Monday, August 13, 2012

The most common lies women tell

The most common lies women tell

We’ve heard the lies that men tell women and now we think it’s about time the ladies came clean too; trust us, they don’t exactly come out smelling of roses. From lying about how many sexual partners they’ve had, to pretending they’re a dress size smaller than they actually are, the females have their fair share of fibs. Here’s the lowdown:

Lies women tell men 1: “I don’t know where it is! I haven’t touched it!”

Whether you’re a man or a woman reading this, you’re probably familiar with the scenario where she tidies up and suddenly his possessions go AWOL. On most of these occasions, the missing item mysteriously appears somewhere obscure, such as in her handbag (what could she possibly want with a beard trimming kit?). When questioned again as to how the missing item got there, she suddenly remembers that she put it there because it was making a mess around the house so she wanted to shove it somewhere out of sight. Men can’t seem to leave anything anywhere without it being swept up and taken elsewhere. If you’re going to move something ladies, at least remember where you moved it to and don’t tell the “I haven’t touched it!” lie to your man. Men know that they need a little help keeping the place clean every now and then, but what’s wrong with putting his things where he can see them? We rest our case. Oh wait, where did that case go? Anyone seen a case?

Lies women tell men 2: “No way! I love that too!”

Women have hobbies – granted. Why is it though, that whatever their love interest enjoys doing in his spare time, this is suddenly their favourite hobby too? A man could tell a woman something random like “I enjoy rock climbing with a purple crayon in my rucksack” and she’d say “no way! I love that too!” Ladies like their love interests to think there’s some sort of profound, deep-rooted connection that makes you love all the things they love and vice versa; this is more weird than impressive when they take it to the extreme though. Gents, next time a lady blatantly pretends to like something just so she can connect with you on guy level, take her to a boring match and snigger quietly into your chips as she struggles to hold her passionate smile in place for a moment longer.

Lies women tell men 3: “I wouldn’t change a thing about you”

When a woman says this, her pants are on fire. A woman might think that there’s nothing she would change about her man, but that’s until she realises his annoying habits and then compiles a dossier of her perfect man in her mind. If they wouldn’t change a thing about men then why do they nag their other half to clean up after themselves, have a shave, and stop leaving the toilet seat up? A woman may say that she loves these mannerisms because “that’s what makes you, you” (alongside all the other men in the world who share the same habits), but when they’re red in the face from yelling at their partner you realise they were just saying that they wouldn’t change anything about them out of politeness. Bless women for being so sensitive towards your feelings.

Lies women tell men 4: “I’ve not had many sexual partners”

When it comes to sexual partners, women are notorious for being economical with the truth. In fact, a recent survey published in the Journal of Sex Research states that a massive 68 per cent of women take a few notches off the bed post when asked about their past sexual encounters. Why? Because no matter how much we try to gloss over it, there is still a large amount of social stigma attached to women who have had their fair share of sexual partners and, with the derogatory labels used to define them, it’s no surprise that women would rather keep the truth to themselves. There’s a general rule of thumb that suggests that when a man says how many women he’s slept with, you should take three off to get an accurate number. For women, you add three on. In a society that has advanced as far as it has today, women should perhaps be treated equally to men, yet unfortunately they still feel pressured to tell porkies when this subject arises.

Lies women tell men 5: “I won’t get mad if you say I don’t look good in this dress”

Ahh this is an old classic. Women want the truth so that they know whether they can wear that dress or not, but when they’re told they look great, they never believe the poor worried man who just dished out this compliment. The reply is often something along the lines of “Great? I look great? Can you not see my muffin top?” When a man says “maybe you should change into something else”, suddenly he becomes the insulting bad guy who hates his other half’s body. This is the ultimate trap that most guys fall into at some point during their life. As soon as a man sees his partner changing into a new dress, he should run for the hills. Either that, or women should just say something along the lines of “tell me the truth or tell me a lie, either way I’ll be mad at you”, to give their partner a chance to hide.

Friday, August 10, 2012

பாதாம் பருப்பு பற்றிய தகவல் !

இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக
்கும்.

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.

பாதாம் பருப்பு சாப்பிட்டால், வேதிப்பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர். இதனால் செரிமாணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே செரிமாணப் பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.'

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.
மேலும் பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில்

பாதாமில் உள்ள சத்துக்கள்

பாதாமில் உள்ள புரதச்சத்து நல்ல தரமுள்ளது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது.
பாதாமில் உள்ள நார்ச்சத்து – 25 கிராமில் 3 கிராம். இந்த நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் நார்ச்சத்து. 80 சதவிகிதம் கரையாத நார்ச்சத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. இதனால் பாதாம் ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.
பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்தது. மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் பூரித கொழுப்பு குறைவு.

பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரஸ§ம் உள்ளன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் உள்ளன. இதில் கால்சியமும், பாஸ்பரஸ§ம் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது. உடலுக்கு தினசரி 15 மில்லி கிராம் விட்டமின் இ தேவை.

ஓட்ஸ், சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை ஏற்றாது. இதை பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.

பாதாமின் பயன்கள்

பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாய்யில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது. உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.

பாதாம் பால் தோலுரித்த பாதாமுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்த கலவை. பாலுடன் சேர்த்து பருக ஒரு சிறந்த பானம். ஆரோக்கியத்திற்கு நல்லது. பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது. பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.

ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள்
அதிகரிக்கப்படுகின்றன.

தொப்பை குறைக்க உதவும் அன்னாசிப்பழம் பற்றிய தகவல்


எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம் . பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்போது எல்லா நாடுகளிலும் உற்பத்தி ஆகிறது .

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்
படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது .

எல்லா பழங்களிலுமே இயற்கையாகவே அதிக சக்தியளிக்கும் தன்மை உண்டு.
100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது. அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு செரிமான சக்தி உண்டு

நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம்.இரத்தசோகை ,மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது என்றால் பாருங்களேன் இதன் சக்தியை .

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை இருக்காது .இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.....

தேகத்தில் போதுமான இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்து . நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அதன் பயன்களை நீங்களே அறிவீர்கள் .

அன்னாசிப் பழத்தில் ஜாம் , ஜூஸ், வற்றல் என்பன தயாரிக்கப்படுகிறது . அன்னாசி பாயாசம் ரொம்பவும் ருசியாக இருக்கும் . அன்னாசி பழம் சப்பிடாதோர் ஒருமுறை சாப்பிட்டு தான் பாருங்களேன் .

வீட்டுக்கு ஒரு வேம்பு

அருகிலேயே இருப்பதாலும் அதிகமாக கிடைப்பதாலும் இதன் அருமை பலருக்கு தெரிவதில்லை!

வீட்டுக்கு ஒரு வேம்பு வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது !!!

வீட்டு வாசலில் வேம்பு - நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் 'அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica).
அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும்

'அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.

வேப்ப மரத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி நம்மிடம் விவரித்தார் புதுச்சேரி சைதன்யா ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவமனையின் தலைமை சித்த மருத்துவர் ஆர்.கல்பனா.
'வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் 'கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.

இலை:

வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.
வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.

வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.

பூ:

வேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.
காய்: மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.
விதை: புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும்.
வேப்ப எண்ணெய்: வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

பட்டை:

வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.

பிசின்:

உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.

புண்ணாக்கு:

வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.