Friday, April 15, 2011

பெரியாரையும் பாரதிதாசனையும் படித்துப் பாருங்கள்...


பல நூறு மார்கத்திலும்
மதத்திலும் போற்றப்படும்
இவ்வண்ட சராசரத்து
சக்தியுள்ள பெருந் தெய்வங்களே...
அகிலமாளும் ஆண்டவர்களே...
உங்களாலேயே படைக்கப்பட்ட
பெரியாரையும் பாரதிதாசனையும்
படித்துப் பாருங்கள்.
நீங்கள் எதை மறந்தீர்களோ
அதை அவர்கள் நன்றாகவே
நினைவு படுத்துவார்கள்.
நீங்கள் எதை மறுத்தீர்களோ
அதை அவர்கள் நன்றாகவே
எடுத்தியம்புவார்கள்.

குறைந்த பட்ச கோரிக்கையாக
நீங்கள் கொடுக்க மறந்த -
ஆணுக்கும் பெண்ணுக்கும்
பேதமற்ற சம உரிமை
கொடுத்தருள்வீராக.
ஏனெனில்
நீங்கள் படைத்த காலந்தொட்டு,
வாழ்வெனும் சக்கரம்
இவ்விரு சக்திகளால்தான்
ஓடிக்கொண்டேயிருக்கிறது.

1 comment:

Testing said...

"நீங்கள் கொடுக்க மறந்த -ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமற்ற சம உரிமை
கொடுத்தருள்வீராக"

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
இதைப் பற்றி பேசுபவவர்களே
இதை செய்வது கிடையாது.