Thursday, July 17, 2014

நமது உடலை பற்றி தெரிந்ததும் தெரியாததும்..

* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.

* நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.

* சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.

* நாம் ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.

* நமது கண்விழியின் சராசரி எடை 28 கிராம் இருக்கும்.

* தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.

* நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனோஸ்மியா எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியா என்கிறார்கள்.

* நமது உடலில் 'உவுலா' என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறுதசையே 'உவுலா' எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான்.

* பிறக்கும் போது நமது உடலில் 300 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவது தான் இதற்கு காரணம்.

* எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. உப்புறம் எலும்புகள் மென்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.

* நமது ரத்தம் தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது. பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும், ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது.

* நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு இருக்கும்.

* சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

.* ஒவ்வொரு மனிதனின் கைரேகையைப் போலவே கால்ரேகை மற்றும் நாக்கு ரேகைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

Tuesday, July 8, 2014

காலண்டர்: சில தகவல்கள்

காலண்டர்: சில தகவல்கள்

* காலண்டர் என்பதற்கு லத்தீன் மொழியில் ‘கணக்குப் புத்தகம்’ என்று பொருள். ரோமானிய மொழியில் ‘மாதத்தின் முதல் நாள்’ என்று பொருள்.
* பழங்காலத்தில் ரோமானியர்கள் வீடுகளில் காலண்டர் மாட்டி வைப்பதில்லை. மாதப் பிறப்பன்று ஊர்ப் பணியாளர் வீதிகளில் வந்து, புது மாதப் பிறப்பை அறிவிப்பார்.
* நாம் கடைப்பிடிக்கும் தேசிய காலண்டரின் பெயர் விக்ர சகாப்தம். 22.3.1957 முதல் தேசிய நாட்குறிப்பு நடைமுறைக்கு வந்தது.
* 1582ல் பதிமூன்றாவது கிரிகோரி என்கிற பாதிரியார் கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார்.
* பாபுவா நியூ கினியா நாட்டு மக்களுக்கு காலண்டர் முறை தெரியாது. ஒவ்வொரு கிறிஸ்துமஸ் சமயமும் முட்டையிட வரும் ஆமைகளை வைத்து தங்கள் வயதைக் கணக்கிடுகின்றனர்.
* திபெத்தியர் காலண்டரில் 13 என்ற தேதி இடம் பெற்றிருக்காது. 12, 14, 14, 15 என்றே அமைந்திருக்கும்.
* பழங்காலத்தில் கிரேக்க நாட்டவர்கள் ஒரு வாரத்திற்கு பத்து நாட்களென்றும், ஒரு மாதத்திற்கு மூன்று வாரங்களென்றும் கணக்கிட்டு வந்தனர்.

’டேய்.... தம்பி..... எழுந்து வாடா......... நாம விளையாடலாம்’

    
ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது, அவள் பெயர் அனிதா. அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள் அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று. பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் "உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப் போகிறான், நீயும்அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க" என்று சொல்லியே வளர்த்தார்கள்.
  
அனிதா, அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே "டேய் தம்பி! சீக்கிரம் வெளியே வாடா நாம ஜாலியா விளையாடலாம். நான் உன்னை யாருக்கும் குடுக்க மாட்டேன், நான் மட்டுமே உன் கூட விளையாடுவேன்." என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.
    அனிதா இன்னும் முகம் பார்க்காத தன் தம்பியிடம் அவ்வளவு பாசமாக இருப்பதைபார்த்து அவள் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தார்கள். அனிதாவுக்கும் தினமும் அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதே வாடிக்கையாக இருந்தது. நாட்கள் உருண்டோடின பிரசவவலி எடுக்கவே மருத்துவமனையில்சேர்த்தார்கள். பிரசவம் நார்மலாக இருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் மிக சிக்கலாகி ஆப்ரேஷன் பண்ணிதான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.
    மருத்துவர்கள் குழந்தை மிக பலவீனமாக இருக்கிறது இன்னும் சில நாட்களே உயிரோடு இருக்கும் என்று கூறி ICU வில் அட்மிட் பண்ணினார்கள். அனிதாவையும் அவள் தந்தையையும், குழந்தையையும் அம்மாவையும் பார்க்க அனுமதிக்கவே இல்லை.பிறகு அனிதாவின் தந்தையை மட்டும் அனுமதித்தார்கள் அவர் உள்ளே சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தார். ஒரு வாரம் ஓடி விட்டது அனிதா அடம் பண்ண ஆரம்பித்தாள் நீ மட்டும் பார்த்துட்டு வந்தியே நானும் தம்பியை பார்க்கனும் என்று கத்தினாள்.
    "உன் தம்பி சாமிக்கிட்ட போகபோறான். உன்னை மருத்துவமனையில்பார்க்க அனுமதிக்கமாட்டா ங்கம்மா" என்று அவள் அப்பா சொன்னார். அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவே, சரி! "நாளைக்கு எப்படியாவது உன்னை உள்ளே கூட்டிட்டு போறேன்" என்றார்.
    மறுநாள் மருத்துவமனையில் அனிதாவையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டார் ஆனால் "குழந்தையை ICU வுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம்" என்று கூறினார்.
    பிறகு அவர்கள் கெஞ்சுவதை பார்த்து அனுமதித்தார்கள்.
    அனிதா உள்ளே ஓடிச் சென்று குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்தாள், அவள் கை பட்டதும் குழந்தை லேசாக அசைந்தது .’டேய்.... தம்பி..... எழுந்து வாடா......... நாம விளையாடலாம்’ என்றாள்.குழந்தை லேசாக மூச்சு விட ஆரம்பித்தது.’உன்னை நான் சாமிக்கிட்ட கொடுக்கமாட்டேன், நானே வச்சுக்குவேன், நீ என் கூடத்தான் இருக்கனும்’ என்றாள். இப்போது குழந்தையின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது. மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்றார்கள்.
    நாம ஒரு பொருள் மேல உன்மையான பாசம் வச்சிட்டா அந்த ஆண்டவனே நினைச்சாலும் நம்ம கிட்ட இருந்து பிரிக்க முடியாதுங்க...

A to Z

A to Z
* ஆங்கில முதல் எழுத்து A, எகிப்திய மொழியிலிருந்து பெறப்பட்டது.
* வைட்டமின் B பெருமளவில் பாலில் உண்டு.
* ஆங்கிலத்தில் C என்ற எழுத்து தன் ஒலியில் அமையாது.
* அமெரிக்காவில் D என்ற பெயரில் ஆறு உள்ளது.
* ‘காட்ஸ்பை’ என்ற ஆங்கில நாவலில் E என்ற எழுத்தே கிடையாது.
* ஃபாரன்ஹீட் வெப்பநிலை F என்று குறிக்கப்படுகிறது.
* சூரியன் G வகுப்பு நட்சத்திர வகையைச் சார்ந்தது.
* ஹைட்ரஜன் வாயுவைக் குறிக்கும் H என்ற குறியை உருவாக்கியவர் லவாய்சியர்.
* ‘I’யின் தலையில் வைக்கப்படும் புள்ளி, 14ம் நூற்றாண்டில் பிறந்தது.
* ஆங்கில மொழியில் கடைசியாக சேர்க்கப்பட்டது J.
* வைட்டமின் K குறைந்தால் ரத்தம் உறையாது.
* ரோமன் எண்ணிக்கையில் L ஐம்பதைக் குறிக்கும்.
* M வகுப்பு நட்சத்திரங்கள் சிவப்பாய் ஒளிரும்.
* ரத்தப் பிரிவுகளில் N வகை வெகு அபூர்வமானது.
* ‘O’ என்ற எழுத்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தும்.
* P என்பது வேதியியலில் பாஸ்பரஸைக் குறிக்கும்.
* எந்தவொரு ஆங்கில வார்த்தையிலும் ‘ Q ’வைப் பின்பற்றி U வரும்.
* ருவாண்டா நாட்டுக் கொடியில் R காணப்படும்.
* ஆப்ரிக்கர்களிடையே S ரத்தப்பிரிவு காணப்படுகிறது.
* புகழ்பெற்ற T டைப் கார்கள் ஃபோர்டின் 9வது மாடலாகும்.
* ஜெர்மனியர்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை U என்ற குறிச் சொல்லால் குறிப்பிடுவார்கள்.
* V என குறிக்கப்படும் வெனேடியம், கார் ஸ்டியரிங்குகள் செய்யப் பயன்படுகிறது.
* முதன்முதலில் டைப்ரைட்டர் டைப் செய்த எழுத்து W .
* பெருக்கலுக்கு X என்ற குறியை ஆதிரட் என்ற கிறிஸ்தவ மதகுரு பயன்படுத்தினார்.
* Y குரோமோசோம்களால் பெண்களுக்கு வழுக்கை விழுவதில்லை.
* Z என்பது மண்டலம் என்பதைக் குறிக்கும்.