எழுத்தறிவு என்பது பள்ளிக் கல்வியின் ஆதாரமாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் எழுத்தறிவு என்பது முதியோர் கல்வியுடன் மட்டுமே பேசப்படும் பொருளாகிவிட் டது. உலகில் உள்ள எழுத்தறிவற்ற மக்கட் தொகையில் பெரும் பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன் இந்தியாவில் தொடர்ந்து எழுத்தறிவற்றவர்களின் எண்ணிக்கை நீடிக்கிறது?இதற்குக் காரணம் இந்தியாவில் ஆரம்பக் கல்வி கற்ற பின்னரும் குழந்தைகளின் எழுத்தறிவின்மை தொடருவதுதான். குழந்தைகள் எட்டாண்டு கால ஆரம்பக் கல்வியை முடிக்காமலேயே வெளிவருவதாலும், ஆரம்பக் கல்வியை விட்டு வெளி வந்த பின்னர் படிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவதாலும் மீண்டும் எழுத்தறிவின்மை நிலைக்கே சென்றுவிடுகின்றனர். எழுத்தறிவு பெற்ற குழந்தைகளிடமும் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தையும், ஆர்வத்தையும் பள்ளிக்கூடம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்காத குறையுள்ளது. படிக்கும் பழக்கம் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளவும், விழிப்புணர்வுடன் செயல்படவும் உதவிடும் என்பதை உணர்பவர்கள் மிகக் குறைவு.
பள்ளிக் குழந்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வில் அவர்களின் படிக்கும் திறன் மிகவும் குன்றியிருப்பதும், அவர்களுக்கு அதற்கான பயிற்சியே கொடுக்கப்படுவதில்லை என்பதும் வெளிவந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதைச் சரி செய்வதற்கு பள்ளிக் கூட அளவில் தக்க நடவடிக்கை எடுக்க வில்லையெனில், புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள கல்வி பெறும் உரிமைச் சட்டமே செயலற்றுப் போய்விடும். கற்றுக் கொடுக்கும் முறையில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும்.
பழைய கற்பிக்கும் முறையிலிருந்து ஆசிரியர்கள் விடுபட வேண்டும். அன்றைய சமூக, கலாச்சார சூழலுக்குப் பொருந்திய கற்பித்தல் முறை இன்றைய காலச் சூழலுக்கு நிச்சயம் பொருந்தாது. அன்று மிகச் சிறுபான்மையராக இருந்த மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது. இதனால் ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு எழுத்தின் வடிவத்தையும், அதன் ஒலி நயத்தையும் அவசரமின்றி வருடக் கணக்கில் சொல்லிக் கொடுத்தார். கடுமையான பயிற்சியுடன் தேவைப்படும் போது தண்டனையும் கொடுக் கப்பட்டது. அன்றைய கல்வி முறையைப் பாராட்டிடும் சிலர், அன்று குழந்தைகள் பற்றி இருந்த கண்ணோட்டம் வேறு, இன்றிருக்கும் கண்ணோட்டம் வேறு என்பதை உணர்வ தில்லை. மேலும் அன்று கல்வி பெரும்பான்மையோருக்கு மறுக்கப்பட்ட சூழலுக்கும், இன்று கல்வி பரவலாக்கப்பட்டுள்ள சூழலுக்கும் உள்ள மாற்றத்தையும் நாம் உணர வேண்டும். அன்றைய கல்வி முறை குழந்தைகளின் இயல்பான சுபாவத்தையும், தனித்துவமான திறமைகளையும் மதிக்கத் தவறியது.
புதிய கல்வி முறை
மொழிகளைப் பயிலுவதற்கு குழந்தைக ளுக்கு இன்று புதிய யுக்திகளும் வசதிகளும் உள்ளன. குழந்தைகளின் மனோபாவத்திலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகைப் புரிந்து கொள்ள வேண்டும், ஆய்ந்தறிய வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளிடம் இயல் பாகவே உள்ளது என்ற அடிப்படையில்தான் இன்றையக் கல்வி முறை அமைந்துள்ளது. இளம் பருவத்திலேயே அவர்களுக்கு புத்த கங்களுடனான உறவை உயிரோட்டமுள்ள தாக, அர்த்தமுள்ளதாக உருவாக்கிட வேண்டும். இல்லையேல் அவர்களின் எழுத்தறிவு பயனற்றதாகப் போய்விடும். அவர்களை அறிவு மற்றும் உணர்ச்சிப் பூர்வமாக வளர்த் தெடுக்க முடியாது.
பள்ளிகளில் பாடங்களை எந்திரகதியாக உரத்த குரலில் படிக்கும் குழந்தைகள், அவற்றின் அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்வதில்லை. இதனால் அவர்களுக்கு அடுத்தடுத்து புத்தகங்களைத் தேடிப் படிக்கும் ஆர்வம் வருவதில்லை. குழந்தைகளால் பாடங்களை அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் அப்படியே மனனம் செய்து ஒப்புவிக்க முடிகிறது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முன்னாள் உறுப்பினர் சின்ன சாக்கோ ஒரு முறை ஒரு வகுப்பறையில் மாணவனை பாடத்தை வாசிக்கச் சொன்னதும், அவன் உடனே எழுந்து நின்று “புத்தகத் துடன் படிக்கவா? புத்தகம் இல்லாமலேயே படிக்கவா?” என்று கேட்டது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது. கற்பித்தல் முறை களில் எந்த மாற்றமும் இல்லாமல் நம் பள்ளிகள் மியூசியங்கள் போல் இருப்பதை சின்ன சாக்கோ சுட்டிக் காட்டுகிறார். பழமையைப் பாதுகாப்பதில் நம் பள்ளிகள் கவனமாக இருக்கின்றன என்கிறார். இதனால் நாம் மிகப் பெரிய இழப்பிற்கு உள்ளாகிறோம்.
ஒரு ஜனநாயக நாட்டில் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ள பொது மக்களின் பங்கு மிக முக்கியமானதாகும். அன்றாட சமூக, அரசியல் பிரச்சனைகள் சம்பந்தமாக பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை வெளியிடுவது என்பது மிகவும் தேவையான ஒன்றாகும். விடு தலின்றி எல்லோரும் கருத்து தெரிவிப்பது என்பது கூட்டு சிந்தனைக்கும், முடிவுக்கும் இட்டுச் செல்லும். இன்றைய பரந்த உலகில் எழுத்தறிவு என்பது முக்கியமான ஆயுதமா கும். படிப்பறிவு வெறும் திறன் மட்டுமல்ல, அதுவொரு கலாச்சார அடையாளமும் ஆகும். புத்தகங்களைப் படிப்பதன் மூலம் நம்மைச் சுற்றி நடப்பவைகள் பற்றிய தெளிவானபார் வையைப் பெற முடியும். எனவே புத்தகங்களுடனான பரிச்சயத்தை இளம் பருவத்திலேயே வளர்ப்பது ஜனநாயகம் வெற்றியுடன் செயல் படுவதற்கு வழி வகுக்கும். படிப்பிற்கு இத்தகு முக்கியத்துவம் இருப்பதால் இப்பழக்கத்தை இளம் பருவத்தில் ஒரு திறனாகக் கற்றுக் கொடுக்க வேண்டும்.படிக்கும் மனோபாவத்தை சிறு வயதில் கற்றுக் கொடுப்போமேயானால் அது வாழ்நாள் முழுவதும் பயன்படும் திறனாக அமையும். ஜனநாயகக் கடமைகளை ஆற்றிடவும் உதவிடும். இதை மனதிற் கொண்டு கற்பித்தல் முறைகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். வெறுமனே புத்தகங்களை எழுத்துக் கூட்டி வாசிப்பதைத் தாண்டி, வார்த்தைக ளின் அர்த்தத்தை புரிந்து படிக்கும் அளவிற்கு குழந்தைகளின் திறனை வளர்த்தெடுக்க வேண்டும். இது வெற்றி பெற, தரமான புத்தகங்களும், குழந்தை இலக்கியங்களும் உருவாக்கப்பட வேண்டும். புத்தகங்கள் குழந்தை கள் நேசிக்கின்றவைகளாக இருக்க வேண் டும். குழந்தைகளின் உள்ளார்ந்த ஆர்வத் தைத் தூண்டும் விதமாகவும், அவர்களை சமூகத்துடன் இணைக்கும் படியாகவும் அமைய வேண்டும். புத்தகங்கள் சரியான சமூகப் பார்வையினைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் வாழும் சூழலில் உள்ள சமூக, கலாச்சார பன்முகத் தன்மைகளைக் கொண்டாடும் விதமாக இருக்க வேண்டும். குழந்தைகளை அன்புடன் அரவணைத்துக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் வேண்டும். ஆசிரி யர்கள் படிக்கும் பழக்கத்தை இயல்பாகவே உடையவர்களாக இருக்க வேண்டும். படிக்கும் பழக்கம் குழந்தைகளின் ஆற்றலையும் அறிவையும் வளர்க்கும் என்பதை உணர்த்தி, அவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்களாகத் திகழ வேண்டும்.
குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிடும் வண்ணம் நாற்பது புத்தகங்களை வெளியிட்டுள்ளது. திட்டத்தின் அடிப்படையில் குழந்தைக் கல்வித்துறை வெளிக்கொண்டு வந்துள்ள இப்புத்தகங்கள் குழந்தைகளின் ஆர்வத்தையும் தேவையையும் நிறைவேற்றிடும் வண்ணம் அமைந்துள்ளன. குழந்தைகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இச்சிறு புத்தகங்கள் புதுமையுடனும், நேர்த்தியுடனும், நிறைய படங்களுடனும் உள்ளன. “பார்க்கா” என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தக வரிசையில் காட்டப்படும் குழந்தைகள் நம் வீடுகளில் காணப்படும் குழந்தைகளைப் போலவே இயல்பாக இருப்பதால் இப்புத்தகங்களை குழந்தைகள் விரும்பி ஏற்றுக் கொள்வார்கள். அடிப்படையான மாற்றங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ள இப்புத்தகங்கள் இதற்கு முந்தைய முயற்சிகளை கேள்விக்குள்ளாக்கி, புறந்தள்ளக்கூடிய வகையில் உள்ளன. முதன் முறையாக இந்தியாவில் குழந்தைக ளுக்கான இலக்கியம் அல்லது புத்தக வரிசை உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். எல்லா மாநில அரசுகளையும் இது போன்ற புத்தக வரிசைகளை உருவாக்கச் சொல்லியும், ஆசிரியர்களை இத்தகு புது முயற்சிக்குப் பழக்கிடவும் கேட்டுக் கொண்டது. ஆனால் அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தி என்னவென்றால் இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டிருந்த சூஊநுசுகூயின் குழந்தைக் கல்விப் பிரிவை மூடுவதற்கான முடிவெடுக் கப்பட்டுள்ளது. இம்முடிவை மாற்றி,குழந்தைக் கல்விப் பிரிவு மீண்டும் செயல்படுவதற்கான ஆணை யினை மத்திய மனித வளத் துறை அமைச்சகம் வெளியிட வேண்டும். மாநில அரசுகளையும், தன்னார்வக் குழுக்களையும், தனியார் புத்தக வெளியீட்டாளர்களையும் குழந்தை இலக்கியங்களை உருவாக்கி அவைகளை நேர்த்தியாகவும், நிறையப் படங்களுடன் கவர்ச்சிகரமாகவும் வெளி யிட ஊக்குவிக்க வேண்டும்.
சமீபத்தில் தேசிய புத்தக டிரஸ்ட் வெளியிட்டுள்ள புத்தகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையைச் சித்தரிக்கும் படம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கின்றது. பெண்களின் பிரச்சனைகளைச் சித்தரிக்கும் போது நாம் இன்றும் தொடர்ந்து தவறிழைக் கின்ற நிலையிலேயே இருக்கின்றோம் என் பது வருத்தத்திற்குரியது. ஏராளமான தன் னார்வக் குழுக்கள் குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிடுகிறார்கள். இவைகள் சரியான கருத்தோட்டத்துடன் தரமான புத்தகங்களாக இருக்கின்றனவா என்பதைக் கண் காணிக்க உரிய நிறுவனமும், நிபுணர்களும் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய குறையாகும். இத்தகு தரக் குறைவான புத்தகங் களை அனைவருக்கும் கல்வி திட்டத்தின் நிதியிலிருந்து வாங்கி பள்ளிகளின் நூலகங் களை மாநில அரசுகள் நிரப்புகின்றன என்பது கவலையளிக்கின்றது. எனவே தன்னுடைய தலைமைப் பாத்திரத்தைச் சரியாக நிறைவேற்றி இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment