Thursday, July 17, 2014

நமது உடலை பற்றி தெரிந்ததும் தெரியாததும்..

* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.

* நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.

* சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.

* நாம் ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.

* நமது கண்விழியின் சராசரி எடை 28 கிராம் இருக்கும்.

* தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.

* நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனோஸ்மியா எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியா என்கிறார்கள்.

* நமது உடலில் 'உவுலா' என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறுதசையே 'உவுலா' எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான்.

* பிறக்கும் போது நமது உடலில் 300 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவது தான் இதற்கு காரணம்.

* எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. உப்புறம் எலும்புகள் மென்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.

* நமது ரத்தம் தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது. பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும், ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது.

* நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு இருக்கும்.

* சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

.* ஒவ்வொரு மனிதனின் கைரேகையைப் போலவே கால்ரேகை மற்றும் நாக்கு ரேகைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

Tuesday, July 8, 2014

காலண்டர்: சில தகவல்கள்

காலண்டர்: சில தகவல்கள்

* காலண்டர் என்பதற்கு லத்தீன் மொழியில் ‘கணக்குப் புத்தகம்’ என்று பொருள். ரோமானிய மொழியில் ‘மாதத்தின் முதல் நாள்’ என்று பொருள்.
* பழங்காலத்தில் ரோமானியர்கள் வீடுகளில் காலண்டர் மாட்டி வைப்பதில்லை. மாதப் பிறப்பன்று ஊர்ப் பணியாளர் வீதிகளில் வந்து, புது மாதப் பிறப்பை அறிவிப்பார்.
* நாம் கடைப்பிடிக்கும் தேசிய காலண்டரின் பெயர் விக்ர சகாப்தம். 22.3.1957 முதல் தேசிய நாட்குறிப்பு நடைமுறைக்கு வந்தது.
* 1582ல் பதிமூன்றாவது கிரிகோரி என்கிற பாதிரியார் கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார்.
* பாபுவா நியூ கினியா நாட்டு மக்களுக்கு காலண்டர் முறை தெரியாது. ஒவ்வொரு கிறிஸ்துமஸ் சமயமும் முட்டையிட வரும் ஆமைகளை வைத்து தங்கள் வயதைக் கணக்கிடுகின்றனர்.
* திபெத்தியர் காலண்டரில் 13 என்ற தேதி இடம் பெற்றிருக்காது. 12, 14, 14, 15 என்றே அமைந்திருக்கும்.
* பழங்காலத்தில் கிரேக்க நாட்டவர்கள் ஒரு வாரத்திற்கு பத்து நாட்களென்றும், ஒரு மாதத்திற்கு மூன்று வாரங்களென்றும் கணக்கிட்டு வந்தனர்.

’டேய்.... தம்பி..... எழுந்து வாடா......... நாம விளையாடலாம்’

    
ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது, அவள் பெயர் அனிதா. அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள் அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று. பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் "உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப் போகிறான், நீயும்அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க" என்று சொல்லியே வளர்த்தார்கள்.
  
அனிதா, அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே "டேய் தம்பி! சீக்கிரம் வெளியே வாடா நாம ஜாலியா விளையாடலாம். நான் உன்னை யாருக்கும் குடுக்க மாட்டேன், நான் மட்டுமே உன் கூட விளையாடுவேன்." என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.
    அனிதா இன்னும் முகம் பார்க்காத தன் தம்பியிடம் அவ்வளவு பாசமாக இருப்பதைபார்த்து அவள் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தார்கள். அனிதாவுக்கும் தினமும் அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதே வாடிக்கையாக இருந்தது. நாட்கள் உருண்டோடின பிரசவவலி எடுக்கவே மருத்துவமனையில்சேர்த்தார்கள். பிரசவம் நார்மலாக இருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் மிக சிக்கலாகி ஆப்ரேஷன் பண்ணிதான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.
    மருத்துவர்கள் குழந்தை மிக பலவீனமாக இருக்கிறது இன்னும் சில நாட்களே உயிரோடு இருக்கும் என்று கூறி ICU வில் அட்மிட் பண்ணினார்கள். அனிதாவையும் அவள் தந்தையையும், குழந்தையையும் அம்மாவையும் பார்க்க அனுமதிக்கவே இல்லை.பிறகு அனிதாவின் தந்தையை மட்டும் அனுமதித்தார்கள் அவர் உள்ளே சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தார். ஒரு வாரம் ஓடி விட்டது அனிதா அடம் பண்ண ஆரம்பித்தாள் நீ மட்டும் பார்த்துட்டு வந்தியே நானும் தம்பியை பார்க்கனும் என்று கத்தினாள்.
    "உன் தம்பி சாமிக்கிட்ட போகபோறான். உன்னை மருத்துவமனையில்பார்க்க அனுமதிக்கமாட்டா ங்கம்மா" என்று அவள் அப்பா சொன்னார். அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவே, சரி! "நாளைக்கு எப்படியாவது உன்னை உள்ளே கூட்டிட்டு போறேன்" என்றார்.
    மறுநாள் மருத்துவமனையில் அனிதாவையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டார் ஆனால் "குழந்தையை ICU வுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம்" என்று கூறினார்.
    பிறகு அவர்கள் கெஞ்சுவதை பார்த்து அனுமதித்தார்கள்.
    அனிதா உள்ளே ஓடிச் சென்று குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்தாள், அவள் கை பட்டதும் குழந்தை லேசாக அசைந்தது .’டேய்.... தம்பி..... எழுந்து வாடா......... நாம விளையாடலாம்’ என்றாள்.குழந்தை லேசாக மூச்சு விட ஆரம்பித்தது.’உன்னை நான் சாமிக்கிட்ட கொடுக்கமாட்டேன், நானே வச்சுக்குவேன், நீ என் கூடத்தான் இருக்கனும்’ என்றாள். இப்போது குழந்தையின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது. மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்றார்கள்.
    நாம ஒரு பொருள் மேல உன்மையான பாசம் வச்சிட்டா அந்த ஆண்டவனே நினைச்சாலும் நம்ம கிட்ட இருந்து பிரிக்க முடியாதுங்க...

A to Z

A to Z
* ஆங்கில முதல் எழுத்து A, எகிப்திய மொழியிலிருந்து பெறப்பட்டது.
* வைட்டமின் B பெருமளவில் பாலில் உண்டு.
* ஆங்கிலத்தில் C என்ற எழுத்து தன் ஒலியில் அமையாது.
* அமெரிக்காவில் D என்ற பெயரில் ஆறு உள்ளது.
* ‘காட்ஸ்பை’ என்ற ஆங்கில நாவலில் E என்ற எழுத்தே கிடையாது.
* ஃபாரன்ஹீட் வெப்பநிலை F என்று குறிக்கப்படுகிறது.
* சூரியன் G வகுப்பு நட்சத்திர வகையைச் சார்ந்தது.
* ஹைட்ரஜன் வாயுவைக் குறிக்கும் H என்ற குறியை உருவாக்கியவர் லவாய்சியர்.
* ‘I’யின் தலையில் வைக்கப்படும் புள்ளி, 14ம் நூற்றாண்டில் பிறந்தது.
* ஆங்கில மொழியில் கடைசியாக சேர்க்கப்பட்டது J.
* வைட்டமின் K குறைந்தால் ரத்தம் உறையாது.
* ரோமன் எண்ணிக்கையில் L ஐம்பதைக் குறிக்கும்.
* M வகுப்பு நட்சத்திரங்கள் சிவப்பாய் ஒளிரும்.
* ரத்தப் பிரிவுகளில் N வகை வெகு அபூர்வமானது.
* ‘O’ என்ற எழுத்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தும்.
* P என்பது வேதியியலில் பாஸ்பரஸைக் குறிக்கும்.
* எந்தவொரு ஆங்கில வார்த்தையிலும் ‘ Q ’வைப் பின்பற்றி U வரும்.
* ருவாண்டா நாட்டுக் கொடியில் R காணப்படும்.
* ஆப்ரிக்கர்களிடையே S ரத்தப்பிரிவு காணப்படுகிறது.
* புகழ்பெற்ற T டைப் கார்கள் ஃபோர்டின் 9வது மாடலாகும்.
* ஜெர்மனியர்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை U என்ற குறிச் சொல்லால் குறிப்பிடுவார்கள்.
* V என குறிக்கப்படும் வெனேடியம், கார் ஸ்டியரிங்குகள் செய்யப் பயன்படுகிறது.
* முதன்முதலில் டைப்ரைட்டர் டைப் செய்த எழுத்து W .
* பெருக்கலுக்கு X என்ற குறியை ஆதிரட் என்ற கிறிஸ்தவ மதகுரு பயன்படுத்தினார்.
* Y குரோமோசோம்களால் பெண்களுக்கு வழுக்கை விழுவதில்லை.
* Z என்பது மண்டலம் என்பதைக் குறிக்கும்.

Tuesday, May 13, 2014

நான் இதோடு நிறுத்திக்கிறேன்.


1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.
2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும்.
3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.
4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது.
5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி.
6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு.
7) வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க.
8) கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையா இருந்தாலும் 100 மதிப்பெண்.
9) பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.
10) ஒரு சினிமாவ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து
அதே பாணியில் படம் எடுப்பது.
11) பெற்றோர் பிறந்த நாள் தெரியாதவன், தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.
12) மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது.
14) கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.
15) அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி TV சேனல் ஆரம்பிப்பது.
16) பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.
17) நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது.
18) இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும்பணத்திற்காக சிசேரியன் செய்வது.
19) பரிட்சை எழுதாதவனுக்கு"பாஸ்" என்று தேர்வு முடிவு வருவது.
20) இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும்தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.
21) Ambulance உம் , காவல் துறையும் அழைத்ததும் வருமோ இல்லையோ pizza வருவது.
22) இலவசமா கிடைக்கற அரிசி தரமில்லாம இருக்கும், இலவசமா கிடைக்கற sim card credit (balance) oh da இருக்கும்.
23) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.
24) இட்லி ஒரு ரூபாய்க்கும் குடி தண்ணீர் 40 ரூபாய்க்கும் விற்கப்படுவது.
25) குடி தண்ணீருக்கு பஞ்சமுண்டு, சாரயத் தண்ணீருக்கு பஞ்சமில்லை.
26)மின்சாரம் தட்டுப் பாட்டிலும் AC பேருந்து நிறுத்தம் அமைக்கும் அளவிற்கு பெருந்தன்மை இருப்பது.
27) வடக்கே படிப்பவனுக்கு வேலு நாச்சியாரைத் தெரியாது, தெற்கே படிப்பவனுக்கு ஜான்சிராணி முதல் அனைவரையும் தெரிந்து இருப்பது.
28) சட்டசபை போவாங்க சட்டகிழிய சண்டை போடறதுக்கு மட்டும், அதுக்கு கூட முன்ன நாலு கார் பின்ன நாலு கார் கண்டிப்பா போகணும்.
29) இலவசங்களை காட்டி காட்டியே மக்களை அடிமைப் படுத்த நினைப்பது.
30) ஆ ஊ னா தற்கொலை பண்ணிக்கறது.
31) பதவியில் இருந்துக் கொண்டு தன் சொந்த விருப்பு வெறுப்புகளையும் அரசியல் ஆக்குவது.
32) நான்கு வாரங்களில் சிவப்பழகு, முடியால் மலையைக் கட்டி இழுக்கலாம் என்று மடத்தனமாக விளம்பரம் செய்வது...

இன்னும் நமக்கே நமக்குன்னு நிறைய இருக்கு.. நான் இதோடு நிறுத்திக்கிறேன்.

Sunday, February 16, 2014

பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல்.

1."கடன்காரான் " ஆவதை விட "பிழைக்கத் தெரியாதவன் " எவ்வளவோ மேல்.

2. "டை " கட்டிய பணக்காரனை விட "கை " கட்டாத ஏழை எவ்வளவோ மேல்.

3. "கெட்டவன் " ஆவதைவிட "கையாலாகாதவன் " எவ்வளவோ மேல்.

4. "வல்லவன் " ஆவதைவிட " நல்லவன் "எவ்வளவோ மேல்.

5. குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல்.

6. "காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல்.

7. புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ "வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன் " எவ்வளவோ மேல்.

8. மாதர் தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை "விட நெறி தவறாத "எறும்பு " எவ்வளவோ மேல்.

9. வெற்றிகளின் "கர்வங்களை " விட தோல்வியிலும் "நம்பிக்கை " எவ்வளவோ மேல்.

10. பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல்.

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்...

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்து விடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

Wednesday, January 1, 2014

பொழுது உபயோகமாகப் போகிறதா?

                  பள்ளி, கல்லூரி முடித்து வந்த பின்னரும், விடுமுறை நாட்களிலும் பொழுதுகளை கழிப்பது கடினமான செயலாக பதின் பருவத்தினரிடையே காணப்படுகிறது. ஒரே செயல்பாட்டை நாள் முழுவதுக்குமானதாக தொடர இளம் தலைமுறையால் முடிவதில்லை. புதியவற்றை அவர்கள் மனம் தேட ஆரம்பித்துவிடுகிறது. இதன் காரணமாக பொழுதை போக்குவதில் கூட குழப்பங்கள் ஏற்படுகிறது.


           இளம் பருவத்தினர் பாடங்கள் படிப்பதை தவிர்த்து மீதமான நேரத்தை எப்படி செலவழிப்பது என்பதில் தெளிவில்லாமலேயே இருக்கின்றனர். பொழுதை கழிப்பதற்காக முதலாவதாக இவர்கள் தேர்ந்தெடுப்படுப்பது தொலைக்காட்சியை, அடுத்ததாக கணினி விளையாட்டுகள், திரைப்படம் என தங்களுக்கு விருப்பமானதாக தெரியும் இவற்றை பயன்படுத்துகின்றனர். நண்பர்கள் இணைந்து திரைப்படம் பார்க்கிறார்கள் என்றால் திரைப்படம் முடிந்தவுடன், நண்பர்களுக்கிடையே ஒவ்வொருவரிடமிருந்தும் "அடுத்து என்ன செய்வது?, அங்கே போவதா?, இங்கே போவதா?" என்று கேள்விகள் எதிர்படுகின்றன. எங்கு போக வேண்டும் என்று சொன்னாலும், அது முதலில் தவிர்க்கப்பட்டு பின்னர் எதாவது இரு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கே திருப்தியில்லாமல் செல்லக்கூடிய நிலையே காணப்படுகிறது.

நேரத்தை எப்படி கழிப்பது என்று கூட தெரியாமல் அல்லது புரியாத தலைமுறைகளாக இந்தத் தலைமுறை வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தத் தலைமுறைக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததோ அல்லது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் சூழ்நிலைகளை கட்டமைக்கப்படாதது கூட காரணமாக இருக்கலாம். நேரத்தை எப்படி கழிப்பது? என்பதை சென்னையை கடந்து வெளியூர்களில் இருக்கும் நகரத்து குழந்தைகள் சமீப காலமாக உணர்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் மின்சாரம் இல்லாத நேரங்கள்.

ஏனென்றால், நேரத்தை செலவழிப்பதற்கு மின்சாரத்தால் இயங்கும் சாதனங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். இந்த வகை சாதனங்கள் நேரத்தை மட்டுமல்ல அறிவு வளர்ச்சிக்கும் பெரும் தடையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மின் மற்றும் மின்னணு சாதனங்கள் மனிதர்களுக்கு இடையே இடைவெளியையும், இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பில் பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தடுமாற்றங்களை சரி செய்ய வேண்டுமென்றால் மீண்டும் தடைகளை கடந்து வெளியேற வேண்டியது இருக்கிறது.

பொழுதை கழிக்கக்கூடிய நேரங்கள் அனைத்தும் உபயோகமானதாக இருக்கிறதா என்பதில் இளம் பருவத்தினர் கவனம் செலுத்துவதில்லை. ஒரு சில பெற்றோரும் "தங்கள் பிள்ளை தொந்தரவு செய்யாமல் இருக்கிறதே அதுவே போதும்" என்ற மனநிலையில் தான் இருக்கின்றனர். அவசியமில்லாததில் நேரத்தையும், மூளையையும் செலவிடும் இது போன்ற நிலையால், எதிர்கால சமூகத்தின் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் எனபதனை பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

நேரங்களை உபயோகமான முறையில் மேம்படுத்த நண்பர்களோடு தங்கள் முந்தைய காலத்தில் செய்த குறும்புகள், விளையாட்டுக்கள் ஆகியவற்றை ஓவ்வொருவரும் பகிர்ந்துகொள்வதே மிகச்சிறந்த பொழுதுபோக்காகும். மனம் தகவல்களை பரிமாறிக்கொள்ளும்போது உற்சாகத்தால் நிரம்பி வழிகின்றது. இரவு நேரமாக இருந்தால் வானத்தின் நிலவொளியில் உற்சாகமாக பேசலாம். மரங்கள் சூழ்ந்த பகுதியில் மோட்டார் வாகனங்களை தவிர்த்து கைவீசி பேசலாம். பறவைகளையும், கடல் அலையையும் ரசிக்கலாம். கடல் இல்லாவிட்டால் ஆற்றின் நீரோட்டத்தையும், குளத்தின் அமைதியையும் கண்டு உணரலாம். இயற்கை கணக்கில்லாத பாடங்களை நமக்கு கற்றுத்தர தயாராக இருக்கிறது. பாடங்கள் படிக்க தயாரா?