீஸஸ் வரும் வாய்ப்புகள் அதிகம்…. அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்ப தியருக்குக் கட்டாயம் வரும்….. என்பது போன்ற சிலரது தவறான வழி காட்டு தலையெல்லாம் குப்பையில் வீசி எறியுங்கள்.

முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும்.

அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும். அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும்போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம். இதை எப்படி களைவது?

முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடாமல் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு சாப்பிடுங்கள். கையால் தான் ஊட்டிவிட வேண்டுமென்பதில்லை… வாயால் கூட…

புதுமணத் தம்பதிகளைப் பொருத்தவரை, வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். இரும்பும் காந்தமும் ஒட்டிக்கொள்வதுபோல் முதலிரவில் கணவனும் மனைவியும் ஒட்டிக்கொள்வது இயற்கையிலும் இயற்கையே…

சாதாரண பேச்சில் ஆரம்பித்து, ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டு, நகைச் சுவையைக்கலந்து, சிறிது சிறிதாக பேச்சினூடே பட்டு ம்படாத ஸெக்ஸான வார்த்தைகளை கலந்து, போகப்போக அந்த பேச்சின் முடிவு காமக்கிளர்ச்சி யில் கொண்டு விடுமானால் முதலிரவு தேனான இரவாக இனிக்கும். எக்கரணத்தைக் கொண்டும் முதலிரவில் தனது இல்லற பார்ட்னரின் மனதைப் புண்படுத்தும் எந்த பேச்சும் செய்கையும் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

உடலுறவை முதலிரவில் வைத்துக் கொள்ளாமல் சில நாட்களுக்குப் பிறகு நன்கு பழகியபின் வைத்துக் கொள்வது நல்லது என்று சொல்லக்கூடிய கருத்துக்களெல்லாம் காலாவதியாகிவிட்ட ஒன்று.

எங்கு திரும்பினாலும் காமம் கொட்டிக்கிடக்கும் இந்த நூற்றாண்டில் அதெல்லாம் சாத்தியமே இல்லை. எழுதுவதோ சொல்வதோ எளிது. ஆணும் பெண்ணும் ஒரு அடி இடைவெளிக்குள் நெருங்கிவிட்டாலே இருவரும் உடலால் ஒன்று சேர்வதை தவி ர்க்க முடியாது என்று இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறும்பொழுது உடலுறவை தாமதப்படுத்தும் கருத்துக்களெல்லாம் சும்மா கப்ஸா என்றே தோன்றுகிறது.

இன்றைய இளம் தலைமுறையினர் சிந்தனையில், இந்த முதலிரவில் எப்படியெப்படியெல்லாம் செய்யலாம், எத்தனை முறை செய்யலாம் என்கின்ற கணக்குத்தான் ஓடிக்கொண்டிருக்குமே தவிர….மாற்று சிந்தனையல்ல. எனவே ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, முதலிரவில் உங்கள் இல்லற பார்ட்னரை காக்க வைத்து ஏமாற்றி விடாதீர்கள். ஜமாயுங்கள் … ஏனெனில் நீங்கள் இருவரும் ஓருடல் என்பதை நிரூபிக்கும் இரவல்லவா இந்த முத லிரவு!

முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து


இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறியுள்ளார்.
அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத்திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய பதட்டத்தை குறைக்கும் அவ்வளவு தான். சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம், உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது, எப்போதுமே குப்புறப் படுத்துக் கொள்வது, மனதை பலவிதங்களிலும் அலையவிடுவது, கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது, பெண்களை நிமிர்ந்து பார்க்கக் கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது, செக்ஸ் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பது, செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது, அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு சுய இன்பத்தினால் விந்து வீணாவது பற்றிய தவறான எண்ணங்களும் தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.
இன்னொரு விஷயம், ஆணோ, பெண்ணோ, தங்கள் உடலைப் பிறந்த மேனிக்குத் திறந்து போட்டுக்கு கொண்டு தனியறையில் கண் ணாடியில் பார்த்துக் கொள்ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படுத்தி விடும்.

Monday, November 14, 2011

போராட்டக் களம்

போராட்டக் களமாக மாறிக்கொண்டே இருக்கிறது தமிழ்நாடு. மக்கள் பலம் இழந்து போன கட்சிகள், தத்துவ பலம் மக்கள் பலம் இரண்டுமே இல்லாத இயக்கங்கள் எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்து போன ஏதும் செய்ய இயலாத தலைவர்கள், மேடைப் பேச்சிலேயே புரட்சியைக் கொண்டு வந்து விடலாம் என என்னும் செந்தமிழர்கள் மற்றும் கற்பனைவாதிகள், மக்களே போராடுங்கள் என்று அறைகூவுவதும் மக்கள் திரண்டு விட்டாலோ அல்லது திரண்டு போராடும் நிலை ஏற்பட்டாலோ, அதை கலைக்க முயலும் துரோகிகள். இப்படித்தான் தமிழக அரசியல் சூழ்நிலை நமக்கு தோற்றமளித்தது.

ஆனால் வரலாறு மக்களின் மீது இடையறாத நம்பிக்கை கொண்டுள்ளது. ஏனென்றால் வரலாற்றை படைப்பவர்கள் மக்கள் என்பதால். ஈழமக்களின் துயர் தமிழ்நாட்டு மக்களையும் வாட்டி வருவதால் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை எங்கும் காண முடிந்தது. இந்த போராட்டமானது சானல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டதும், அது உலக நாடுகளிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்து அதனை மிகப்பெரிய துருப்புச்சீட்டாக பயன்படுத்தி வலுவாக முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், இராசபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானமும் சேர்ந்துக்கொள்ளவே வெகு மக்களின் ஆதரவும் கணிசமான அளவுக்கு கிடைக்கவே தமிழ்நாடு முழுவதும் அந்த போராட்ட அலை பரவ துவங்கியது. ஆவணப்படத்தை மக்கள் முன் திரையிடப்பட்டதும் அதனை நகல் எடுத்து பெரும்பாலான வீடுகளில் வினியோகித்தும் தொடர் பிரச்சாரமும், பரப்புரையும் பரவலாயிற்று. இதன் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வு மக்கள் மத்தியிலே தொடர்ந்து பெருகலாயிற்று. பல இடங்களில் பட்டினிப்போராட்டம், ஆர்பாட்டம், பொதுக்கூட்டம் என்று பல திசைகளில் மேலும் மேலும் மக்களிடையே விழிப்பினை ஏற்படுத்திய போராட்டம் தொடங்கியது.

இந்த எழுச்சியினையும், ஆளும் நடுவண் அரசின் மீது தொடர்ந்து அதிகரித்த ஊழல் குற்றச்சாட்டினையும் ஒரு சேர குலைக்கவும், கலைக்கவும், அவர்களுக்கு கிடைத்த நபர்தான் அன்னா அசாரே. ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற வகையில் தில்லியில் திரண்ட கூட்டம், மற்ற அனைத்து பிரச்சனைகளையும் பின்னுக்கு தள்ளியது. ஊடகங்கள், இந்திய அளவிலான கட்சிகள், சமூக ஆர்வளர்கள் அனைவரும் அதனை முக்கியத்துவம் உள்ளதாக சித்தரித்ததால் மற்ற பிரச்சனைகள் பின்னுக்கு தள்ளப்பட்டன. நாடளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியிருந்த இலங்கை இனப்படுகொலை பிரச்சனை மறக்கடிக்கப்பட்டது, நேரம் ஒதுக்கமுடியாது என்று மறுக்கப்பட்டது. அன்னா அசாரேவின் பட்டினிப்போராட்டத்திற்கு ஆதரவு அதிகரிக்கவே, சமாதானத்திற்கு இறங்கிய நடுவண் அரசு ஒரு சில வாக்குறுதிகளுடன் அதனை முடிவுக்கு கொண்டுவரவே, போராடிய கூட்டம் ஊழலையே ஒழித்துவிட்டது போல வெற்றி விழா கொண்டாடியது.

சட்டங்களின் மூலம் ஊழலை ஒழிக்க முடியாது என்பது தெளிவு. மேலும் இது முதன்மை அமைச்சர், நீதிபதிகள் போன்றவர்களை இந்த சட்டவரம்பிற்குள் கொண்டு வருவதனை மட்டுமே நோக்கமாக கொண்டது. இவர்கள் நீங்கலாக மற்ற அனைவருக்கும் ஊழல் செய்தால் தண்டனை வழங்கும் சட்டங்கள் நிறைய இருக்கின்றன. அவை எல்லாம் எப்படி செயல்படுகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் இந்த போராட்டத்தினால் அதிகார ஆளும் வர்க்கம் நினைத்தது நன்கு நிறைவேறியது.

அதுதான் நடுவண் அரசின் தொடர் ஊழல் பிரச்சனைகளின் அழுத்தம் தாங்காமல் ஆட்சியாளர்களுக்கு சிக்கல் ஏற்படும் தருணத்தில், ஊழலுக்கு தீர்வு கண்டுவிட்டது போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியது. தொடர் ஊழல்களால் நடுவண் அரசின் மீது கடும் அதிருப்தியில் இருந்த மக்களின் உணர்வு நிலை இந்த போராட்டத்திற்கு பின்னர் நியாயம் கிடைத்து விட்டது போன்ற உணர்வு நிலைக்கு மாறி அரசின் மீது இருந்த அழுத்தம் குறைந்து போனது.

அன்னா அசாரே பெருவெற்றி பெற்றவராகவும், நடுவண் அரசு தொல்லையிலிருந்து விடுபட்டதாகவும் நிலை தோற்றமளித்தது. ஆனால் ஊழல்களும், எல்லா ஊழல்வாதிகளும் தண்டிக்கப்படாமலும், சுதந்திரமாகவும் உலா வந்துக்கொண்டுதான் இருக்கின்றன, இருக்கின்றார்கள். மக்களின் போராட்ட வலுவை, கிளர்ச்சி மனோபாவத்தை அரசு திட்டமிட்டு குலைப்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்.

தமிழ்நாட்டிலே அன்னா அசாரேவின் பட்டினிப்போராட்ட நாடகம் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்த திகைத்துப்போன நடுவண் அரசு, இனப்படுகொலை தொடர்பான போராட்ட அழுத்தங்கள் அதிகரிக்கவே, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனைக்கான கருணை மனுவை குடியரசுத் தலைவரை விட்டு நிராகரிக்க செய்ததுடன், தூக்குத்தண்டனையை நிறைவேற்ற நாளும் குறித்தது.

ஏற்கனவே இனப்படுகொலைக்கு எதிரான போரில் உணர்வு பெற்றிருந்த தமிழ்நாடு தனது போராட்ட பலத்தை மரணதண்டனைக்கு எதிராக திருப்பியது. போராட்டம் அனைத்து திசைகளிலும் உருவெடுக்கவே, சென்னையில் மூன்று பெண் வழக்கறிஞர்கள் பட்டினிப் போராட்டம் மேற்கொண்டது முக்கிய நிகழ்வாய் மாறியது.

நீதிமன்றத்தில் துவங்கப்பட்ட பட்டினிப்போராட்டம் பின்னர் கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. பட்டினிப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகியது. அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்து ஒன்று சேர்ந்து பரப்புரைகளையும், போராட்டங்களையும் நடத்தின. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆர்பாட்டங்கள், பேரணிகள், பட்டினிப்போராட்டங்கள், கருத்தரங்கள் மற்றும் மனித சங்கிலிகள் நடைபெற்றன. இது பரவலாக மக்களை ஒரு விவாதத்திற்கும், அந்த விவாதத்தை தொடர்ந்து விழிப்புணர்விற்கும் இட்டுச் சென்றது.

அதே சமயத்தில் கட்சிகளின், இயக்கங்களின் இயலாமையும், செயலின்மையும் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வலுவான போராட்டத்தினை முன்னெடுக்கவோ ஒருங்கிணைக்கவோ வலுவின்றி கருத்து போர்களை மட்டுமே நம்பியும், தமிழக அரசினை அதிக அளவில் நம்பியும், எதிர்பார்த்தும் இருந்தனர். சட்டத்திற்குட்பட்ட தமிழக அரசு ஆட்சிக்கு தீங்கு இழைக்காத கோபப்படுத்தாத வழிமுறைகளை தேர்ந்தெடுத்து அதனை மட்டுமே வலியுறுத்திக் கொண்டிருந்தனர், இந்த தலைவர்கள் மற்றும் இயக்கங்கள்.

உருவாகி வந்த போராட்ட சூழ்நிலையையும், அதனை பயன்படுத்தி முன்னேற முடியாமல் இருந்த தேக்க நிலையையும் கண்டுதான் கிளம்பினால் செங்கொடி.. தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது முத்துக்குமாரின் ஈகம். அப்படி ஒரு ஈகமே இந்த தேக்க நிலையையும் உடைக்க வல்லது என்று கருதிய, உணர்ந்த அந்த புரட்சிக்கொடி தன் உயிரையே ஈகம் செய்தாள். செங்கொடியின் ஈகம் தமிழ்நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது. அந்த சிறிய பெண்ணுக்கு இருந்த நெஞ்சுரம், துணிவு அனைவரையும் வெட்கப்பட வைத்தது. போராட்டக் கனல் தமிழ்நாட்டிலே பரவத் துவங்கியது. அது அனைத்து தரப்பினரையும் உலுக்கியெடுத்தது.

ஓர் உயிரின் மதிப்பு ஒப்பற்றது தான் ஆனால் தன் உயிரையும் விட ஒப்பற்றது போராட்டம் என்று நன்கு உணர்ந்தவள் தான் செங்கொடி. தான் உணர்ந்ததை உலகுக்கு காட்டியும் சென்றாள் அவள். அந்த ஈகத்தின் எதிரொலியாக கிளம்பிய போராட்ட வேகம் விரைவில் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணதண்டனையை ரத்துசெய்ய கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற செய்தது.

மக்களின் போராட்ட்த்திற்கு கிடைத்த இரண்டாவது தீர்மானம் வெற்றியாகும் இது.

ஆனால் இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தோமேயானால் செங்கொடியின் தியாகம் நமக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தியது. மக்களின் கோரிக்கைகளை முன்னெடுத்து சென்று வலுவாக போராட எந்த இயக்கமும் தகுதியாக இல்லை என்பதும், உருவாகி வரும் மக்கள் போராட்டத்தினை ஒருங்கிணைக்கும் அளவுக்கு யாருக்கும் யாருக்கும் பலமில்லை என்பதும் மேடைகளிலே பேசுபவர்களை நம்பி பயனில்லை என்பதும் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொலை செய்யப்படும் போது, சிறைகளில் தூக்கு கொட்டடியில் துன்புறும் போது அவர்களை விடுவிக்க எந்த முறையினாலும் முடியாது என்ற நிலைக்கு வரும்பொழுதுதான் தன்னை தியாகம் செய்து கொள்ளும் அளவுக்கு செல்லும் இந்த போராளிகளின் இழப்பிற்கு இன்று சமூகத்தில் நிலவும் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளே பொறுப்பானவர்கள்.

தானும் இணைந்து போராட தகுதியான சரியான அமைப்பை இளைஞர்கள் தேடும்போது அங்கே வெற்றிடம் மட்டுமே இருப்பதை உணர்ந்து கொள்கிறார்கள். ஒரு சில அல்லது பல இளைஞர்கள் மேடை பேச்சினை நம்பி ஏமாந்து போகின்றனர்.

இது போன்ற நிலை நீடிப்பதானது இயக்கங்கள், மக்கள் ஆதரவு இழந்து வெறும் பகட்டு பொருளாக உலவி வருவதுதான் காரணமாக இருக்கிறது. அறைக்குள் இருந்து போராடுவதும், காகிதங்களிலேயே புரட்சி நடத்துவதும், கருத்தியல் போராட்டம் என்ற பெயரிலே தனி நபர் தூற்றலும், இளைஞர்களை சீரழிப்பதுமே இயக்கங்களின் நடைமுறையாக இருந்து வருகிறது.

முத்துக்குமார், செங்கொடி போன்ற ஆயிரமாயிரம் இளைஞர்கள் இங்கே உண்டு. அவர்கள் இனி யாரையும் நம்பாது தங்கள் மீது உள்ள பொறுப்பினை உணர்ந்து துணிவோடு இந்த சமூகத்தின் இடையூறுகளை களைய போராட வேண்டும். உயிர்த்தியாகம் போதும், உயிரோடு இருந்து, ஈகம் செய்த பலரின் கனவுகளை நினைவாக்க உறுதி எடுத்துக் கொள்வதே சரியான முறையாகும்.

மக்களின் போராட்ட வலுவின் காரணமாக தமிழக அரசு தொடர்ந்து தீர்மானம் இயற்றி வந்தாலும் அந்த தீர்மானங்களால் எந்த விடிவும் வரவில்லை என்பதை நாம் கண்கூடாக பார்க்கும் அதே வேளையில் அது போராட்ட உணர்வினை மழுங்கடிப்பதாகவும் வினை புரிகிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.

தீர்மானங்கள் கொண்டு வந்தாலும் மக்களின் தொடர் போராட்டமே தீர்வினை பெற்றுத்தரும் என்பதை விடுத்து நன்றிக்கூட்டங்களும், வெற்றிக் கூட்டங்களும் நடத்துவதிலே இன்பம் காண்பதை சில அமைப்புகள் திட்டமாக வைத்துள்ளன. மேலும் தமிழக அரசின் உண்மை முகத்தை அறியாமல் அல்லது அறிந்துக் கொண்டே அதனை புகழ்வதை, அதனை அண்டி இருப்பதை பெரும்பாலான அமைப்புகள் விரும்புவதையும் காண்கிறோம்.

இச்சூழலில்தான் தமிழக அரசு தனக்கேயுரிய நயவஞ்சக முகத்தினை பரமக்குடி துப்பாக்கிச் சூட்டினால் தெளிவாக காண்பித்தது.

தமிழக அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க தலைமை தன் ஆதிக்க சாதி வெறியினை 7 பேரின் உயிரினை பலி கொண்டதன் மூலம் அதன் உண்மை முகத்தினை உலகுக்கு காண்பித்தது.

ஈழத்தில் பல்லாயிரக் கணக்கானவர்களின், தமிழ்நாட்டு சிறையில் இருக்கும் மூவரின் உயிரினை நாம் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த வேளையில் மிகவும் எளிதாக 7 அப்பாவிகளின் உயிரை பறித்து தன் ஆதிக்க சாதி வெறியை நிலை நிறுத்தியது தமிழக அரசு.

அதுவரை இருந்த மாயை உடைந்து சின்னா பின்னமாகி போனது. தமிழ்நாட்டில் உருவாகி வந்த ஒரு ஒற்றுமையினை குலைப்பதோடு அதே வேளையில் எழுச்சி பெற்று வரும் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட உணர்வினை சிதைக்கும் வகையில் தொடுக்கப்பட்ட வெறிச் செயலே இது.

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு வருகை புரிந்தவர்களை திட்டமிட்டு தடுத்து நிறுத்தியதோடு ஒரு கலவரத்திற்கும் காரணமாக அமைந்தது தமிழக காவல்துறை. துப்பாக்கிச் சூட்டிற்கான அவசியமே இல்லாத போதும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பரமக்குடி, இளையான்குடி மற்றும் மதுரை போன்ற பல இடங்களில் தேவையே இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தி 7 உயிர்களை பலி வாங்கியும் பலரை படுகாயப்படுத்தியும் தன் வக்கிர எண்ணத்தை காண்பித்தது தமிழக காவல்துறையும், தமிழக அரசும்.

அதுவரை முற்போக்காளர் சட்டை போட்டுக்கொண்டு திரிந்த பலரும் அம்பலப்பட்டு போயினர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பெயரளவில் ஒரு கண்டனத்தை தெரிவித்துவிட்டு, சில பேர் அதையும் கூட தெரிவிக்காமல் நடந்துக் கொண்டது தமிழக அரசியல் சூழலையும் அதில் நிரம்பியிருக்கும் சாதி வெறியையும் வெளிப்படையாக காண்பித்தது.

எப்பொழுதும் போல் செங்கொடி விடயத்தில் எப்படி அந்த புரட்சிப்பெண்ணின் ஈகத்தை திசைத்திருப்ப முயன்றதோ அதே போல் இந்த கலவரத்திற்கான காரணத்தையும், 7 உயிர்கள் பறிக்கப்பட்டதற்கான காரணத்தையும் திரித்துக்கூற துவங்கினர். உச்சக்கட்டமாக தமிழக அரசு, கலவரக்காரர்கள் முத்துராமலிங்கத்தின் பெயரை இழிவாக எழுதியதால் தான் கலவரம் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிற அநியாயமான தகவலை சட்டபேரவையில் வெளியிட்டபோது ஆதிக்க சாதி வெறி வெட்ட வெளிச்சமானது.

அமைதியாக நடக்க வேண்டி இருந்த இமானுவேல் சேகரனின் அஞ்சலி தேவையில்லாமல் அந்த சமுதாய தலைவர்களில் ஒருவரை தடுத்ததன் மூலம் கலவரத்தை துவக்கி வைத்த காவல்துறையும், தமிழக அரசும் தான் இதில் குற்றவாளிகள். இதனை வெளிப்படையாக கூறாத எவரும் மக்கள் விரோதிகளே.

மேலும் தான் தோன்றித்தனத்தால் 7 உயிர்களை பலிவாங்கியப்பின் அதனை சாதி மோதலாக விளக்கம் சொன்ன செயலலிதா, இந்த தமிழ்நாட்டை அமைதியாக விட்டு வைக்க போவதில்லை. உருவாகி வரும் நல்ல சூழல்களை கூட குழப்பி சாதி, மத மோதல்களாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கும் இந்த செயலலிதாவும், செயலலிதாவை சார்ந்தவர்களும் இந்த தமிழ்நாட்டின் மிகப்பெரிய துரோகிகளே.

இதனை உணராமல் பல கற்பிதங்களையும், மாயைகளையும் உருவாக்கி வளர்த்து வருபவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களை எதிர்த்து போராட வேண்டும்.

மேலும் இந்த பரமக்குடி கலவரத்தின் போதும் துப்பாக்கிச்சூடு நடத்தி 7 உயிர்கள் வீழ்ந்த போதும் அந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலையாமல் உறுதியாக இருந்ததுதான் காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் போராடும் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடுத்த சம்மட்டி அடி. வீழ்ச்சிகளில் இருந்தே பாடம் கற்றுக்கொள்ள முடியும், சோதனைகளில் இருந்தே சாதிக்க கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கிணங்க சாவைக் கண்டும் அஞ்சாமல் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் துப்பாக்கிகளுக்கு எதிராக நெஞ்சுரம் காட்டி போராடியது நடந்த சோகத்திலும் மக்களில் வலிமையினைக் காட்டுவதாக அமைகிறது. இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சுரமும், துணிவும், போராடும் ஆற்றலும் எந்த கொடுங்கோல் அரசினையும் வீழ்த்தவல்லது.

துப்பாக்கிச்சூடு நடத்தி 7 உயிர்களை கொன்றதோடு விட்டதா? தமிழக அரசு, கைது செய்கிறேன் என்று இறங்கி 1000க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தும், மேலும் இரண்டு பேர் கொல்லப்பட காரணமாகவும் இருக்கிறது, வகை தொகையின்றி அனைவரும் கைது செய்யப்பட அந்த பரமக்குடி பகுதி மக்கள் தொடர்ந்து இன்றைக்கு ஆளாகி வருகின்றனர். அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு எந்த இயக்கத்தையும் அமைப்பையும் காணோம்.

அந்த சமுதாயத்தை சார்ந்த தலைவர்களே அதைப்பற்றி பெரிதும் கவலைப்படாமல் உலவி வருவதுதான் அதனினும் கொடுமை. ஆனால் இந்த இழி போக்குக்கெல்லாம் தீர்வு தருவதாவது அந்த மக்களின் சொந்த போராட்டமே. ஒடுக்கு முறைக்கு எதிராக போராட களத்தில் நிற்கும் மக்களிடையே இருந்துதான் உண்மையான தலைவன் உருவாகி வர முடியும். அந்த எண்ணத்தை உள்வாங்கி கொண்டு ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் அனைத்து மக்களும் உறுதியோடு போராட வேண்டும். ஒடுக்கப்படும் இனத்திற்கு ஆதரவாக மற்றவர்களும் இணைந்து போராட முன் வரவேண்டும்.

இதே வேளையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிராக உருவான போராட்டம் ஒரு திருப்பு முனையாகும்.

உலக அளவில் அணு உலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பிக் கொண்டிருக்கையில், பெரும்பாலான அய்ரோப்பி நாடுகள் மற்றும் முன்னேறிய நாடுகள் அணு உலைகளை தங்கள் நாட்டிலிருந்து அப்புறப்படுத்திக் கொண்டிடுக்கையில், ஏன் இந்தியாவில் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் மேற்கு வங்கம் கூட அணு உலைகளை தங்கள் பகுதியில் அமைக்கக்கூடாது என்று அதற்கெதிராக போராடிக் கொண்டிருக்கையில், தமிழக அரசு மட்டும் வரவேற்றுக் கொண்டிருக்கிறது.

மற்ற மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதால் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட கூடங்குளம் அணுமின் திட்டம்தான் மக்களின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. நீண்ட நாட்களாக வேலைகள் நடந்து வந்த அத்திட்டம் இப்போது இயங்கும் நிலைக்கு வந்திருக்கிறது. இந்நிலையில்தான் மக்கள் அதனை மூடக்கோரி போராட்டம் நடத்துகின்றனர்.

துவக்கத்தில் வராத எதிர்ப்பு ஏன் இப்போது வருகிறது என்றெல்லாம் கேட்கப்படுகின்றன? துவக்கத்தில் எதிர்ப்பு வரவில்லை என்று யார் சொன்னார்கள்? கூடங்குளத்தில் அணுமின் நிலையம் வரக்கூடாது என்று போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்கள் போராட்டத்தை குலைத்தது தமிழக அரசு. தொடர்ச்சியாக பல சூழ்ச்சிகளைக் கையாண்டு அந்த பகுதி மக்களுக்கு பல பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, வேலை வாய்ப்புகள் ஆசைக்காட்டி தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டது அரசு.

உலக அளவில் பரவிவரும் விழிப்புணர்ச்சியும், சமீபத்தில் யப்பான் புகுசிமாவில் உள்ள அணு உலையில் சுனாமி புகுந்ததால் அந்த அணு உலையிலிருந்து வெளியான கதிரியக்கம் பரவி பல்லாயிரக் கணக்கானோரை பலி கொண்டது. தொழில்நுட்பத்தில் வளர்ந்து விளங்கும் முன்னேறிய நாடான யப்பானாலேயே இத்தகைய விபத்தை சமாளிக்க முடியாமல் போனது உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மிகச்சிறந்த நிர்வாகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு போன்றவைகளை கொண்ட யப்பானாலாயே சமாளிக்க முடியாத பேரழிவுக்குப் பிறகும், இந்தியா போன்ற நாடுகள் அணு உலைகளை நாடுவது மக்கள் விரோத போக்கே ஆகும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் சோதனை ஓட்டத்திற்காக தயாரான போது மக்களிடம் கடும் அதிருப்தி தோன்றியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் எனக் கூறிக் கொண்டு விபத்து ஏற்பட்டால் வெளியேறுவது எப்படி என்றும், அணுக்கரியக்க வீரியத்தை குறைப்பதற்கு எனக்கூறி மாத்திரைகளை மக்கள் மத்தியில் வழங்கத் துவங்க எத்தணித்த பின்தான் ஏற்கனவே எதிர்ப்பு மனோநிலையில் இருந்த மக்கள், போராட்டத்திற்கு அணியமானார்கள்.

கூடங்குளம் அருகே உள்ள இடிந்தக்கரை என்னும் கிராமம்தான் இந்த போராட்டத்திற்கு வித்திட்டது. மீனவர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த கிராமம்தான் அணு உலைக்கு எதிரான போரில் கச்சைக் கட்டிக்கொண்டு போராடியது. இடிந்தகரை மக்களுடன் கூடங்குளம் மக்களும் சேரவே போராட்ட வலு இன்னமும் கூடியது. போராட்டத்திற்கு திரண்ட மக்கள் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே போனதுகண்டு விரைவில் அனைத்து தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் எல்லா இடங்களிலும் போராட்டம் பரவியது. இராமநாதபுரம் மாவட்டத்திலும் மற்றும் தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் போராட்டம் பரவவே தமிழக அரசு பேச்சுவார்த்தையை துவக்கியது. பட்டினிப்போராட்டம் துவங்கியபோது தன்னால் ஏதும் செய்ய இயலாது என்றும், அணு உலை மிகவும் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறது என்றும் தமிழக அரசு அறிக்கை விட்டது. அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தன்னுடைய போராட்டத்தை அயராது தொடர்ந்து 127 பேர் பட்டினிப்போராட்டம் இருக்க, பள்ளிகள் கல்லூரிகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுக்க கூடியிருந்த மக்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தையும் தொட்டது.

தமிழ்நாட்டு அரசியல் சூழல் வேறு பல காரணங்களால் திசை திருப்பப்பட்டு இருந்ததால் கூடங்குளம் போராட்டம் தன் கவனத்தை சிதற விடாமல் முன்னேறியது. எந்த வித ஆசைக் காட்டலுக்கும் சளைக்காத மயங்காத போராட்டக்குழு மக்களின் போராட்ட வலுவை உரப்படுத்தியது. போராட்டத்தின் உக்கிரம் வெளிப்பட துவங்கவே ஊடகத்தின் கவனமும் அனைத்து தரப்பினரின் ஆதரவும் போராட்டத்திற்கு துணையாக களமிறங்கினர்.

இதற்கிடையில் அணு உலை பாதுகாப்பானது மக்கள் அறியாமையினால் போராட்டம் நடத்துகிறார்கள். கடல் மட்டத்திற்கு மீது 7 மீட்டர் உயரத்தில் இருப்பதால் சுனாமியோ நிலநடுக்கமோ தாக்காது, 13000 கோடி ரூபாய் செலவளித்தாகி விட்டது, இப்போது எப்படி கைவிட முடியும், மக்கள் போராட்டத்தினை கைவிட வேண்டும் என்று சில கட்சிகளும், பல அறிவு ஜீவிகளும், அதிகார ஆளும் வர்க்கத்தின் முகவர்களான ஊடகங்களும் தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வந்தனர். ஆனால் அறிவும் திறனும் இவர்களுக்கு மட்டும்தான் சொந்தம், மற்றவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் கிடையாது என்று எண்ணிவிட்டனர் போலும்.

ஆபத்து காலத்தில் அணு உலை பாதுகாப்பையும் தாண்டி, அணு உலை மின் தயாரிப்பில் இருக்கும் பொழுது அது வெளிப்படுத்தும் கதிரியக்கம், மின்னாற்றல் உருவாக்கத்தின் போது உருவாகும் கழிவுகளை அப்புறப்படுத்தும் பிரச்சனையைத்தான் மக்கள் முதன்மைப்படுத்தி போராடுகிறார்கள்.

முன்னேறிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள், நிபுணர்கள் கூற்றுகளின் படி, அந்நாடுகள் தங்கள் அணு உலையை மூடுவதற்கு நாள் குறித்து மூடியும் வருகின்றனர். உலகின் மின் தேவையில் 4 சதம் மட்டுமே தரும் அணு உலைகள் கோரும் பொருட்செலவும் அது ஏற்படுத்தும் பாதிப்பும் மிக அதிகம். மக்களை விலையாக கொடுத்து மின்னாற்றல் உருவாக்கும் திட்டத்தை, சுற்று சூழலையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் கெடுத்து மின்னாற்றல் உருவாக்கும் திட்டத்தை மூடுவதுதான் சரியானது என்று உலகம் முழுவதும் எண்ணுகின்ற அதே வேளையில், அந்த முன்னேறிய நாடுகள், தாம் பணம் சம்பாதிக்க வளர்ந்து வரும் நாடுகளின் தலையில் தான் மூடிய அணு உலைகளை கட்டுவதுடன் பெரும் பணம் ஈட்டவும் செய்கிறது. அந்நாடுகள் தரும் இழிவான பிச்சைக்காசுக்காக வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகார ஆளும் வர்க்கங்களும் அவர்களது ஏவலாளாக நின்று தங்கள் மக்களை கொன்றேனும் அக்காசினை சம்பாதிக்க அனைத்து இழி செயல்களிலும் இறங்குகின்றனர். அதனால்தான் மக்களை பற்றி துளியேனும் கவலைப்படாமல் இது போன்ற திட்டங்களை ஆதரிக்கவும், அமல்படுத்தவும் கடும் பிரயத்தனம் புரிகிறார்கள்.

இவர்களது எல்லா புரட்டுகளையும் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதுதான் இன்று நமக்கு மிகவும் சாதகமான சூழலாக இருக்கிறது. இவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளுக்கும், செய்யும் சூழ்ச்சிகளுக்கும் ஆட்படாமல் மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்க உறுதியுடன் உள்ளனர் என்பதுதான் ஊக்கமான விடயமாக உள்ளது.

அவ்வகையிலேயே இந்த கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிரான போராட்டம் வலுப்பெற்றது. 10 இலட்சம் மக்களின் வாழ்வு பாதிக்கப்படுவது, கடலையே நம்பி தொழில் நடத்தும் மீனவர்கள் வாழ்க்கை அழிக்கப்படுவது, கடல் வளம் முற்றிலும் நாசமாக்கப்படுவது, நீராதாரங்கள் முற்றிலும் நிர்மூலாக்கப்படுவது, கதிரியக்கத்தால் பல நோய்கள் பரவுவது மக்கள் நீண்ட காலமாக வாழும் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்படுவது, கடலுக்குள் பாதுகாப்பு என்ற பெயரில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிப்பது, இன்னும் பல ஆபத்துகள் இந்த அணுமின் நிலையத்தினால் ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கும் அணு உலையை மூடுவதற்கும் இனிமேல் எந்த அணு உலையும் அமைக்க்க் கூடாது என்பதுமே நமது போராட்டமாக அமைய வேண்டும்.

இந்நிலையில் அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கம் தன் பட்டினிப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியது. 127 பேர் பட்டினிப்போராட்டம், 40000 மக்களுக்கு மேல் பங்கேற்றமை மாநில அரசினை உலுக்கியது. முதலில் முரண்டு பிடித்த அரசு பின்னர் இறங்கிவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஏற்கனவே நடந்த மற்ற போராட்டங்களை காட்டிலும் இந்த போராட்டத்திற்கு சில சிறப்புக் கூறுகள் உள்ளன. அதாவது போராட்டக்குழு மாநில அரசுடனான பேச்சு வார்த்தையில் பங்கேற்க விருப்பமில்லாமல் இருந்தது. ஏனென்றால் நடுவண் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும் அணுமின் நிலையம் குறித்து மாநில அரசு முடிவெடுக்க முடியாது என்பது தெளிவு. மேலும் தமிழக அரசு முன்னுக்குப்பின் முரணாகவும் அணு உலைக்கு ஆதரவான கருத்துக்கையுமே தெரிவித்து வந்தது. இருந்தாலும் நடுவண் அரசுக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசின் உதவியையும் கைக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தப்பின் அதாவது அணு உலைக்கு எதிரான போராட்டத்தை மாநில அரசு ஆதரித்தால் மட்டுமே அதன் ஆதரவு கோருவது இல்லையென்றால் போராட்டத்தை தொடர்ந்து எடுத்து செல்வது என்று போராட்டக்குழுவினர் முடிவெடுத்தனர்.

நான் எல்லோருக்கும் ஒன்று தெரியப்படுத்த விரும்புகிறேன். இந்தப் போராட்டம் அரசு அனுமதி இல்லாமல் நடந்த போராட்டம். இது சட்டத்திற்குட்பட்ட போராட்டம் அல்ல அதே போல சட்ட விரோத போராட்டம் அல்ல, ஆனால் பெருந்திரளான மக்கள் பங்கேற்ற சனநாயகப் போராட்டம். தங்களது கோரிக்கைகளுக்காக போராடுவதற்கு, எல்லா வழிகளிலும் போராடுவதற்கு மக்களுக்கு வலிமை உண்டு, அதில் இதுவும் ஒரு வகை.

பெருந்திரளான மக்கள் பங்கேற்க கூடிய வாய்ப்பிருந்தால் எந்தப் போராட்டமும் வெல்லும். அரசிடம் நாம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. எந்த திட்டத்தையும் இயற்ற அரசுதான் நம்மிடம் அனுமதி கேட்க வேண்டும்.

அனுமதி வாங்காமல் போராடக் கூடாது. அமைதி கிடைக்காமல் போராடக் கூடாது, அனுமதியை மீறினால் கைது செய்யப்படுவோம் என்ற அச்ச உணர்வில் அரசியல் செய்ய விரும்புவதை விட அவரவர் வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.

போராடும் விடயத்தில் நியாயம் இருக்கும்போது அந்த போராட்டத்திற்காக உயிரையும் கொடுப்பவர்கள் உன்னத வீரர்கள். இங்கே அனைவரையும் உன்னத வீரர்களாக கேட்கவில்லை. குறைந்தபட்சம் வீரர்களாகவாவது இருக்க முயற்சி செய்யுங்கள்.

மேலும் இந்த அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம் தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியவுடன் வெற்றிவிழா கொண்டாட போய்விடவில்லை. அவர்கள் பின்விளைவுகளில் தெளிவாக இருக்கிறார்கள். இது நடுவண் அரசு முடிவெடுக்க வேண்டிய விடயம், அதனால் நடுவண் அரசினை நோக்கி போராடவும் தயாரிப்பு வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் நம்மில் பலரோ இலங்கை மீது பொருளாதாரத் தடை, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானங்கள் இயற்றியப் பின்னர் ஏதோ ஈழமக்களுக்கு வாழ்வு கிடைத்துவிட்டது போலவும், முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுவிட்டது போலவும், வெற்றிவிழாவும் நன்றி அறிவிப்பு கூட்டங்களும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இது கால் பிடிக்கும் செயலே அன்றி வேறு இல்லை என்பது தெளிவு.

மூவருக்கு தூக்குத்தண்டனை என்று அறிவித்த போது எண்ணற்ற கல்லூரி மாணவர்கள் தொடர்வண்டியை மறித்து போராட்டம் நடத்தியதை நான் இதுகாறும் குறிப்பிட மறந்துவிட்டேன். இன்னும் மாணவர்களிடம் வீரம் நிறைந்துதான் இருக்கிறது. இந்த சதிகார நடுவண், மாநில அரசுகள் மக்கள் விரோத போக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில் இந்த போராட்ட உணர்வும் பறந்துபட்ட மக்கள் நடுவில் பரவத்தான் செய்யும்.

இன்றைய தமிழ்நாடு முழுவதும் ஒரு போராட்ட சூழல் பரவலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. பல்வேறு சூழல், பல்வேறு பிரச்சனைகள் ஆனால் போராடும் மக்களிடம் இளைஞர்களிடம் ஒரு ஓர்மை, தெளிவு, புலப்படுகிறது. போராடும் மக்களிடையேதான் நெஞ்சுரம், துணிவு, ஆற்றல் போன்ற பல தகுதிகள் வெளிப்படுகிறது. மூன்று உயிரை காக்கத் தன்னையே தியாகம் செய்த புரட்சிப்பெண் செங்கொடி, தன் உயிரை மதியாமல் தொடர்வண்டி மறியல் நடத்திய மாணவர்கள், சாதிவெறியின் பொருட்டு தன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னரும் கலையாமல் போராடிய தாழ்த்தப்பட்ட மக்கள், உயிருக்கும் உலகுக்கும் ஆபத்து விளைவிக்கும் அணுமின் நிலையத்தை எதிர்ப்பதில் உறுதியுடன் நிற்கும் பல்லாயிரக் கணக்கான மக்கள், அரசு ஆதரவு இல்லாவிட்டாலும் அரசு கடும் ஒடுக்குமுறையை ஏவினாலும், அரசு கடும் சூழ்ச்சிகளை மேற்கொண்டாலும் இந்த மக்கள் வெளிப்படுத்தும் உறுதி, தமிழ்ச்சமூகம் தன் போராட்ட குணத்தை ஆற்றலை வெளிப்படுத்தும், பரவலாக வெளிப்படுத்தும் காலமாக இது விளங்கி வருகிறது.

இத்தகைய மக்களை கொண்டு நமக்கு இடர் விளைவிக்க எத்தனிக்கும், விளைவித்து கொண்டிருக்கும் அனைத்து எதிரிகளையும் எதிர்த்து போராட தயாராவோம். மக்கள் பலமே முடிவினை தீர்மானிக்கும் பலம், மக்கள் பலத்தினை பெருக்கி கொள்வதோடு இன்று மக்களிடையே வெளிப்படும் சிறந்த குணங்களான கொள்கை உறுதி, கொள்கை தெளிவு, விடாமுயற்சி, பணியாதிருத்தல், துரோகத்திற்கு அஞ்சாமை, போராட்டத்துணிவு போன்ற குணங்களை தலைவர்களும் உள்வாங்க வேண்டும். அப்போது தான் அந்த போராட்டத்திற்கான தலைமையும் சரியானதாக இருக்க முடியும்.

மக்கள் நீங்கிய தலைவனும், தலைவன் இல்லாத மக்களும் திசை தெரியாத கப்பலை போன்றவர்களே. அதனால் இன்று கூட்டுறவின் பலத்தினை உணர்ந்து அதனை செம்மைப்படுத்தி போராட்டத்தின் மூலம் மட்டுமே மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற முற்று முழுதான தெளிவோடு போராட அனைவரும் முன்வர வேண்டும் என்பதே நம் லட்சியத்தினை அடைவதற்கான வழி. போராட்ட வழியின் மூலம் மட்டுமே உரிமைகளை பெற முடியும். உரிமைகளை பெறுவதன் மூலம் மட்டுமே நாம் சுதந்திரமாக வாழ முடியும். சுதந்திரமாக இருந்தால் மட்டுமே சமூகம் வளர்ச்சியுறும். சமூகம் வளர்ச்சியுற இப்போது உருவாகி வரும் இந்த போராட்ட களத்தில் அனைவருக்கும் பொறுப்புண்டு. அதனை அனைவரும் உணர்ந்தால் நம் லட்சியங்களை அடையும் நாட்கள் அதிக தொலைவில் இல்லை என்பது தெளிவு. தமிழ்நாட்டில் நிலவும் இந்த போராட்ட கனல் தொடர்ந்து பரவச் செய்வோம், அதில் நாமும் ஓர் அங்கமாவோம், விடாப்பிடியாக தொடர்ந்து போராடுவோம், வெல்வோம்.

Sunday, November 13, 2011

என் உயிரை வலிக்கச்செய்கின்றன

எவ்வளவு தூரம்தான் விலகிச்சென்றாலும் மீண்டும்
மீண்டும் வந்து கால்களைத்தழுவிச்செல்லும் அலையைப்போல
அவ்வப்போது என் மரத்துப்போன இதயத்தை
வருடிச்செல்லும் உன்னைப்பற்றிய நினைவுகள்

இன்னமும் எனக்குவரும் கடிதங்களிலெல்லாம் உனது
பெயரை எதிர்பார்த்திருக்கும் என் கண்களில்
காத்திருக்கின்றது நமது காதல்

இன்றும் புதிதாக வெளிவரும் ஒவ்வொரு காதல் கவிதைப்
புத்தகங்களின் தலைப்புக்களையும் படிக்கும்போது
அவ்வப்போது தலையைக்காட்டி அமர்ந்து
கொள்கிறது நமது காதல்

ஒவ்வொரு மழைக்கால இரவுகளிலும்
தனிமையில் கழிக்கப்படும் பொழுதுகளிலும்
எமது காதல் கதையின் சிதறிப்போடப்பட்ட அத்தியாயங்கள்
என் உயிரை வலிக்கச்செய்கின்றன

என்னுடைய உடைமைகளெல்லாம் மறைந்துபோன
எம் காதலின் மறக்கமுடியாத சில பாகங்களை
அவ்வப்போது உரசிச்செல்ல

என் பழைய நாட்குறிப்புகளில் கவிதைகளாக
புதைந்து கிடக்கும், நீயும் நானும் சேர்ந்து
செதுக்கிய காதல் உணர்வுகள் என்னை
உணர்வுகளுக்குள் மூழ்கடித்து கொன்றுவிட முயல்கின்றது.

எவ்வளவு தூரம்தான் சென்றுவிட்டாலும்
திரும்பிப்பார்க்கின்றபோது கண்ணில் வீழ்ந்த தூசிபோல
உறுத்திக்கொண்டிருக்கும் இந்த சலனங்கள்
மறக்கமுடியாதவை

காத்திருக்கிறேன் காதலுடன்
நமக்காக காத்திருக்கும், கடற்கரை மரத்தடியில்
அமைந்திருக்கும் சீமெந்துக்கதிரை,
சூரியனால் அடைமுடியாத அந்த இருள் சூழ்ந்த நடைபாதை
பூக்களுடன் காத்திருக்கும் என் வீட்டுப்பூஞ்செடி
என் கண்களில் நிறைந்திருக்கும் கண்ணீர்த்துளிகள்..

Pyjamas - is a common daily attire.

1. Chinese ladies painted their nails even 5000 years ago.

2. Little Hollywood secret: wear yellow visually enhances the owner of the shooting, Green - decreases.

3. Do Indian women of the tribe of Panama San Blas big nose is a sign of beauty. They draw the bow longitudinal black stripes that visually lengthen the nose. Men have a big nose is a sign of leadership. More Interesting and informative facts after the break...

4. In India, men can wear pajamas to the output. Pyjamas - is a common daily attire.

5. In the UK, 18th-century secular dandies wore tight trousers so that the dressing pants stretched on special pegs, and a gentleman jump up in them.

6. In 1500 BC shaved head was considered a model of feminine beauty. Egyptian women removed every hair with gold tweezers and rubbing your scalp to shine.

7. Chow Chow - the only dog that has dark-blue tongue. As the Chinese say, she licked the sky. In addition she has such an unusual color language only Shar-Pei and the polar bear. Languages other dogs are pink.

8. Kangaroo rat never drinks water. Like its relatives, marsupial mice, they have a water source within yourself, highlighting the liquid from the food and inhaled air.

9. According to research conducted at the Institute for the Study of animals in Washington, like humans, dogs and cats can be right-handed and left-handed. The triangular base of the soft part of a horse's hoof called the frog.

10. In long days on the planet were carried dragonflies the size of a hawk.

11. Eggs, which is a hummingbird-sized pills Tik-Tak, and all of the bits of the slot can fit into a walnut shell.

12. The biggest gold fish reach a length of 38 centimeters and are found they are in Hong Kong. The name of the fish - Bruce.

13. The largest American alligator in length was more than 6 meters - it can be freely along the length of 3 people fit!

14. The largest invertebrate - coconut crab, whose diameter is "paws on" can reach a meter, and his claws he can crush coconuts.

15. Arctic jellyfish tentacles giant can reach up to 36 meters in length.

16. In Ethiopia's Surma tribe is custom in which a girl for some time before the wedding, remove the lower teeth, pierced lip and insert it into the clay disk. From time to time to replace the disk similar, but larger diameter. And then the wedding? And though the larger the diameter of the disc - the more the dowry the bride, because it symbolizes a level of wealth drive the bride's family.

17. The concept of the wedding night in Albania is very conditional. There is a tradition in which the three days and three nights in the newly formed woman must resist the attacks on her husband's execution of family duty. This is done in order to confuse evil spirits.

18. It's simple on the island Trombrian that close to New Guinea. Want to get married? Eat with a future spouse of one plate in front of other members of the tribe. Ate? Now you're a married man!

19. In the 13th century established the standards for pasta Pope.

20. Romans as a seasoning often used Garuma - special paste made of slightly rotten fish.

Body temperature is an important indicator of our health

Body temperature is an important indicator of our health. What is normal body temperature? What part of the body gives the most accurate readings? Find out the answers to these and other questions regarding body temperature.
1.Your body is great thermoregulator
Our body has an amazing ability to keep its temperature within safe range to keep you healthy, no matter what conditions you are exposed to outside the body. When you feel hot, you start sweating, which cools you body down. When you feel cold, you start shivering, which is involuntary muscle contractions that generate heat. Goosebumps that appear on skin when you are feeling cold are actually tiny muscles that raise body hairs, which increase their thickness.

2. Normal body temperature
It is commonly accepted that normal human body temperature is 98.6 degrees F or 37 degrees C. However, there is also a number of variations to normal body temperature that depend on many factors, such as the time of the day, outside temperature, age of the person and others. Temperature may vary by 1 degrees F (0.6 degrees C), from 97 degrees F (36.1 degrees C) to 99 degrees F (37.2 degrees C), which is considered within normal range.

3. The body temperature varies throughout the day
Body temperature undergoes minor changes throughout the day. It is the lowest in the morning, between 4 and 6 a.m. and highest in the evening, around 6 to 8 p.m. Temperature also changes during sleep. Usually it starts to drop when we fall asleep, ensuring sound sleep and needed rest.

4. Rectal temperature - most accurate
Body temperature is measured with the help of different types of thermometers in various parts of the body. Temperature taken in your mouth may be influenced by many factors and is usually lower, while rectal and ear measurements are slightly higher than oral temperature readings. Temperature taken in your armpit may me the least accurate since it may not directly indicate core temperature. The most accurate way to measure body temperature is to take temperature rectally.

5. Fever is good for you
Many of us are scared of fever and try to reduce fever with medications. However, fever is not an illness, but the body's defense mechanism that fights infections and is basically harmless. Fever slows the growth of pathogenic bacteria and activates white blood cells to fight infection. Fever may range between 100 degrees to 104 degrees F and higher (37.8 degrees - 40 degrees C), but not all of them need to be treated with medications. The general rule of thumb is that fever medicines are necessary when it causes you or your child discomfort or there are other dangerous signs such as trouble breathing or pain.

Friday, October 28, 2011

அழுகிறாள் அம்மா மழை போல!


வாசலில் வந்த தூரல்
என்னை வா வா என்றது...

நீட்டிய கையில்
பொட்டென ஒரு துளி
படியிறங்கிய போது
கழுத்தில் கையில்...
சிலிர்த்துச் சிரித்தேன் மகிழ்வாய்...

தலையுயர்த்தி வாய் திறக்க
தாகமற்ற தொண்டையில்
துளிகளின் பரவசம்

வலுத்த மழையில்
நனைந்தன துணிகள்

கும்மாளமாய்க்
குதித்து ஆடினேன்
கப்பல் விடக் காகிதம் தேடினேன்

அடுப்படியிலிருந்து
அவசரமாய் வந்து
உலர்த்திய துணிகளை
உருவிய அம்மா

ஓட்டமாய் வந்து
போட்டாள் முதுகில் பலமாக

கப்பல் விடும் ஆசை கனவாகிட
விசும்பலில் வலி கரைத்தேன்

தலை துவட்டித் துணி மாற்றியபடி
விரல் பதிந்த என் முதுகு தடவி
அழுகிறாள் அம்மா மழை போல!

Tuesday, October 25, 2011

கைதட்டச் சொல்

இன்றோ... நாளையோ...
இப்போதோ... பிறகோ...
விழுந்து விடுவேன்

உயிரின் கடைசி இழையில்
ஊசலாடி நிற்கிறேன்

உரசும் காற்று
உணர்ச்சிவசப்பட்டாலோ

முத்துமழைத் துளியொன்று
மூக்கில் விழுந்தாலோ

என் கிளையில் ஒரு பறவை
சிவ்வென்றமர்ந்து சிறகடிக்கும் அதிர்ச்சியிலோ

நான் விழுந்துவிடுவேன்

விடை கொடு கிளையே
விடை கொடு

இருந்தவரை என்மீது
எத்தனை குற்றச்சாட்டு

காற்றின்
தப்புத் தப்பான பாடலுக்கும்
தலையாட்டுவேனாம்

எச்சமிடவரும் பட்சிகளுக்கும்
பச்சைக்கொடி காட்டுவேனாம்

பக்கத்து இலைகளோடு
ஒவ்வொரு பொழுதும் உரசல்தானாம்

இதோ
சாவை முன்னிட்டு என்னை
மன்னித்துவிட்டன சக இலைகள்

அப்படியாயின்
வாழ்வு குறைகுடமா?
மரணமே பூரணமா?

நிறைந்த வாழ்வு என் வாழ்வு

நான் குளித்த மிச்சத்தில்
பூமி குளித்தது

சூரியக்கீற்று
என்னைத் தொட்ட பிறகுதான்
மண்ணைத் தொட்டது

பகலில் நான் விட்ட மூச்சில்
பாழ்பட்ட காற்று
பத்தினியானது

இந்த மரத்தில் நான்
எடுத்தது பகுதி
கொடுத்தது மிகுதி

என் வாழ்விலும்
சாயம் போகாத சம்பவங்கள்
இரண்டுண்டு

அடையாளம் தெரியாத புயலொன்று
தளிர்களையும் தலைவாங்கிப் போனதே
அந்த ராட்சச ராத்திரியும் -
பூவில் வண்டு
கலந்த காட்சி கண்டு
பக்கத்து இலை கொண்டு
முகம் மூடிக்கொண்டேனே
அந்த மன்மதப் பகலும்.

ஒருநாள்
ஒண்டவந்த ஒரு பறவை
கிண்டியது என்னை

"மலராய் ஜனிக்காமல்
கனியாய்ப் பிறக்காமல்
இவ்வடிவு கொண்டதெண்ணி
என்றேனும் அழுதாயோ
ஏழை இலையே!"

காற்றின் துணையோடு
கலகலவென்று சிரித்தேன்

"நல்லவேளை
நான் மலரில்லை

தேனீக்கள் என்கற்பைத்
திருடுகின்ற தொல்லையில்லை

நல்ல வேளை
நான் கனியில்லை

கிளிக்கூட்டம் என் தேகம்
கிழிக்கின்ற துன்பமில்லை

இயல்பே இன்பம்
ஏக்கம் நரகம்"

அதோ அதோ
வாயு வடிவில்
வருகுதென் மரணம்

இதோ இதோ
பூமியை நோக்கி
விழுகுதென் சடலம்

வழிவிடு வழிவிடு
வண்ணத்துப் பூச்சியே

விலகிடு விலகிடு
விட்டில் கூட்டமே

நன்றி மரணமே
நன்றி

வாழ்வுதராத வரமொன்றை
வழங்க வந்தாய் எனக்கு

பிறந்த நாள் முதல்
பிரிந்திருந்த தாய்மண்ணை
முதன்முதல் முதன்முதல்
முத்தமிடப் போகிறேன்

வந்துவிட்டேன் தாயே
வந்துவிட்டேன்

தழுவிக்கொள் என்னைத்
தழுவிக்கொள்

ஆகா
சுகம்
அத்வைதம்

வருந்தாதே விருட்சமே

இது முடிவில்லை
இன்னொரு தொடக்கம்

வாழ்வு ஒரு சக்கரம்
மரணம் அதன் ஆரம்
சக்கரம் சுற்றும்

கிளைக்கு மறுபடியும்
வேறு வடிவில் உன்
வேர்வழி வருவேன்

எங்கே
எனக்காக ஒருமுறை
எல்லா இலைகளையும்
கைதட்டச் சொல்

Monday, September 12, 2011

சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!

1. கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல்,உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.


2. தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.

i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.

iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால்2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.

iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ,எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.

3. அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?


4. உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.


5. பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம்,அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும்,கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றன.கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை.


6. அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார்.ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.


7. 2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார்1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.


8. அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம்,நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம்134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய்,தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.


9. 1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய,ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.


10. நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90%மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.

நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.

கருப்பான, அழுக்கான தமிழர்கள் என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் நம்மைக் காப்பாற்ற முன்வருவார்கள் என எதிப்பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.

இறுதியாக ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.

Ø மக்களுக்காக மின்சாரமா அல்லது மின்சாரத்திற்காக மக்களா?

Ø ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா?

Monday, August 22, 2011

எந்த கல்வி முறையில் படிப்பது சிறந்தது

பிளஸ் 2 முடித்த உடன் பட்டப்படிப்பு படிப்பது என்று முடிவெடுக்கும் மாணவர்கள் உடனடியாக ஒரு கல்லூரியில் சேர்ந்து விடுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பகல் நேர வகுப்புகளிலும், சிலர் மாலை நேர வகுப்புகளிலும் சேர்ந்து விடுகின்றனர். சில மாணவர்களுக்கு இதிலேயே குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை படிப்பதை விட, தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படிக்கலாமா என்று எண்ணுகின்றனர். தொலைதூரக் கல்வியில் படித்துக் கொண்டே டிப்ளமோ படிப்பு, சான்றிதழ் படிப்பு படிக்கலாம் என்றும் விரும்புகின்றனர். இப்படி பட்டப்படிப்பிலேயே இத்தனை முறைகள் இருக்கும் போது, எந்த முறையில் படிப்பது என்று மாணவர்கள் இடையே குழப்பம் வருவது சகஜம்தானே?

பொதுவாக, முதுகலை பட்டம் பயில நிச்சயமாக மூன்று அல்லது நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அதை கல்லூரியில் சேர்ந்தோ அல்லது தொலைதூரக் கல்வி மூலமாகவே பயின்று இருக்கலாம். அதே சமயம், பட்டப்படிப்புடன் உங்களது டிப்ளமோ படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும், உடனடியாக வேலை கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். தற்போது வளர்ந்து வரும் நவீன உலகில், வேலைக்கு ஆட்களை தேடுபவர்கள் நீங்கள் சான்றிதழ் கோர்ஸ் படித்திருக்கிறீர்களா, டிப்ளமோ முடித்திருக்கிறீர்களா அல்லது பட்டப்படிப்பை கல்லூரியில் படித்தீர்களா என்றெல்லாம் பார்ப்பதே இல்லை. அவர்கள் கொடுக்கும் வேலையை செய்யும் திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதை மட்டுமே. அதேப்போலத்தான், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும், உங்களது பட்டப்படிப்பு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதேத் தவிர, அதை நீங்கள் எந்த முறையில் படித்தீர்கள் என்பது அல்ல.

பலரும், தாங்கள் படித்த படிப்புக்கு சம்பந்தமே இல்லாத பணிகளை செய்வதும், சிலர் தாங்கள் பெற்ற பணி அனுபவத்திற்கேற்ற படிப்பினை படிப்பதும் படிப்பிற்கும், திறனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையே நிரூபிக்கிறது. மேலும், நல்ல திறமையான நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ஒரு நிர்வாகம் நடத்தும் நேர்முகத் தேர்வில், கல்விச் சான்றிதழுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. நேர்கானலில் கேட்கப்படும் கேள்விகள், எழுத்துத் தேர்வு, பணி அனுபவம் போன்றவைதான் முக்கிய இடம் வகிக்கிறது. அதே சமயம், பல நிறுவனங்கள் தாங்கள் தேர்வு செய்யும் ஆட்கள் பட்டப்படிப்பை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று விதிமுறையை வைத்துள்ளனர்.

இந்த விதிமுறையை பல நிறுவனங்கள் கவனமாக கையாள்கின்றன என்பதால் பணி அனுபவம் பெற்ற பிறகும், அதற்கேற்ற பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் கற்கும் பல ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் வேலை தேடும் போது இந்த பட்டப்படிப்பானது ஒரு பக்கத்துணையாக மட்டுமே இருக்கும். அவரது திறமைதான் முதன்மையானதாக இருக்கும் என்பதில் நினைவில் கொள்ளவும். ஆனால், கல்லூரியில் படித்த பட்டப்படிப்பிற்கும், தொலைதூரக் கல்விக்கும் எந்த வேறுபாடும் இல்லையா என்று கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் ஏக்கத்தோடு கேட்பது புரிகிறது.. நிச்சயம் உண்டு. ஒரு பணிக்கு இரு வேறு விதமான நபர்கள் விண்ணப்பித்து, இருவருமே திறமையுடன் காணப்பட்டால், அதில் கல்லூரியில் படித்தவரைத்தான் நிர்வாகம் முதலில் பரிந்துரைக்கும். அதேப்போலத்தான் மற்ற இடங்களிலும் கூட கல்லூரி பட்டப்படிப்பிற்கு நிச்சயம் முன்னுரிமை வழங்கப்படும். நாம் செய்து கொண்டிருக்கும் பணியில் முன்னேற்றம் அடையவும், மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் டிப்ளமோ படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும் நிச்சயம் உதவும். ஒரே இடத்தில் தேங்கி நிற்காமல், முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்த படிப்பிற்கும், அதற்குரிய முக்கியத்துவம் கிடைத்தே தீரும்.